jkr
แสดงบทความที่มีป้ายกำกับ உதய நாணயக்கார แสดงบทความทั้งหมด
แสดงบทความที่มีป้ายกำกับ உதய நாணயக்கார แสดงบทความทั้งหมด

ஜெனரல் சரத்துக்கு வழங்கப்பட்ட அனைத்துப் பாதுகாப்பும் நீக்கம் : உதய


ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு இதுவரை வழங்கப்பட்டிருந்த இராணுவப் பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளதாகவும் அவருக்கு வழங்கப்பட்டிருந்த வாகனங்களை மீளளிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் இராணுவப் பேச்சாளர் உதய நாணயக்கார எமது இணையத்தளத்துக்குத் தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தல் நிறைவடைந்துள்ளதையடுத்து எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவின் பாதுகாப்புக் குறித்து நாம் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

நேற்று புதன்கிழமை மாலை முதல் பொன்சேகாவுக்கு வழங்கப்பட்டிருந்த இராணுவப் பாதுகாப்பு அகற்றப்பட்டது. இராணுவத்திலிருந்து விலகிச் சென்று அவருடன் இருந்த ஒன்பது இராணுவ வீரர்கள் தற்போது இராணுவக் கட்டுப்பாட்டில் இருக்கிறார்கள்.

ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு வழங்கப்பட்டிருந்த கவச வாகனங்கள் உள்ளிட்ட பாதுகாப்பு வாகனங்களை மீளளிக்குமாறு கேட்டபோதும் இன்று நண்பகல் வரை அவை கையளிக்கப்படவில்லை என்றார்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

யாழ்.குடாவில் நாளை நள்ளிரவு முதல் ஊரடங்கு முற்றாக நீக்கம் : உதய நாணயக்கார


யாழ். குடா நாட்டில் நாளை நள்ளிரவு முதல் ஊரடங்கு முற்றாக நீக்கப்படும் என இராணுவப் பேச்சாளர் உதய நாணயக்கார தெரிவித்தார்.
தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் இன்று பிற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இத்தகவலை வெளியிட்டார்..

இதுவரை காலமும் நள்ளிரவு 12.00 மணிமுதல் அதிகாலை 4.00 மணிவரை யாழ். குடாநாட்டில் ஊரடங்கு அமுலில் இருந்து வந்தமை குறிப்பிடத்தக்கது.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

மக்களுக்கு அத்தியாவசிய சேவையாற்ற நாம் எப்போதும் தயார் : இராணுவப் பேச்சாளர்


இராணுவத்தினரின் கடமை யுத்தம் செய்வது மட்டுமல்ல என்றும் பொதுமக்களின் நலனுக்காக சேவை செய்வதற்கு இராணுவத்தினர் எப்போதும் தயாராக இருப்பதாகவும் இராணுவ பேச்சாளர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார்.

தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

"நாட்டில் வேலைநிறுத்தப் போராட்டம் மேற்கொள்ளப்படவுள்ளதாக சில தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. போராட்டங்களின் போதல்லாமல் எந்த வேளையிலும் அதற்கான சவாலை ஏற்றுக் கொண்டு எந்தத் துறையிலும் கடமையாற்றுவதற்கு எமது இராணுவத்தினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

நாம் பொதுமக்களின் நன்மைக்காகவே கடமையாற்றிக் கொண்டிருக்கிறோம். மக்களின் நலனை அடிப்படையாகக் கொண்டே எமது சேவைகளும் அமைகின்றன. அதற்கான தேவை ஏற்படும் வேளையில் அதனை எமது படையினர் சரிவர செய்வர்" என இராணுவப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS
Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates