jkr

சுற்றுலாப் பயணக் கட்டுப்பாட்டை கனடா தளர்த்தியது

Flag Canada animated gif 120x90 நாட்டில் சமாதானச் சூழல் காணப்படுவதுடன், பாதுகாப்பு நிலவரம் சீரடைந்துள்ளதால் கனடா அரசாங்கம் இலங்கை தொடர்பாகப் பேணிவந்த சுற்றுலாப் பயணிகளுக்கான பிரயாணக் கட்டுப்பாடுகளைத் தளர்த்தியுள்ளது.

இது தொடர்பான அறிக்கையில்,

அவதானமாகப் பயணங்களை மேற்கொள்ளலாம் என்று கனடா அரசாங்கம் தெரிவித்துள்ள போதிலும், இங்கு வரும் அந்நாட்டுப் பிரஜைகள், இலங்கைக்குள் அநாவசியப் பிரயாணங்களைத் தவிர்த்துக் கொள்ளுமாறும் கூறியுள்ளது.

இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்துள்ள கொழும்பிலுள்ள கனடா தூதுவர் புரூஸ் லெவி, விடுதலைப் புலிகளுடனான தீவிர யுத்தம் முடிவுக்கு வந்ததை அடுத்து, இலங்கை புதிய யுகம் ஒன்றுக்குள் பிரவேசித்துள்ளதை இது எடுத்துக் காட்டுகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

புலம்பெயர் இலங்கையர்கள் மிகக்கூடுதலாக கனடாவில் குடியேறியுள்ள நிலையில், அதிக எண்ணிக்கையிலான கனேடிய மக்கள் இலங்கைக்கு வருவார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

கனேடிய பிரஜாவுமை பெற்ற அநேகமான இலங்கையர்கள், அவர்களது குடும்பத்தினரைச் சந்திக்கவும் முதலீடுகளை மேற்கொள்ளவும் இலங்கைக்கு வரலாமெனத் தாம் நம்புவதாகவும் லெவி கூறினார்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "சுற்றுலாப் பயணக் கட்டுப்பாட்டை கனடா தளர்த்தியது"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates