சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு தமிழ்க் கட்சி தலைவர்கள் யாழில் மரம் நாட்டி வைத்தனர்.

இன்று காலை யாழ். முற்றவெளியில் நான்காவது உலகத் தமிழாராட்சி மாநாட்டில் உயிர்நீத்தோர் நினைவாலயத்தை சுற்றியதாக இம்மரம் நாட்டும் நிகழ்வு இடம்பெற்றது. இதில் முறையே சமூகசேவைகள் மற்றும் சமூகநலத்துறை அமைச்சரும் ஈழமக்கள் செயலாளர் நாயகமுமான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் திரு சங்கையா பொதுமக்களின் பிரதிநிதியாக திரு சந்திரகுமார் யாழ். மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் மனித உரிமைகள் இல்லத்தின் இயக்குனர் ஷெரீன் சேவியர் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் (பத்மநாபா) செயலாளர் சிறிதரன் மேலக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தமிழரசுக்கட்சி சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா ஆகியோரே மரக்கன்றுகளை நாட்டி வைத்தனர்.








0 Response to "சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு தமிழ்க் கட்சி தலைவர்கள் யாழில் மரம் நாட்டி வைத்தனர்."
แสดงความคิดเห็น