நாவற்குளி மஹிந்தபுரம் வீட்டத்திட்ட மக்களுக்கு இரண்டாவது தொகுதியாக வீட்டு உரிமைப் பத்திரங்களை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் வழங்கினார்.
.jpg)
நாவற்குளி மஹிந்தபுரத்தில் முதல்கட்டமாக 65 பேர் வீட்டு உரிமைப்பத்திரங்களை பெற்றுக்கொண்ட நிலையில் இன்றையதினம் இரண்டாவது கட்டமாக மேலும் 24 பேர் தமது வீட்டு உரிமைப் பத்திரங்களை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடமிருந்து பெற்றுக்கொண்டனர்.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் யாழ். பணிமனையில் இன்று முற்பகல் தென்மராட்சியிலுள்ள சாவகச்சேரி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட நாவற்குளி மஹிந்தபுரம் வீட்டுத் திட்டத்தில் குடியமர்த்தப்பட்டுள்ள மக்களுக்குக் காணி உறுதிப்பத்திரம் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு 24 வீட்டு உரிமையாளர்களுக்கு உறுதிப்பத்திரத்தினை வழங்கி வைத்து உரை நிகழ்த்திய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அதிகார நலன்களைத் தக்கவைத்துக் கொள்வதற்காக மக்களைப் பலிகொடுக்கும் சுயநல அரசியல் கலாச்சாரத்திலிருந்து விடுபட்டு இன மத மொழி பேதமின்றி அனைத்துத் தரப்பினரதும் மேம்பாட்டிற்காகவே தாம் அயராது உழைத்து வருவதாகத் தெரிவித்தார்.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் பெருமுயற்சியினால் மீளமைக்கப்பட்ட மஹிந்தபுரம் குடியிருப்பில் நிலவும் ஏனைய அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தருமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைகளைச் செவிமடுத்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அக்கோரிக்கைகள் தொடர்பாகக் கவனத்தில் எடுப்பதாகத் தெரிவித்ததுடன் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பேசும் மக்களது முழுமையான ஆதரவு கிடைத்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் பதவிக்கு வரும் பட்சத்தில் அனைத்து மக்களது கோரிக்கைகளையும் நிறைவேற்றுவதே தமது கடமையாகும் எனத் தெரிவித்தார்.
கிடைக்கும் சந்தர்ப்பங்களைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதுடன் நடைமுறைச்சாத்தியமான வாய்ப்புகளைத் தேடிச் செல்வதிலும் நாம் அக்கறையுடன் செயற்பட வேண்டும் எனவும் கடந்த காலங்களில் தேடிவந்த சிறந்த வாய்ப்புகளைக் கைநழுவ விட்டதின் விளைவுகள் தான் இன்று நாம் அனைவரும் எதிர்கொண்டுள்ள பெரும் அவலத்திற்கான காரணம் என்பதை மக்கள் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்தார்.
இரத்தத்தைச் சூடேற்றி மக்களை வீதிக்கு இழுத்து விட்ட தமிழ் கூட்டமைப்பினர் மக்களை நிர்க்கதியில் கைவிட்டு வெளிநாட்டில் புகலிடம் தேடிக் கொண்டுள்ளதாகவும் தற்போது சரத் பொன்சேகாவின் வாக்குகளை இடைமறிப்பதற்காகத் தேர்தலில் குதிப்பதாக ஜனாதிபதியிடம் கூறிக் கொண்டு கூட்டமைப்பினர் மக்களின் முன்னால் வாக்குக் கேட்பதற்கு வரவுள்ளதாகத் தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் எமது போராட்டம் கொடுத்துள்ள அனுபவங்களை படிப்பினையாகக் கொண்டு தமிழ் பேசும் மக்களுக்கான சரியான அரசியல் தீர்வு கிடைக்கச் செய்வதே எதிர்கால வாழ்வு சிறப்படைவதற்கான சிறந்த வழிமுறையாக இருக்கும் எனவும் மேலும் தெரிவித்தார்.
தமக்கு ஆற்றிவரும் மகத்தான பணிகளுக்காக நாவற்குளி மஹிந்தபுரம் மக்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி கொரவித்தமை குறிப்பிடத்தக்கதாகும்
0 Response to "நாவற்குளி மஹிந்தபுரம் வீட்டத்திட்ட மக்களுக்கு இரண்டாவது தொகுதியாக வீட்டு உரிமைப் பத்திரங்களை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் வழங்கினார்."
แสดงความคิดเห็น