சர்வதேச மனித உரிமைகள் தினத்தில் தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் ஒரே மேடையில்.
.jpg)
மனித உரிமைகள் இல்லத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட மாபெரும் நிகழ்வு இன்றையதினம் யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்றபோதே தமிழ்க்கட்சிகளின் தலைவர்கள் ஒரே மேடையில் காட்சி தந்தனர். சமூகசேவைகள் மற்றும் சமூகநலத்துறை அமைச்சரும் ஈழமக்கள் செயலாளர் நாயகமுமான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தமிழரசுக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா மேலக மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் (புளொட்) தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் (பத்மநாபா) செயலாளர் சிறிதரன் தமிழர் விடுதலைக் கூட்டணி முக்கியஸ்தர் திரு சங்கையா யாழ். மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா யாழ். மாநகர சபை உறுப்பினரும் யாழ். மக்கள் பணிமனை தலைவருமாக மௌலவி சுபியான் ஆகியோரே ஒரே மேடையில் காட்சி தந்தனர். இதேவேளை ஐக்கிய தேசிய கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி ஜெயலத் ஜெயவர்த்தனவும் இந்நிகழ்விற்கு வருகை தந்திருந்தார்.
நிகழ்ச்சியை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய மனித உரிமைகள் இல்லத்தின் இயக்குனர் ஷெரீன் சேவியர் மனித உரிமைகள் குறித்த விளக்கத்தினை தெளிவாக எடுத்து விளக்கினார். எழும்பு யோசி நடைமுறைப்படுத்து எனும் தாரக மந்திரத்துடன் பாகுபாட்டை எதிர்ப்போம். அதை அதை இல்லாது ஒழிப்போம். இதுவே மனித உரிமையின் அடிப்படைத்தத்துவம் என்பதை தெளிவுபடுத்தினார்.
இதனைத்தொடர்ந்து அங்கு சமூகமளித்திருந்த தமிழ்க்கட்சிகளின் தலைவர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் தமது சிறப்புரைகளை நிகழ்த்தினார்கள். அதில் முறையே தமிழரசுக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா பொதுமக்களின் சுகாதாரத் துறை சார்பாக வைத்திய கலாநிதி ஜெயக்குமார் மேலக மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் மீள்குடியேற்றம் தொடர்பான மக்கள் சார்பாக திரு.நடராசா தமிழர் விடுதலைக் கூட்டணி முக்கியஸ்தர் திரு சங்கையா யாழ். மாநகரசபை முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா யாழ். மாநகரசபை எதிர்க்கட்சித் தலைவர் சட்டத்தரணி மு.றெமீடியஸ் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் (புளொட்) தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் விமான நிலைய விஸ்தரிபால் பாதிக்கப்பட்ட மக்கள் சார்பாக திரு க.சி.நடராஜா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் (பத்மநாபா) செயலாளர் சிறிதரன் யாழ். மாநகர சபை உறுப்பினரும் யாழ். மக்கள் பணிமனை தலைவருமாக மௌலவி சுபியான் யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றித் தலைவர் ஜெயறஞ்சித் சமூகசேவைகள் மற்றும் சமூகநலத்துறை அமைச்சரும் ஈழமக்கள் செயலாளர் நாயகமுமான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா என்ற வகையில் முக்கியஸ்தர்களின் சிறப்புரைகள் அமைந்திருந்தன.
மேலும் மனித உரிமைகள் இல்லத்தினால் வழங்கப்பட்ட மனித உரிமைகள் தினத்தினை ஒட்டிய சமாதானப் பாடலும் கலை இலக்கிய மன்றத்தினால் வழங்கப்பட்ட ஒற்றுமையினைக் குறித்த விழிப்புணர்வு நாடகமும் அங்கு இடம்பெற்றமை விசேட அம்சமாகும்.
மற்றொருபுறம் இந்நிகழ்வில் சமூகமளித்திருந்த அதிதிகளிடம் கேள்விகள் கேட்பதற்காக வருகை தந்திருந்த பார்வையாளர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருந்தது. எழுத்து மூலம் கேட்கப்பட்ட பல கேள்விகளுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உரிய பதில்களை தெளிவாக வழங்கினார். மேலும் அரசியல் உரிமைப் பிரச்சினைக்கான தீர்வு குறித்த கேள்விக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களும் திரு மாவை சேனாதிராஜாவும் ஒரே நேரத்தில் அருகருகே மேடையில் தோன்றி பதிலளித்தமை சிறப்பம்சமாகும்.
நிகழ்ச்சியின் இறுதியாக மனித உரிமைகள் இல்லத்தின் செயலாளர் திரு அருமைலிங்கம் அவர்கள் நன்றியுரை தெரிவித்ததுடன் இன்றைய நிகழ்வுகள் நிறைவுபெற்றன.








0 Response to "சர்வதேச மனித உரிமைகள் தினத்தில் தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் ஒரே மேடையில்."
แสดงความคิดเห็น