அப்பு! ராசா!! என்னையும் கொஞ்சம் கவனி மோனை.
.jpg)
.jpg)
மனித உரிமைகள் இல்லத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட மாபெரும் மனித உரிமைகள் தின நிகழ்வு இன்றையதினம் யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்று முடிவடைந்ததன் பின்னர் மண்டபத்திற்கு வெளியே ஈபிடிபி செயலாளர் நாயகம் தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் வந்தபோதே அங்கு நின்ற வயோதிப மாது மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தான் மிகவும் வறுமை நிலையில் வாழ்வதாக தெரிவித்த அந்த வயோதிப மாது கூட்டம் தொடங்கியதிலிருந்து வெளியே காத்திருந்ததாகவும் எப்படியும் தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் வெளியேவரும் போது சந்திக்க முடியும் என்று நம்பிக்கையுடன் காத்திருந்ததாகவும் தெரிவித்தார். வறுமை நிலையில் காணப்பட்ட அந்த வயோதிப மாதுவிற்கு ஆறுதல் கூறிய தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் உடனடியாக உணவு வழங்க ஏற்பாடு செயததுடன் ஒரு தொகை பணமும் வழங்கியமை குறிப்பிடத்தக்கது.
.jpg)
0 Response to "அப்பு! ராசா!! என்னையும் கொஞ்சம் கவனி மோனை."
แสดงความคิดเห็น