jkr
แสดงบทความที่มีป้ายกำกับ இலங்கைஇந்திய แสดงบทความทั้งหมด
แสดงบทความที่มีป้ายกำกับ இலங்கைஇந்திய แสดงบทความทั้งหมด

இலங்கை முகாம்களில் உள்ள அகதிகளை உடனடியாக மீள்குடியமர்த்த முடியாது-இந்திய வெளிவிவகார அமைச்சர் கிருஷ்ணா


இலங்கை முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள 2.5 லட்சம் தமிழர்களை அவர்களின் சொந்த இடங்களில் உடனடியாகக் குடியேறச் செய்யமுடியாது என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா தெரிவித்துள்ளார். பெங்களூரில் நடை பெற்ற செய்தியாளர் மாநõடடொன்றில் கலந்து கொண்டு பேசுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இலங்கை அகதிகள்தொடர்பில் மேலும் அவர் கூறுகையில், இலங்கை அகதிகளுக்கு இந்தியாவில் குடியுரிமை வழங்கவேண்டும் என்று தமிழக முதல்வர் கருணாநிதி கோரியுள்ளார் .இலங்கைத் தமிழர்கள் இரண்டரை இலட்சம் பேர் அங்குள்ள நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மறு வாழ்வு வழங்கும் படி இலங்கை அரசை வலியுறுத்தி கேட்டுள்ளோம். இலங்கையும் இதற்கு ஒப்புக்கொண்டுள்ளது. ஆனால் இதனை உடனடியாக செயற்படுத்த முடியாது..

இலங்கைத்தமிழர் வாழும் பகுதிகளில் பருவ மழை பெய்து வருகின்றது.மேலும் கண்ணி வெடிகளை அகற்றும் பணிகளும் நடை பெற்று வருகின்றன. இந்த பகுதிகளில் மீண்டும் குடி யேறலாம் என்று திருப்தி தெரிவிக்கும் பட்சத்திலேயே அவர்களின் குடியேற்றம் சாத்தியமாகும் என்றும் அவர் சொன்னார்
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

இலங்கைஇந்திய கடற்படையினர் இணைந்து கூட்டுப் பயிற்சி 300 வீரர்கள் பங்கேற்பு; கப்பல்களும் வருகை


இலங்கை இந்தியக் கடற்படையினர் இலங்கையில் மூன்று நாள் கூட்டுப்படைப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். "கெடெக்ஸ் 2009' என்ற பெயரில் இலங்கையின் மேற்குக் கடல் பகுதிகளில் நேற்று ஆரம்பமான இந்தக் கூட்டுப்பயிற்சி, நாளை வியாழக்கிழமை நிறைவடையவுள்ளன.

இந்தக் கூட்டுப்பயிற்சியில் இந்திய கடற்படை அதிகாரிகள் உள்ளடங்களாக 300 வீரர்களும் ஈடுபட்டுள்ளனர். அத்துடன் இந்திய கடற்படைக்குச் சொந்தமான ஐ.என்.எஸ்.ஷாதுல் மற்றும் இந்திய கரையோர பாதுகாப்புப் படைப் பிரிவுக்குச் சொந்தமான ஐ.சி.ஜீ.எஸ்.வருண ஆகிய இரு கப்பல்களும் பயிற்சிகளின் போது பயன்படுத்தப்படவுள்ளன. இதேவேளை இலங்கைக் கடற்படைக்குச் சொந்தமான சயுர மற்றும் சாகர ஆகிய இரு கப்பல்களும் போர்ப் படகுகள் மற்றும் அதிவேக தாக்குதல் படகுகளும் இதில் ஈடுபடுத்தப்படவுள்ளன.

இந்தப் பயிற்சிகளில் இலங்கைக் கடற்படையினருக்கு மேலதிகமாக திருகோணமலையில் அமைந்துள்ள கப்பல் மற்றும் சமுத்திர விஞ்ஞான பீடத்தில் பயிற்சி பெற்றுவருபவர்களும் கலந்துகொள்ளவுள்ளனர். இந்நிலையில் குறித்த பயிற்சியில் ஈடுபடுத்தப்படவுள்ள இந்தியக் கப்பல்கள் நேற்று முன்தினம் கொழும்பு துறைமுகைத்தை வந்தடைந்தன. அத்துடன் கூட்டுப் பயிற்சியில் ஈடுபடுவதற்காக இலங்கைக்கு வருகை தந்த இந்திய கடற்படை அதிகாரிகள் இலங்கை கடற்படை சிரேஷ்ட அதிகாரிகளைச் சந்தித்து பயிற்சிகளை முன்னெடுப்பது தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடியுள்ளனர்.

இது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு கூறியதாவது :

இந்திய கடற்படைக் கப்பல்களில் இலங்கை கடற்படை அதிகாரிகளுக்கு பயிற்சி வழங்குவதையும் அதன் மூலமாக கப்பல்களின் செயற்பாட்டுகள் தொடர்பான அறிவைப் பகிர்ந்துக் கொள்வதும் அதனைப் பலப்படுத்துவதும் இந்த பயிற்சித் திட்டத்தின் நோக்கமாகிறது. இதற்குப் பிரதி உபகாரமாக இந்தியக் கடற்படையினர் இலங்கை முப்படைகளினதும் இராணுவ பயிற்சி நிலையங்களின் செயற்பாடுகளை பரீட்சயமடைவதற்கு வாய்ப்பு வழங்கப்படுகின்றது.

அத்துடன் இரு நாடுகளுக்குமிடையிலான இந்த கூட்டுப் படைப் பயிற்சியை மேலும் பலப்படுத்தும் முகமாக இலங்கையிலுள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த, கலாசாரப் பின்னணியைக் கொண்ட இடங்களுக்கு சென்றுப் பார்வையிடுவதற்கு சந்தர்ப்பம் கிடைக்கின்றது. தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் கூட்டுப்படைப் பயிற்சி இரு நாடுகளின் கடற்படையினருக்கம் இடையில் காணப்படும் பரஸ்பர ஒத்துழைப்பினையும் இரு அயல் நாடுகளுக்குமிடையிலான நீண்ட கால இருபக்க உறவுகளையும் பிரதிபலிக்கின்றது.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS
Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates