இராணுவத் தளபதி துமிந்த அமரசேகர வாகன விபத்தில் மரணம்

மடுவில் உள்ள 611ஆவது பிரிகேட் கட்டளைத் தளபதி துமிந்த அமரசேகர நேற்றுக் காலை நடந்த வீதி விபத்து ஒன்றில் உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இராணுவ வாகனத்தில் தம்புள்ள பகுதியை நோக்கிச் சென்றுகொண்டிருந்த வேளை இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
வீதியில் சொன்றுகொண்டிருந்த துமிந்தவின் வாகனம் ஒரு பொலிஸ் ஜீப்பை முந்த முயன்றபோது, திடீரென எதிரே வந்த வாகனத்துடன் மோதாமல் இருக்க சாரதி வாகனத்தை திருப்பியதாகவும், கட்டுப்பாட்டை இழந்த வாகனம் விபத்துக்குள்ளானதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
துமிந்த அமரசேகர குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக வைத்தியசாலை வட்டரங்கள் தெரிவித்தன.
துமிந்தவின் வாகனத்தில் பயணம்செய்த ஏனைய இராணுவ அதிகாரிகள் மூவரும், சாரதியும் பலத்த காயங்களுடன் குருநாகல் வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Read Users' Comments (0)