jkr
แสดงบทความที่มีป้ายกำกับ அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம แสดงบทความทั้งหมด
แสดงบทความที่มีป้ายกำกับ அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம แสดงบทความทั้งหมด

செனல்4 விவகாரம் தொடர்பான ஐ.நாவின் அறிக்கை விதிமுறைகளை மீறும் செயல்-ரோஹித்த போகொல்லாகம


செனல் 4 தொலைக்காட்சி வீடியோ படம் தொடர்பான விசாரணை அறிக்கையினை ஐ.நா.வின் விசேட அறிக்கையாளர் அல்ஸ்டன், இலங்கை அரசாங்கத்துடன் தொடர்பு கொள்ளாது வெளியிட்டமை இராஜதந்திர நடைமுறைகளை மீறும் செயலாகும் என்று வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம தெரிவித்துள்ளார்.

நீதிவிசாரணையற்ற கொலைகள்,தன்னிச்சையான மரணதண்டனை நிறைவேற்றங்கள் தொடர்பான ஐக்கியநாடுகள் விசேட அறிக்கையாளர் பேராசிரியர் பிலிப் அல்ஸ்ரன், சர்ச்சைக்குரிய சனல் 4 வீடியோ படம் தொடர்பாக விசாரணை செய்த 3 அங்கத்தவர் கொண்ட குழுவின் முடிவு குறித்து இலங்கை அரசாங்கம் பதிலளிக்கும் முன்னரே அதனை பகிரங்கப்படுத்திவிட்டார் என்று இலங்கை அரசாங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
செனல் 4 தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான காட்சிகள் உண்மையானவை என்பது நிரூபணமாகியுள்ளதாக அல்ஸ்டன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருந்தார். இது குறித்து நேற்று வெளிவிவகார அமைச்சில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கருத்து தெரிவித்த வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம, அல்ஸ்ரனின் செயல் இராஜதந்திர நடைமுறைகளை மீறுவதாக அமைந்தள்ளது என்று கூறியுள்ளார். நியூயோர்க்கில் வெளியிடப்பட்ட பகிரங்க அறிக்கை ஐக்கியநாடுகள் ஸ்தாபனத்தின் சகல நடைமுறைகளுக்கும் நீதி நியாய விதிமுறைகளுக்கும் முரணானது என்பதை விசேட அறிக்கையாளருக்கும் ஐக்கியநாடுகள் செயலகத்திற்கும் சுட்டிக்காட்டியுள்ளோம். இந்த விவகாரத்தை பகிரங்கப்படுத்துவதற்கு முன்னர், இலங்கை அரசாங்கத்தினால் உத்தியோகபூர்வ பதில் ஒன்றை அனுப்பிவைக்க அவகாசம் வழங்கும் வகையில் உரிய நடைமுறை பேணப்பட்டிருக்க வேண்டும்.
முதலில், சுயாதீன நிபுணர்களின் முடிவை பேராசிரியர் அல்ஸ்ரன் எமது அரசாங்கத்திற்கு அறிவிக்க வேண்டியதே சரியான நடைமுறையாகும். அதன் பின்னர், எதிர்கால நடவடிக்கை குறித்து தீர்மானிப்பதற்கு முன்னர், நிபுணர்களின் முடிவுக்கு பதிலளிக்க அரசாங்கத்திற்கு அவர் போதிய அவகாசம் அளித்திருக்க வேண்டும்.
வீடியோ காட்சியை பரிசோதனை செய்ய நியமிக்கப்பட்ட நிபுணர்களின் நிச்சய தன்மை குறித்தும் அவர்களது கண்டுபிடிப்பு குறித்தம் சந்தேகம் உள்ளது. நிபுணர்களின் கணடுபிடிப்பு பல பொருளை தருகிறது. உதாரணமாக, ஒரு நிபுணர் தம்மிடம் சமர்ப்பிக்கப்பட்ட வீடியோ முழுமையாக நம்பகமானது என்று உறுதிப்படுத்த முடியாது.
இலங்கையில் நடைபெறவிருக்கும் தேர்தலில் செல்வாக்கை பிரயோகிப்பதற்காக தமது நிபுணர்களின் கண்டுபிடிப்பை விசேட அறிக்கையாளர் அலட்சியப்படுத்தியுள்ளார். எனவே, பேராசிரியர் அல்ஸ்ரனின் அவசரம், விவகாரத்தை பகிரங்கப்படுத்தும் எண்ணம், நடைமுறையையும் அவரது நிபுணர்களின் அபிப்பிராயத்தையும் அலட்சியப்படுத்தல் ஆகியன அவர் எமது நாட்டின் மீதும் நடைபெற இருக்கும் தேசிய தேர்தல்கள் மீதும் குறிவைக்கிறாரா என்ற சந்தேகத்தை தருகின்றன.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

இலங்கை-இந்திய வெளிவிவகார அமைச்சர்கள் சந்திப்பு


இலங்கையின் வடக்கே மோதல்கள் காரணமாக இடம்பெயர்ந்த மக்களை மீண்டும் அவர்களுடைய சொந்த இடங்களில் குடியமர்த்தும் பிரச்சனை குறித்து வெளிவிவகார அமைச்சர் ரோஹிகித போகொல்லாகமவுடன் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா ஆலோசனை நடத்தியுள்ளார்.

மியான்மர் நாட்டில் பல்துறை, தொழில்நுட்ப, பொருளாதார கூட்டமைப்புக்கான வங்காள விரிகுடா அமைப்பின் 12ஆவது அமைச்சர்கள் நிலையிலான கூட்டம் நடைபெற்று வருகிறது.

இதில் பங்கேற்க ரோஹிகித போகொல்லாகம , எஸ்.எம்.கிருஷ்ணா ஆகியோர் மியானமார் சென்றுள்ளனர். அப்போது இருவரும் சந்தித்துப் பேசினர்.

இதன் போது இலங்கையில் மோதல்கள் காரணமாக இடம்பெயர்ந்த தமிழர்களை மீண்டும் குடியமர்த்தும் பணியில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து ஆலோசிக்கப்பட்டதுடன், தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்துவது குறித்தும் பேசப்பட்டதாகத் தெரியவருகிறது.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

பொதுநலவாய மாநாட்டுக்கான அங்கீகாரம் மஹிந்தவின் தலைமைத்துவத்துக்கான பரிசு-வெளியுறவு அமைச்சர் போகொல்லாகம பெருமிதம்


2013 ஆம் ஆண்டில் பொது நலவாய நாடுகளின் மாநாட்டினை இலங்கையில் நடத்துவதற்கு எமக்குக் கிடைத்த அங்கீகாரமானது, கடந்த மூன்று தசாப்த காலமாக இலங்கையில் தலைவிரித்தாடிய பயங்கரவாதத்தை ஒழித்துக்கட்டுவதில் எமது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ செலுத்திய சிறந்த தலைமைத்துவத்துக்குக் கிடைத்த பரிசாகும் என்று வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம தெரிவித்தார். கடந்த மாதம் ட்ரினிடாட் டுபெகோவில் இடம்பெற்ற பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் கலந்து கொண்டு அங்கு ஆராயப்பட்ட விடயங்கள் தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு விளக்கப்படுத்தும் செய்தியாளர் சந்திப்பு நேற்று திங்கட்கிழமை முற்பகல் கொழும்பிலுள்ள வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் இடம்பெற்றபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அமைச்சர் தொடர்ந்தும் உரை நிகழ்த்துகையில்,

இலங்கையின் அரசியல் வரலாற்றில் முதன்முதலாக எதிர்வரும் 2013 ஆம் ஆண்டு பொதுநலவாய நாடுகளின் மாநாடு எமது நாட்டில் நடைபெறவுள்ளது. இலங்கை இந்த மாநாட்டை நடத்துவதற்கு பொருத்தமான நாடாக இருப்பதனாலேயே இதற்கான இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2011 ஆம் ஆண்டு நடத்தும்படி முதலில் கோரிக்கை விடுத்த போதிலும் இலங்கையில் மனித உரிமை மீறல் இடம்பெற்றதாகவும் அதனால் அதற்கு தாம் ஆதரவு வழங்க முடியாதெனவும் அவுஸ்திரேலிய மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகள் எதிர்ப்புத் தெரிவித்திருந்தன.

எனினும் அதற்கு நாம் பதிலாக நாம் ஒரு போதுமே குடி மக்களுக்கு எதிராக யுத்தத்தினையோ அல்லது இன வன்முறைகளிலோ ஈடுபடுவில்லையெனவும் நாம் தொடுத்த போரானது புலிப் பயங்கரவாதிகளுக் எதிராகவேயன்றி பொதுமக்களுக்கானது அல்ல என்பதை ஆணித்தரமாக வலியுறுத்தியிருந்தோம். அதன்படி 2011 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவிலும் 2013 ஆம் ஆண்டில் இலங்கையிலும் 2015 ஆம் ஆண்டில் மொரீஷியஸ் நாட்டிலும் நடத்துவதற்கு ஏகமனதாக தீர்மானம் எடுக்கப்பட்டது.

அந்த வகையில் எதிர்வரும் 2013 ஆம் ஆண்டில் இலங்கையில் இடம்பெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் 53 உறுப்பு நாடுகளின் முக்கிய பிரதிநிதிகள் கலந்து கொள்ளவுள்ளனர்.

பொதுநலவாய நாடுகளில் ஆபிரிக்கா, ஆசிய, பசுபிக், கரிபியன் தீவுகள், தெற்காசியா உட்பட மேலும் பல பிராந்திய நாடுகள் அங்கம் வகிக்கின்றன. இம்முறை மாநாட்டில் கால நிலை மாற்றம், உறுப்பு நாடுகளில் பயங்கரவாதத்தினை ஒழித்துக் கட்டல், ஜனநாயகத்தை நிலைநாட்டுதல், பொருளாதார மேம்பாடு இளைய தலைமுறையினருக்கான எதிர்காலம் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டன. இலங்கை ஏனைய நாடுகளுடன் சிறந்த நட்புறவினைப் பேணி வரும் நாடு. இதனை பொதுநலவாய நாடுகளும் ஏற்றுக் கொண்டன. இப்போது எமக்குக் கிடைத்த இந்த வெற்றியினை எம்மவர்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். வெளிநாடுகளில் உள்ள வர்த்தக பிரமுகர்கள் இங்கு வந்து வர்த்தகத் துறையில் ஈடுபடவும் புதிய புதிய முதலீடுகளில் இறங்கவும் இங்கு கதவுகள் திறந்து விடப்பட்டிருக்கின்றன.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

தகவல்களை பொன்சேகா வழங்குவதற்கோ அமெரிக்க கோருவதற்கோ உரிமையில்லை: அரசாங்கம்


- அரசாங்கத்தின் அனுமதியின்றி மூன்றாம் தரப்புக்கு தகவல்களை வழங்குவதற்கு கூட்டுப்படைகளின் பிரதானி ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு சட்ட ரீதியாக எவ்விதமான அனுமதியும் இல்லை என்பதுடன், தகவல்களை கோருவதற்கு அமெரிக்காவுக்கு எவ்விதமான உரிமையும் கிடையாது என அரசாங்கம் நேற்று திங்கட்கிழமை திட்டவட்டமாக அறிவித்துள்ளது. அமெரிக்காவினால் தவறான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதனால் அவ்வழைப்பை வாபஸ் பெற்றுக் கொள்ளுமாறு அமெரிக்க அரசாங்கத்திற்கு உடனடியாக அறிவிக்குமாறு இலங்கைக்கான அமெரிக்க தூதுவரூடாக அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் சரத்பொன்சேகா தொடர்பிலான தகவல்களை பெற்றுக்கொள்ளும் தகவல் மூலமாக அமெரிக்க ஜெனரல் சரத்பொன்சேகாவை பயன்படுத்துவதற்கு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக வெளியான செய்திகளையடுத்து இலங்கைக்கான அமெரிக்க தூதுவரை வெளிவிவகார அமைச்சுக்கு அழைத்து மேற்படி விடயம் தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை தெளிவுப்படுத்தியதன் பின்னர் விசேட ஊடகவியலாளர் மாநாடொன்றை நடத்தியது.

வெளிவிவகார அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று திங்கட்கிழமை மாலை நடைபெற்ற இந்த விசேட ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

"அமெரிக்காவுக்குத் தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொண்டுள்ள கூட்டுப்படைகளின் பிரதம அதிகாரி ஜெனரல் சரத் பொன்சேகாவை தகவல்களை தெரிந்கொள்ளும் பொருட்டே அமெரிக்கா பயன்படுத்துவதற்கு முயற்சிக்கின்றது. பாதுகாப்பு அமைச்சின் செயலளார் கோத்தபாய ராஜபக்ஷவுக்கு எதிரான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் தொடர்பிலான தகவல்களை பெற்றுக் கொள்வதற்கே முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. சிரேஷ்ட இராணுவ அதிகாரியான ஜெனரல் சரத்பொன்சேகாவுக்கு மூன்றாந்தரப்புக்குத் தகவல்களை வழங்குவதற்கு சட்டரீதியில் எவ்விதமான உரிமையும் இல்லை என்பதுடன் அமெரிக்காவினால் தகவல்களை கோரவும் முடியாது. ஜெனரல் சரத் பொன்சேகாவுடன் கடந்த 28 ஆம் திகதி தொøலபேசி கலந்துரையாடலை மேற்கொண்ட உள்நாட்டு பாதுகாப்பு அமைச்சு நாளை (4 ஆம் திகதி) நேர்காணல் ஒன்றுக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளது. அவ்வழைப்பு தவறாது என்றும் அதனை உடனடியாக நிறுத்துமாறும் இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாட்டை உடனடியாக அமெரிக்க அரசாங்கத்திற்கு அறிவிக்குமாறும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவரிடம் கேட்டுக்கொண்டுள்ளேன்.

கூட்டுப்படைகளின் பிரதம அதிகாரி சரத் பொன்சேகா இலங்கை படைகளின் உயர்நிலை அதிகாரியாவார். அவரை தகவல் பெற பயன்படுத்துவதற்கு முயற்சிப்பது இலங்கையின் இறைமைக்கு எதிரான செயற்பாடாகும்" என்றார்.

இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு அமைச்சர் பதிலளிக்கையில்,

கேள்வி; அமெரிக்க தூதுவரின் பதில் எவ்வாறு இருந்தது?

பதில்: கவனம் செலுத்தி ஒத்துழைப்பு நல்கினார்

கேள்வி: அமெரிக்க சட்டத்திட்டத்தின் பிரகாரம் ஜெனரல் சரத்பொன்சேகா தகவல்களை வழங்கமுடியுமா?

பதில்: நான் அமைச்சர். அரசாங்கத்திற்கும் அமைச்சரவையின் கூட்டுப்பொறுப்பிற்கும் கட்டுப்பட்டவன். அதேபோல் படையின் சிரேஷ்ட அதிகாரி முப்படைகளின் தளபதியான ஜனாதிபதிக்கு மட்டுமே தகவல்களை வழங்கமுடியும்.

கேள்வி: ஜெனரல் சரத் பொன்சேகா கிறீன் காட் ஹோல்டர் என்பதனால் அமெரிக்காவினால் விசாரிக்க முடியும் தானே?

பதில்: கிறீன் காட் ஹோல்டர் என்றாலும் அவர் இலங்கை பிரஜையாவார். எனது பைக்குள் கிறீன் காட் இருப்பதற்காக நான் அரசாங்கத்திகோ அமைச்சு பதவிக்கோ எதிராக செயற்படமுடியாது.

கேள்வி:/b> ஜெனரல் சரத் பொன்சேகா நேர்காணலில் பங்குபற்றுவரா?

பதில்:அதனை அவரிடமே கேட்க வேண்டும் அமெரிக்காவிலுள்ள இலங்கைத் தூதுவருக்கு இது தொடர்பில் தெளிவுப்படுத்தியுள்ளோம்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS
Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates