ஈரோஸ் அமைப்பு ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்க முடிவு

ஈரோஸ் எனப்படும் ஈழவர் ஜனநாயகக் கட்சி எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை ஆதரிக்கத் தீர்மானித்திருப்பதாக அக்கட்சியின் தலைவரும் மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினருமான இராஜநாதன் பிரபாகரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பிலுள்ள ஈரோஸ் அலுவலகத்தில் இது தொடர்பாக கருத்து வெளியிட்ட அவர், "தமிழ்பேசும் மக்களின் பிரச்சினைகளை நன்கு அடையாளம் கண்டவர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்கள். தமிழ்பேசும் மக்களின் பிரச்சினைகளை அவரால் மாத்திரமே தீர்க்க முடியும்.
சரத் பொன்சேகா ஓர் இராணுவத் தளபதி. அவருக்கு அரசியல் அறிவென்பது பூஜ்யம் தான். இத்தகைய ஒருவரால் ஜனநாயக காட்டை ஆட்சி செய்ய முடியாது. கிழக்கு மாகாண மக்கள் வாழ்வில் நிம்மதியை கொடுத்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கே தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும் என்றார்
0 Response to "ஈரோஸ் அமைப்பு ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்க முடிவு"
แสดงความคิดเห็น