jkr
แสดงบทความที่มีป้ายกำกับ அரசாங்கம் แสดงบทความทั้งหมด
แสดงบทความที่มีป้ายกำกับ அரசாங்கம் แสดงบทความทั้งหมด

ஜனவரி முதல் அரச ஊழியர்களுக்கு 5250 ரூபா ஒய்வூதியர்களுக்கு 2375 ரூபா அதிகரித்த கொடுப்பனவு


ஓய்வூதியம் பெறுவோருக்கு 2375 ரூபா அதிகரித்த கொடுப்பனவை வழங்குவதுடன் அரச ஊழியர்களுக்கு 5250 அதிகரித்த கொடுப்பனவை வழங்க அரசாங்கம் முன்வந்துள்ளது.

அத்துடன் அதிகரித்துள்ள வாழ்க்கைச் செலவினங்களைக் கவனத்தில் கொண்டு நாட் சம்பளம் பெறும் ஊழியர்களுக்கு 175 ரூபா வழங்கும் வகையில் அரச நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு இதற்கான சுற்று நிருபமொன்றையும் வெளியிட்டுள்ளது.

ஜனவரி முதல் வழங்கப்படவுள்ள இவ் அதிகரித்த கொடுப்பனவுகளை அனுப்பிவைப்பதற்கான ஒழுங்குகளை மேற்கொள்ளுமாறு அமைச்சின் செயலாளர் டி.திஸாநாயக்க அனைத்து திணைக்கள தலைவர்களையும் கேட்டுக்கொண்டுள்ளார்.

மோதல்கள் இடம்பெற்று வந்த காலப் பகுதியைத்; தொடர்ந்து அத்தியாவசியப் பொருட்களுக்காக அறிவிக்கப்பட்ட அதிகரித்த விலைகளால் கணிசமான மக்கள் தமக்கான அத்தியாவசிய நுகர்வுக்கான வாய்ப்புக்களை இழந்திருந்தமை யாவரும் அறிந்ததே.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைப்பு


அத்தியாவசிய நுகர்வுப் பொருட்கள் சிலவற்றின் மொத்த விற்பனை விலைகள் இன்று நள்ளிரவு 12 மணியுடன் குறைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இது தொடர்பாக தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் மாநாடு நுகர்வோர் சேவைகள் விவகார அமைச்சர் பந்துல குணவர்தனவின் தலைமையில் இன்று கொழும்பில் நடைபெற்றது.

செய்தியாளர் மாநாட்டில் புறக்கோட்டை மொத்த விற்பனையாளர்கள் சங்கத்திற்கும் நுகர்வோர் விவகார அமைச்சிற்கும ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டது.

ஆறு மாதங்களுக்கு மாத்திரமே செல்லுப்படியாகும் இந்த ஒப்பந்தம் முதல் 3 மாத காலத்திற்கு பின்னர் உலகச் சந்தையில் விலை தளம்பலுக்கேற்ப மீள்பரிசீலனை செய்யப்படும் என நுகர்வோர் விவகார அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

சீனி, மைசூர்பருப்பு, பெரியவெங்காயம், சிறியவெங்காயம், உருளைகிழங்கு, வெள்ளைப்பூடு, பால்மா, ரின்மீன், செத்தல் மிளகாய் மற்றும் பாஸ்மதி அரசி ஆகியவற்றின் மொத்த விற்பனை விலைகளே இன்று நள்ளிரவுடன் குறைக்கப்படவுள்ளன.

இதன்படி, சீனி கிலோ ஒன்றின் மொத்த விலை 80 ரூபாவாகவும், மைசூர்பருப்பு கிலோ ஒன்றின் மொத்த விலை 140 ரூபாவாகவும், பெரிய வெங்காயம் கிலோ ஒன்றின் மொத்த விலை 65 ரூபாவாகவும், சிறிய வெங்காயம் கிலோ ஒன்றின் மொத்த விலை 75 ரூபாவாகவும், உருளைக்கிழங்கு கிலோ ஒன்றின் மொத்த விலை 65 ரூபாவாகவும் குறைக்கப்படவுள்ளன.

அத்துடன் செத்தல் மிளகாய் கிலோ ஒன்றின் மொத்த விலை 195 ரூபாவாகவும், வெள்ளைப்பூடு கிலோ ஒன்றின் மொத்த விலை 206 ரூபாவாகவும், 400 கிராம் பால்மா பக்கெட் ஒன்றின் மொத்த விலை 225 ரூபாவாகவும், ரின்மீனின் மொத்த விலை 149 ரூபாவாகவும், பாஸ்மதி அரசி கிலோ ஒன்றின் மொத்த விலை 85 ரூபாவாகவும் புறக்கோட்டை மொத்த விற்பனை நிலையத்தில் நுகர்வோர் பெற்றுக் கொள்ள முடியும் என அமைச்சர் தெரிவித்தார்.

இதேவேளை, இந்த பொருட்களுக்கான சில்லறை விலைகள் எதிர்வரும் வியாழக்கிழமை நள்ளிரவு 12 மணியுடன் அமுலுக்குவரும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

நாட்டிலுள்ள அனைத்து கூட்டுறவு மொத்த விற்பனை நிலையங்களில் ஒரு கிலோ சீனி 84 ரூபாவாகவும், ஒரு கிலோ மைசூர்பருப்பு 189 ரூபாவாகவும், ஒரு கிலோ பெரிய வெங்காயம் 84 ரூபாவாகவும், ஒரு கிலோ சிறிய வெங்காயம் 86 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS
Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates