மேக்ஸிம் இதழில் மேக்ஸிமம் கவர்ச்சியில் சமீரா!!

மேக்ஸிம் இதழின் இந்த மாத கவர்ச்சி தேவதையாக ஜொலிப்பவர் அசல் நாயகி சமீரா ரெட்டி. ‘இந்த இதழைப் புரட்டும்போதே சூடு தாங்காமல் கைகள் பற்றி எரியும்… மூளை வெடித்துவிடும்’ என்ற பஞ்ச் லைனுடனும், படு கவர்ச்சியான சமீரா ஸ்டில்களுடனும் வந்துள்ளது மேக்ஸிம். இந்தப் பத்திரிகைக்கு இதுபோன்ற கவர்ச்சி போஸ்களை சமீரா தருவது இது முதல்முறை அல்ல. ஆனால் இந்த முறைதான் எப்போதுமில்லாத அளவு கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளாராம் சமீரா. சமீரா தவிர, தம்மாத்தூண்டு பிகினி உடையில் வலம் வரும் ஏராளமான கவர்ச்சிப் பெண்களின் படங்களும் இந்த இதழில் உடம்பெற்றுள்ளது. சமீரா ரெட்டி, தமிழில் வாரணம் ஆயிரம் படத்தில் அறிமுகமானார். இப்போது அஜீத்துக்கு ஜோடியாக அசல் படத்தில் நடித்து வருகிறார்.
0 Response to "மேக்ஸிம் இதழில் மேக்ஸிமம் கவர்ச்சியில் சமீரா!!"
แสดงความคิดเห็น