jkr
แสดงบทความที่มีป้ายกำกับ இந்தோனேசியா แสดงบทความทั้งหมด
แสดงบทความที่มีป้ายกำกับ இந்தோனேசியா แสดงบทความทั้งหมด

நெஞ்சை உலுக்கும் காட்சிகள் - இந்தோ.மெராக் துறைமுக இலங்கை அகதிகள் விடயத்தில் சர்வதேசத்தின் பாராமுகம் ஏன்?

அகதி அந்தஸ்து கோரி அவுஸ்திரேலியா நோக்கி பயணிக்கையில் இந்தோனேசிய கடற்படையினரால் சர்வதேச கடற்பரப்பில் கடந்த 11-10-2009 அன்று கைது செய்யப்பட்டு மெராக் துறைமுகத்தில் இன்றுடன் 100 வது நாளாக தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழ் அகதிகள் விடயத்தில் சர்வதேசத்தின் பார்வை அருகிவருவதாகவே தெரிகின்றது.

நிறைமாத கர்ப்பிணிப் பெண், குழந்தைகள் மற்றும் பெண்கள் உள்ளடங்கலாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அகதிகள் எதிர்நோக்கும் நடைமுறை பிரச்சினைகளையும் துன்பியல் வாழ்வினையும் ஆதார பூர்வமாக ஊடகங்கள் மூலமாக எடுத்துக் காட்டியும் இந்தோனேசிய அரசோ, ஐக்கிய நாடுகள் சபையோ அல்லது சர்வதேச நாடுகளோ தங்கள் பரந்து பட்ட பார்வையினை இவர்கள் மீது செலுத்தாமல் இருப்பது ஏன்? என்று ஆதங்கப்படுகின்றார்கள்.

சொறி, சிரங்கு, வயிற்றோட்டம் மற்றும் இதர நோய்த்தாக்கங்களிற்கு உட்பட்டு அனைத்து அகதிகளும் அல்லற்படுகின்ற அதேநேரத்தில் அதற்குரிய தகுந்த மருத்துவ சிகிச்சைகள் தொடர்ந்தும் மறுக்கப்பட்டு வருவதும் வருத்தத்திற்குரியது.

கடுமையான காலநிலை சீர்கேட்டாலும் அசாதாரண பேர் அலைகளாலும் அதிகப்படியாக உருக்குலைந்து போயிருக்கும் கப்பலும் எந்த நேரத்திலும் இவர்களை கைவிட்டுவிட
கூடிய சந்தர்ப்பமும் இருக்கின்றது. இன்றும் மூன்று அகதிகள் கடற்பரப்பில் கட்டுக்கடங்காத அலைகாரணமாக ஆடிக்கொண்டிருக்கும் கப்பலில் நிலை தடுமாறி விழுந்து காயப்பட்டிருக்கிறார்கள்.

இலங்கையின் சமகால யுத்த அரசியல் மற்றும் துன்பியல் நிகழ்வுகளை சர்வதேச சமூகமும் ஐக்கிய நாடுகள் உன்னிப்பாக அவதானித்து வருவதாக நம்பிக் கொண்டு,
அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் உயர் ஸ்தானிகராலயம் இவர்களுக்கு அகதி அந்தஸ்து வழங்கும் பட்சத்தில், இவர்களை ஐக்கிய நாடுகள் சபை பொறுப்பேற்க வேண்டும் என்றும்,

ஓசியானிக் வைக்கிங் கப்பலின் அகதிகளுக்கு அவுஸ்திரேலியாவும், இதர சர்வதேச நாடுகளும் இந்தோனேசிய அரசும் வழங்கிய தீர்வினை ஒத்ததான ஓர் தீர்வினை இவர்களுக்கு வழங்க வேண்டும் என்றும், இந்தோனேசிய வெளிவிவகார அமைச்சிற்கு அகதிகள் சார்பாக விடுக்கப்பட்ட செய்தியும் இந்தோனேசிய அரசால் கருத்திற் கொள்ளப்படவில்லை.

இந்நிலையில், இந்தோனேசியாவில் ஓர் ஹெய்டியோ அல்லது மீண்டும் ஓர் மெனிக்பாம் முகாமோ உருவாவதை சர்வதேசம் விரும்புகிறதா? என்ற அகதிகளின் கேள்வி நியாயமாகின்றது.


  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

தமிழ் அகதிகளின் கப்பலை சுற்றிளைத்தது ஒத்திகை என்கிறது இந்தோனேசியா :- கறுப்புநிற பொதிகளை கப்பலினுள் போட முனைந்தபோது அவற்றை மக்கள் திருப்பி எறிந்துள்ளனர்..

இந்தோனிசியா கடற்பரப்பில் தடுத்துவைத்துவைத்திருக்கும் தமிழர்கள் மீது இனந்தெரியாத 25 படகுகள் சுற்றிவளைக்கப்பட்டுள்ளதாகவும் அந்தபடகில் உள்ளவர்கள் இராணுவ உடை அணிந்துள்ளதாகவும் கப்பலில் இருக்கும் மக்கள் தெரிவித்துள்ளனர் தமிழ் அகதிகளின் கப்பலை சுற்றிளைத்தது ஒத்திகை..

இந்தோனேசியக் கடற்பரப்பில் தரித்து நிற்கும் ஈழ அகதிகளின் கப்பலை முற்றுகையிட்டது ஒரு ஒத்திகையாம் என இந்தோனேசிய அரச இணையங்கள் அறிவித்துள்ளன. குழந்தைகளும் பெண்களும் கப்பலில் நீண்ட நாள் தரித்து நிற்பதைக் கூட கருத்தில் கொள்ளாது, நடுச்சாம வேளையில் இவர்களைப் பயமுறுத்தும் விதத்தில் கப்பல் சுற்றி வளைக்கப்பட்டுள்ளது. இதனை நியாயப்படுத்தும் விதத்தில் இது ஒரு ஒத்திகை என அரசு அறிவித்திருப்பது, கேளிக்கைக்குரிய, மற்றும் கண்டிக்கத்தக்க விடயமாகும். காணொளி இணைப்பு

சில படகுகள் தங்களின் கப்பலுடன் இணைத்து. கயிற்றுடன் சேர்த்து கட்டப்பட்டதாகவும்அந்த படகில் இருந்து கறுப்பு நிற பாடசாலை பை ஒன்றை கப்பலுக்குள் போட முயற்சி செய்தபோதுதாங்கள் அந்த பையை இடைமறித்து அவர்களின் சிறிய படகுக்குள் தள்ளிவிட்ட தாகவும் அவர்கள் துப்பாக்கியை காட்டி மிரட்டிய போது எமது கப்பலில் உள்ளவர்கள் கத்தி குளறிய போது அவர்கள் கப்பலிலிருந்து விலகி சென்று இன்னுமோர் கடற்படை கப்பலுடன் இணந்து சுமார் 500மீட்டர் தொலைவில் தொடர்ந்தும் உள்ளார்கள் என்று கப்பலில் இருக்கும் மக்கள் அச்சத்துடன் தெரிவித்துள்ளனர்.

பிந்திய இணைப்பு:

தற்போது அந்த படகுகள் திரும்பி சென்றுவிட்டாதகா கப்பலில் இருந்த மக்கள் தெரிவித்துள்ளனர் மீண்டும் அந்த படகுகள் திரும்பி வரலாம் என்று மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

<<>


  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

ஓசியானிக் கப்பலிலிருந்து வெளியேறியோர் மூன்றாம் நாடு ஒன்றுக்கு மாற்றப்படும் சாத்தியம்


இந்தோனேசிய மற்றும் அவுஸ்திரேலிய அரசாங்கங்களின் உறுதிமொழிகளின் அடிப்படையில்,இந்தோனேசியாவில் தரித்திருந்த ஓசியானிக் வைக்கிங் கப்பலில் இருந்து வெளியேறிய 78 இலங்கையர்களும் மூன்றாம் நாடு ஒன்றுக்கு மாற்றப்படுவர் என இந்தோனேசியா அறிவித்துள்ளது.

" எமது நாட்டு எல்லையில் சட்டவிரோத குடியேற்ற வாசிகள் தங்குவதற்கு தொடர்ந்தும் இடமளிக்க முடியாது. இவர்களுக்கு விரைவில் மாற்று ஏற்பாடுகள் செய்துகொடுக்கப்படும்" என ஜகார்த்தாவிலுள்ள வெளிவிவகார விடயங்களுக்கான திணைக்களத்தின் பேச்சாளர் ரேகு பைசாயா தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவில் குடியமர்த்தப்படுவார்கள் என்ற உறுதிமொழியின் அடிப்படையில் தரையிறங்கிய இவர்கள் தற்போது இந்தோனேசியாவின் ரியூ தீவில் உள்ள டன்ஜுன் பினாங் முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் பேரவை அகதி அங்கீகாரத்தை வழங்காதுபோனால், அவர்கள் அனைவரும் இலங்கைக்கே திருப்பியனுப்பப்படுவர் என இந்தோனேசியா எச்சரித்துள்ளது.

இந்தநிலையில் இவர்களின் எதிர்காலம் குறித்து அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் பேரவை ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.

அவுஸ்திரேலியாவின், உறுதிமொழியை நம்பி 22 அகதிகள் முதலில் கப்பலில் இருந்து இறங்கினர். இதன் பின்னரே ஏனையோரும் தரையிறங்கினர். இதேவேளை 250 அகதிகளை கொண்டுள்ள இலங்கையர்களின் மற்றும் ஒரு கப்பல் இன்னமும் இந்தோனேசியாவில் தரித்து நிற்கிறது.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

அலெக்ஸ் உட்பட 130 இலங்கைத் தமிழர்களை நாடு கடத்த இந்தோனேசியா முடிவு


மேற்கு ஜாவாவில் கப்பலில் தவித்தபடி இருக்கும் 250க்கும் மேற்பட்ட இலங்கைத் தமிழர்களில் 130 பேரை நாடு கடத்த இந்தோனேசியா திட்டமிட்டுள்ளது. இந்தத் தமிழர்களின் செய்தித் தொடர்பாளர் போல செயல்படும் அலெக்ஸ் என்பவரையும் நாடு கடத்தப் போவதாக இந்தோனேசியா கூறுகிறது.
மலேசியாவிலிருந்து சிறிய கப்பல் மூலம் 255 தமிழர்கள் ஆஸ்திரேலியா நோக்கி வந்தபோது, இந்தோனேசிய கடற்படை தனது கடல் எல்லைக்குள் வைத்து அவர்களை மடக்கியது. பின்னர் அவர்களை மேற்கு ஜாவா தீவுக்குக் கொண்டு சென்றது.

அன்று முதல் அவர்கள் கப்பலிலேயே உள்ளனர். புகலிடம் குறித்த உறுதிமொழி அளிக்கப்படும் வரை கப்பலை விட்டு இறங்க மாட்டோம். மீறி வெளியேற்ற முயன்றால் மொத்தமாக தற்கொலை செய்து கொள்வோம் என அவர்கள் கூறி வருகின்றனர்.

இதனால் இழுபறி நிலை நீடித்து வருகிறது. இந்தத் தமிழர்களின் செய்தித் தொடர்பாளராக அலெக்ஸ் என்பவர் செயல்படுகிறார். ஆனால் இவர் ஆள் கடத்தலை மேற்கொள்பவர் என்று இலங்கை கூறி வருகிறது.

இந்த நிலையில் கப்பலை விட்டு இறங்க மறுக்கும் தமிழர்கள் பலரை, அதாவது 130 பேரை வலுக்கட்டாயமாக போர்க் கப்பலுக்கு ஏற்றி அவர்களை இலங்கைக்கு அனுப்பி வைக்க இந்தோனேசியா திட்டமிட்டுள்ளதாம்.

இதனால் பதட்டம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து இந்தோனேசிய பொலிஸ் அதிகாரி பசிதார் தம்புனான் கூறுகையில், கப்பலில் இருப்பவர்கள் அவர்களது நாட்டுக்கே அனுப்பி வைக்கப்படுவர் என்றார்.

இந்தோனேசிய குடியேற்றப் பிரிவு அதிகாரி கடோட் சுப்ரதோ கூறுகையில், அவர்களை நாடு கடத்துவது குறித்து இந்தோனேசிய வெளியுறவுத்துறை நடவடிக்கைளில் இறங்கியுள்ளதாக கூறினார்.

இதுதொடர்பாக சிங்கப்பூரில் நடைபெரும் ஆசியா பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டத்தில் பங்கேற்றுள்ள இந்தோனேசிய, ஆஸ்திரேலிய தலைவர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்படவுள்ளது.

கடைசியாக வெளியான தகவல்களின்டி ஐ.நா. வகுத்துள்ள அகதிகளுக்கான அடையாளங்கள் இல்லாதவர்களை கப்பலிலிருந்து அப்புறப்படுத்தி இலங்கைக்கு திருப்பி அனுப்பி வைக்க இந்தோனேசியா முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

இதற்கிடையே அலெக்ஸ் கனடாவில் பல வருடம் வசித்து வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அங்கு அவர் ஆள் கடத்தல் தொடர்பாக சிக்கி கைதாகி சிறைவாசம் அனுபவித்தவர் என்றும் கூறப்படுகிறது. அவரது உண்மையான பெயர் சஞ்சீவ் குகேந்திரராஜா என்று இலங்கை அரசு கூறுகிறது.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

புகலிடம் கோருவோரை அழைத்துச் செல்ல அவுஸ்திரேலியாவுக்கு ஒருவார காலக்கெடு- இந்தோனேசியா அறிவிப்பு


இந்தோனேசிய கடற்பரப்பிலுள்ள 78 இலங்கை அகதிகளை அங்கிருந்து அழைத்துச் செல்ல இந்தோனேசியா, அவுஸ்திரேலியாவுக்கு ஒருவாரகால அவகாசம் வழங்கியுள்ளது என்று இந்தோனேசிய வெளிவிவகார அமைச்சு பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். இரண்டு வாரங்களுக்கு முன்னர் அவுஸ்திரேலிய சுங்கக் கப்பல் ஒன்றினால் காப்பாற்றப்பட்ட மேற்படி அகதிகளின் விவகாரத்தினால்,ஆட்சிக்கு வந்து ஒரு வருடமே பூர்த்தி அடைந்த அவுஸ்திரேலிய பிரதமர் கெவின் மீது அரசியல் அழுத்தங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் அகதிகளை அவுஸ்திரேலியாவுக்கு அழைத்துச் செல்ல முடியாதென அவுஸ்திரேலியா கடந்த புதன்கிழமை வலியுறுத்திக் கூறியது. விசாரணைக்காக அகதிகள் இந்தோனேசியாவுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் என்றும் அது தொடர்பில் இந்தோனேசியாவுடன் உடன்படிக்கை செய்து கொள்ளப்பட்டுள்ளதாகவும் அந்நாடு தெரிவித்துள்ளது.

இது இவ்வாறிருக்க, இந்தோனேசியாவின் றியாவ் தீவிற்கு அருகில் அகதிகளுடன் சென்றுள்ள அவுஸ்திரேலிய ஓசானிக் வைக்கிங் கப்பல் நவம்பர் மாதம் 6ஆம் திகதி மட்டுமே அங்கு தரித்து நிற்க அனுமதிக்கப்படும் என்று இந்தோனேசிய வெளிநாட்டமைச்சு பேச்சாளர் ரேகு பெஸாஸயா நேற்று தெரிவித்துள்ளார். இந்த காலக்கெடுவுக்குள் அவர்கள் பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டும் அல்லது இந்தோனேசிய கடற்பரப்பிலிருந்து வெளியேறிவிட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளனர்.

இந்தோனேசிய வெளிநாட்டமைச்சர் மார்டி நதலேகாவா வியாழக்கிழமை ராய்ட்டர் செய்தி சேவைக்கு அளித்த பேட்டி ஒன்றில், இலங்கைத் தமிழ் அகதிகளை என்ன செய்வது என்பதை தீர்மானிப்பது அவுஸ்திரேலியாவை பொறுத்தவிடயம் என சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS
Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates