இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி மறுப்பு !!!

சிங்கள இசை ஆல்பத்தில் பணியாற்றியதாக தகவல்கள் வெளியானது. இது பொய்யான தகவல். நான் இசையமைத்த ‘தநா 07 அல 4777’ படத்தில் இலங்கை தமிழர் ஒருவரை பாடகராக அறிமுகப்படுத்தினேன் என்று இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறியதாவது,
இப்போது ‘வேட்டைக்காரன்’ படத்திலும் பிகே, தினேஷ் என்ற இலங்கை தமிழர்களை பாட வைத்திருக்கிறேன். இலங்கை தமிழர்கள் சிலர் எனது நண்பர்களாக உள்ளனர்.
அவர்கள் மூலம் இராஜின் என்ற சிங்கள இசைக் கலைஞர் அறிமுகம் ஆனார். இராஜின், பிகே, தினேஷ் உள்ளிட்டோர் சேர்ந்து இசை நிகழ்ச்சிகள் நடத்துகின்றனர். இராஜினை எனது படத்தில் கீபோர்ட் வாசிக்க பயன்படுத்தினேன்.
இவ்வாறு விஜய் ஆண்டனி கூறினார்.
0 Response to "இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி மறுப்பு !!!"
แสดงความคิดเห็น