jkr
แสดงบทความที่มีป้ายกำกับ சுவிஸ் แสดงบทความทั้งหมด
แสดงบทความที่มีป้ายกำกับ சுவிஸ் แสดงบทความทั้งหมด

"வேட்டைக்காறன்" சூடு சுறணையின்றித் தமிழன் பார்த்து ரசிப்பானா? பிய்ந்த செருப்பால் அடிப்பானா?: சுவிஸ் இளையோர் பேரவை


வேட்டைக்காறன்: ஊடக அறிக்கை
தமிழ் இளையோர் பேரவை - சுவிஸ்

தமிழனை வேட்டையாடியவர்களுடன் கொண்டாடி மகிழ்பவர்கள் தயாரிப்பில் வேட்டைக்காறன். சூடு சுறணையின்றித் தமிழன் பார்த்து ரசிப்பானா? பிய்ந்த செருப்பால் அடிப்பானா?
எமது அன்புக்கும் மதிப்புக்குமுரிய புலம்பெயர் தமிழ் மக்களே. வருகின்ற 18,ஆம் திகதியில் இருந்து வேட்டைக்காறன்; எனும் திரைப்படம் ஜரோப்பா, கனடா எங்கும் திரையிடப்படுவதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். உங்களுடைய பொளுதுபோக்கை தடுக்கும் நோக்கத்துடன் உங்கள் பாசத்துக்குரிய தேசப்பற்றுள்ள பிள்ளைகளாகிய நாம் இவ் பகீரங்க அறிவிப்பை கோரி நிக்கவில்லை.

மாறாக உங்களது பொளுதுபோக்கு எமது இனஅழிக்கக் காரணமாக இருந்துவருபவர்களுக்கு வருமானம் பெற்றுக்கொடுப்பதையே எம்மால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. நினைத்துப்பாருங்கள் மே 18 ஐ. எம் உறவுகளின் இரத்த ஆறு ஓடியபோது, கிழிந்து தொங்கிய உடல் உறுப்புக்களுடன் எவருமே எம்மைக் காப்பாற்ற வரமாட்டாரா என்று கதறியபோது தமிழகத்தின் அமாவாசை கருனாநிதி தனது கதிரை மோகத்தில் எமது உறவுகளைக் கைகழுவி விட்டான். எமது உறவுகளின் பிணங்களின் மெல் சிம்மாசனமிட்டிருந்தான். இச் சதிகாறக்குடும்பத்தின் நிறுவனமான சன் நிறுவனத்தின் தயாரிப்பில் வெளிவரும் இத்திரைப்படத்தை மானமுள்ள இத் தமிழ்ச்சாதி பார்க்குமா? எமது தமிழக மீனவர்களைக் எப்பொளுது சீங்கள இனவெறியர்கள் கொல்லத் தொடங்கினார்களோ அப்பொளுதே தொலைந்தது இந்திய இறையாண்மை. அப்படி இல்லாத இறையான்மைக்காக தமிழரின் இறைச்சித் தசைகளை வேட்டையாடி கசாப்புக்கடை நடத்தியவர்களுக்கு அழிவாயுதம் கொடுத்த காங்கிரஸ் ஆட்சியின் கொள்கை வேட்டைக்காரன் இளையதளபதி என்பவருக்கு பிடித்துக்கொண்டுள்ளதாம். இனப்பற்றும், மண் பற்றும் உள்ள எமது தமிழ்ச்சமுதாயமே, ஆற்றலும் அறிவுமிக்க எமது இளையோர்களே இவ் அநியாயத்தைத் தட்டிக்கேளுங்கள். அது ஒருபுறமிருக்கு எம்மினத்தை வேட்டையாடி, எம் தாய்நாட்டை ஆக்கிரமித்து, தமிழ்த்தாயை மானபங்கப்படுத்தி;, எமது உறவுகளை சிறைப்பிடித்தவர்களுக்கு களைப்பாற்றிக் கூத்துப்போட இத்திரைப்படத்தின்; இசையமைத்துள்ள விஜய் அன்ரனி வெற்றிப்பாடலுக்கு இசையமைத்துக்கொடுத்துள்ளார். பாருங்கள் எமது அன்புக்கினிய உறவுகளே. ஒரு சதிகாறக் கும்பலே இத்திரைப்படத்தில் இணைந்துள்ளது. எம்மை வேட்டையாடியதாள் தான் வேட்டைக்காறன் என்று பேயர் சூட்டினார்களோ தெரியவில்லை. மொத்தத்தில் வேட்டைக்காரன் தமிழனை வேட்டையாடியவன் என்பதே உங்கள் பிள்ளைகளின் பொருள். தமிழ்த் தேசியம் வாழுகிறதென்றால,; மானமுள்ள தமிழ்ச்சாதி வாழ்கிறதென்றால் இனி எவருமே எமது தலையில் மிளகாய் அரைக்க முடியாது என்பதை வேட்டைக்காரனை வேட்டையாடி நிரூபித்துக்காட்டுங்கள். உங்கள் பிள்ளைகளாகிய நாம் மிகப்பெரும் விடுதலைக்கான பணியை சுமக்க ஆரம்பித்துள்ளோம். எம்மினத்தை பாதிக்கும் எவ்விடயமாகவிருந்தாளும் தட்டிக்கேக்கும் பணியை எம்மிடம் நீங்கள் கையளித்துள்ளீர்கள். அதை நாம் சரிவர முன்னெடுக்கவேண்டியது எமது கடமையாகும்.

உங்கள் பிள்ளைகளின் அன்பான வேண்டுகோளை ஏற்றுக்கொள்வீர்கள் என்று சந்தேகத்திக்கிடமின்றி நம்புகிறோம்.

வாழ்க தமிழ்த்தேசியம்.
தமிழ் இளையோர் பேரவை - சுவிஸ்
கவியரசி



  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS
Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates