jkr
แสดงบทความที่มีป้ายกำกับ ஜனாதிபதித் தேர்தல் แสดงบทความทั้งหมด
แสดงบทความที่มีป้ายกำกับ ஜனாதிபதித் தேர்தல் แสดงบทความทั้งหมด

ஜனாதிபதித் தேர்தல் : வாக்களிப்பு நிலவரங்கள்


நாட்டில் இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஆறாவது ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் சில மாவட்டங்களின் தற்போதைய நிலைமை குறித்து எமது செய்தியாளர்களிடம் கேட்ட போது :

மன்னார்

"மன்னார் மாவட்டத்தில் மக்கள் உற்சாகமாக வாக்களிக்கின்றனர். மன்னார் மாவட்டத்தில் 85,122 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

மன்னாரில் 28 வாக்களிப்பு நிலையங்களும், மாவட்டத்தின் ஏனைய பகுதிகளில் 42 வாக்களிப்பு நிலையங்களும் மொத்தமாக 70 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 103 வாக்களிப்பு பெட்டிகளும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

அதேவேளை, தூர இடங்களில் வாக்களிப்பவர்களுக்கான போக்குவரத்து வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன. வன்முறைகள் எதுவும் இதுவரை இடம்பெறவில்லை. எனினும் வாக்களிப்பு நிலையங்களுக்கு இடைநடுவே சில குழுக்கள் வாக்களிக்கச் செல்லும் மக்களுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்துகின்றனர்."

யாழ்ப்பாணம்

"காலையில் சற்று மந்தமாக காணப்பட்ட வாக்களிப்பு நிலையங்களில் தற்போது சுறுசுறுப்பு காணப்படுகின்றது. குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான மக்கள் வாக்களிக்க வருகை தந்து கொண்டிருக்கின்றனர். காலையில் சற்று பதட்டமான நிலை காணப்பட்ட போதிலும், தற்போது மக்கள் கூட்டம் கூட்டமாக வாக்களிப்பு நிலையங்களுக்கு வந்து வாக்களித்துக் கொண்டிருக்கின்றனர்."

மலையகம்

"மலையக மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் காணப்படுகின்றனர். இன்று பெரும்பாலான தோட்டங்களில் காலையில் வேலைக்குச் சென்று 11.00 மணியளவில் திரும்பி வந்து வாக்களிக்க ஆரம்பித்துள்ளனர்.

பொகவந்தலாவை, ஹட்டன், மஸ்கெலியா போன்ற நகரங்களில் வர்த்தக நடவடிக்கைகள் மந்தகதியிலேயே இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றன. வாக்களிப்பு நிலையங்களுக்கருகில் பொலிஸ், இராணுவ பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது வாக்களிப்பு வீதம் அதிகரித்துக் காணப்படுகின்றது."

கொழும்பு

கொழும்பு மற்றும் கொழும்பு வடக்குப் பகுதியில் இதுவரையில் எவ்வித அசம்பாவிதங்களும் ஏற்படவில்லை என தேர்தலை கண்காணிப்பதற்கான பவ்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது. மக்களும் மிகவும் ஆர்வத்துடன் வாக்களிப்பு நிலையங்களுக்குச் சென்று வாக்களித்துக் கொண்டிருக்கின்றனர். வழமையைவிட மக்கள் மிகவும் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.

புத்தளம்

புத்தளம் மாவட்டத்தில் நூற்றுக்கு 80 வீதமான வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களித்துள்ளதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இது வரை எவ்வித வன்முறைச் சம்பவங்களும் பதிவாக வில்லை. எனினும் புத்தளம் அல்ஹசின் சிட்டி எனப்படும் மீள்குடியேற்ற பிரதேசத்தில் 450 க்கு மேற்பட்ட மக்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர் எனினும் 200 பேருக்கு மாத்திரமே வாக்காளர் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் புத்தளம் மாவட்ட மக்கள் எமக்குத் தெரிவித்ததுடன் வாக்களிக்கச் செல்லும் மக்களுக்கு குறிப்பிட்ட சிலரால் இடையூறுகள் இருந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

ஜனாதிபதித் தேர்தல் வாக்களிப்பு நிலவரங்கள் : யாழில் 15 விழுக்காடு, நாடு தழுவிய ரீதியாக 70வீத வாக்கு பதிவாகியுள்ளது

நாட்டில் இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஆறாவது ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் சில மாவட்டங்களின் தற்போதைய நிலைமை

"மன்னார் மாவட்டத்தில் மக்கள் உற்சாகமாக வாக்களிக்கின்றனர். மன்னார் மாவட்டத்தில் 85,122 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

மன்னாரில் 28 வாக்களிப்பு நிலையங்களும், மாவட்டத்தின் ஏனைய பகுதிகளில் 42 வாக்களிப்பு நிலையங்களும் மொத்தமாக 70 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 103 வாக்களிப்பு பெட்டிகளும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

அதேவேளை, தூர இடங்களில் வாக்களிப்பவர்களுக்கான போக்குவரத்து வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன. வன்முறைகள் எதுவும் இதுவரை இடம்பெறவில்லை. எனினும் வாக்களிப்பு நிலையங்களுக்கு இடைநடுவே சில குழுக்கள் வாக்களிக்கச் செல்லும் மக்களுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்துகின்றனர்."

யாழ்ப்பாணம் "காலையில் சற்று மந்தமாக காணப்பட்ட வாக்களிப்பு நிலையங்களில் தற்போது சுறுசுறுப்பு காணப்படுகின்றது. குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான மக்கள் வாக்களிக்க வருகை தந்து கொண்டிருக்கின்றனர். காலையில் சற்று பதட்டமான நிலை காணப்பட்ட போதிலும், தற்போது மக்கள் கூட்டம் கூட்டமாக வாக்களிப்பு நிலையங்களுக்கு வந்து வாக்களித்துக் கொண்டிருக்கின்றனர்."

"மலையக மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் காணப்படுகின்றனர். இன்று பெரும்பாலான தோட்டங்களில் காலையில் வேலைக்குச் சென்று 11.00 மணியளவில் திரும்பி வந்து வாக்களிக்க ஆரம்பித்துள்ளனர்.

பொகவந்தலாவை, ஹட்டன், மஸ்கெலியா போன்ற நகரங்களில் வர்த்தக நடவடிக்கைகள் மந்தகதியிலேயே இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றன. வாக்களிப்பு நிலையங்களுக்கருகில் பொலிஸ், இராணுவ பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது வாக்களிப்பு வீதம் அதிகரித்துக் காணப்படுகின்றது."

பிந்திய செய்தி

சிறிலங்காவில் ஆறாவது அரசதலைவரை தேர்ந்தெடுக்கும் இன்றைய தேர்தலில் வாக்களிப்பு நிறைவாகும் தறுவாயில் மாலை 3.30 மணியளவில் யாழ்ப்பாணத்தில் 15 விழுக்காடு வாக்களிப்பே இடம்பெற்றிருப்பதாக தேர்தல் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. இதேவேளை, நாடளாவிய ரீதியில் வாக்களிப்பு 70 விழுக்காடாக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கிழக்கு மாகாணத்தில் 40 விழுக்காடு வாக்குப்பதிவும் வன்னியில் 45 விழுக்காடு வாக்குப்பதிவும் இடம்பெற்றுள்ளதாக தேர்தல் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக, கிளிநொச்சி மாவட்டத்தில் இன்று மதியம் வரை எவரும் வாக்களிக்கவில்லை என்றும் அங்குள்ள வாக்காளர்களுக்கு போக்குவரத்து வசதிகள் செய்துகொடுக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது இவ்வாறிருக்க, வவுனியாவில் இன்று முற்பகல் இரண்டு கிரனேட் தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. வெவ்வேறு இடங்களில் இடம்பெற்ற இந்த சம்பவங்களில் எவருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்கள் இருவர் இந்த தாக்குதல்களை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக வவுனியா காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

இறுதியாக கிடைத்த தகவல்களின்படி, தற்போது வாக்களிப்பு நிலையங்கள் யாவும் சிறிலங்கா நேரப்படி 4 மணிக்கு மூடப்பட்டுள்ளன. வாக்குப்பெட்டிகள் யாவும் வாக்குகள் எண்ணும் நிலையங்களுக்கு அனுப்பிவைப்பதற்காக சீல் வைக்கப்பட்டு பாதுகாப்பாக அனுப்பிவைப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. இன்று முன்னிரவு முதல் ஆரம்பமாகவுள்ள வாக்கு எண்ணும் நடவடிக்கை பின்னிரவளவில் நிறைவு பெறும் என்றும் சிறிலங்கா நேரப்படி நாளை அதிகாலையளவில் தேர்தல் முடிவுகள் தெரியவரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மற்றும் கொழும்பு வடக்குப் பகுதியில் இதுவரையில் எவ்வித அசம்பாவிதங்களும் ஏற்படவில்லை என தேர்தலை கண்காணிப்பதற்கான பவ்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது. மக்களும் மிகவும் ஆர்வத்துடன் வாக்களிப்பு நிலையங்களுக்குச் சென்று வாக்களித்துக் கொண்டிருக்கின்றனர். வழமையைவிட மக்கள் மிகவும் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.


  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

அடுத்த ஜனாதிபதி யார்? ஒரு கோடியே 40 இலட்சம் பேர் வாக்களிக்கத் தகுதி


இலங்கையின் நிறைவேற்று அதிகாரமிக்க ஆறாவது ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் நாளை மறுதினம் 26 ஆம் திகதி நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் வாக்களிப்பதற்காக 14,088,500 பேர் தகுதி பெற்றுள்ளனர். இந்த தேர்தலுக்கான பூர்வாங்க ஏற்பாடுகள் அனைத்தும் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது.

நாடளாவிய ரீதியில் 10875 நிலையங்களில் வாக்களிக்க வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல் வரலாற்றில் அதிகளவில் வேட்பாளர்கள் களமிறங்கியுள்ள தேர்தலாக இது அமைந்துள்ளது. 23 வேட்பாளர்கள் வேட்பு மனுத் தாக்கல் செய்திருந்தனர். இவர்களில் ஒருவரின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதையடுத்து 22 பேர் வேட்பாளர்களாக தேர்தல்கள் ஆணையாளரால் அறிவிக்கப்பட்டனர்.

ஜனாதிபதித் தேர்தல் திகதி உத்தியோகபூர்வமாக தேர்தல்கள் ஆணையாளரால் அறிவிக்கப்பட்டதிலிருந்து நேற்று வரையான காலப் பகுதி வரைக்குள் சுமார் 950 க்கும் மேற்பட்ட தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளன. சுதந்திரமான தேர்தல் கண்காணிப்பு அமைப்புகளுக்கும் தேர்தலுக்குப் பொறுப்பான பொலிஸ் பிரிவுக்குமே முறைப்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இவை தவிர முறையிடப் படாத பல தேர்தல் வன்முறைச் சம்பவங்களும் இடம்பெற்றுள்ளமையும் சுதந்திரமான அறிக்கைகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த வன்முறைச் சம்பவங்களின்போது பிரதான இரு வேட்பாளர்களதும் ஆதரவாளர்களென நம்பப்படும் ஐவர் கொல்லப்பட்டுள்ளனர். பெரும்பாலான முறைப்பாடுகள் பிரதான வேட்பாளர்களாகப் போட்டியிடும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, சரத் பொன்சேகா தரப்பிலிருந்தே செய்யப்பட்டுள்ளன. இவற்றில் ஆளும் தரப்பினருக்கு எதிரான முறைப்பாடுகளே கூடுதலாக இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

அதிகரித்துக் காணப்பட்ட இந்த வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள், ஐரோப்பிய யூனியன் மற்றும் சர்வதேச, உள் ளூர் அமைப்புகளும் தமது கவலையை வெளியிட்டிருந்தன.நீதியும் நேர்மையும் மிக்க தேர்தலுக்கு இந்த வன்முறையானது ஒரு சவாலாக அமையலாமெனவும் கருத்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

வாக்களிப்பு தினத்தில் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் பொலிஸாருக்கு மேலதிகமாக இராணுவத்தினரையும் ஈடுபடுத்துவதென அரசாங்கம் முடிவு செய்துள்ளது. தேர்தல் பணிகளைக் கணக்காணிக்கவென ஆசிய நாடுகளைச் சேர்ந்த கண்காணிப்பாளர்களும் பொதுநலவாய செயலக உறுப்பினர்களும் ஈடுபடுத்தப்படவுள்ளனர். எதிர்வரும் 28 ஆம் திகதி இவர்கள் தேர்தல் தொடர்பான இறுதியறிக்கையைக் கையளிக்கவும் திட்டமிட்டுள்ளனர்.

இந்தத் தேர்தலில் நாற்பது வருட அரசியல் அனுபவம் கொண்டவரும் தற்போதைய ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷ இரண்டாவது கால ஜனாதிபதி ஆட்சிக்கான மக்கள் ஆணைகோரி மீண்டும் போட்டியிடுகிறார். இவருக்கு பிரதான சிங்களக் கட்சிகள் பலவும் தமிழ் பேசும் சிறுபான்மையினக் கட்சிகள் சிலவும் ஆதரவு வழங்கியுள்ளன. தனது தேர்தல் விஞ்ஞாபனமாக 14 அம்சங்களை வெளியிட்டுள்ளார்.

இவருக்குப் போட்டியாக களமிறங்கியுள்ள ஜெனரல் சரத் பொன்சேகா இராணுவத்தில் நாற்பது வருடகால சேவை புரிந்தவர். இவருக்கும் சிங்களக் கட்சிகள் பலவும் சிறுபான்மையினக் கட்சிகள் சிலவும் ஆதரவு தெரிவித்துள்ளன. இவரும் பத்து அம்சங்கள் கொண்ட தனது திட்டத்தை மக்கள் முன்வைத்துள்ளார். இந்த இரு பிரதான வேட்பாளர்கள் தவிர்ந்த ஏனைய 20 பேரில் ஒரு தமிழரும் இரு முஸ்லிம்களும் அடங்குவர்.

வாக்களிப்பு மற்றும் தேர்தல் முடிவுகள் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள தேர்தல் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்க, மோசடிகள் இடம்பெற்றதாக உறுதிப்படுத்தப்படும் பட்சத்தில் மறு வாக்களிப்புக்கு உத்தரவிடப்படுவதுடன் முடிவு அறிவிப்பதிலும் தாமதம் ஏற்படலாமெனக் கூறியுள்ளார். தேர்தல் முடிவுகள் 27 ஆம் திகதி காலையே வெளியிடப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

வடக்கு கிழக்கில் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்தோரில் 45ஆயிரத்து 732 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதாக தேர்தல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது. யாழ் மாவட்டத்தில் 15ஆயிரத்து 602 பேரும் வன்னி மாவட்டத்தில் 29ஆயிரத்து 990 பேரும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 69 பேரும் திகாமடுல்ல மாவட்டத்தில் 3 பேரும் திரு கோணமலை மாவட்டத்தில் 118 பேரும் வாக்களிப்பதற்காகத் தம்மைப் பதிவு செய்துள்ளனர்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

தேர்தல் பிரசாரங்கள் யாவும் இன்று நள்ளிரவுடன் நிறைவு


நிறைவேற்று அதிகாரம் கொண்ட 6ஆவது ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான ஜனாதிபதித் தேர்தலுக்கு இன்னும் மூன்று தினங்களே இருக்கின்ற நிலையில், தேர்தல் பிரசார நடவடிக்கைகள் அனைத்தும் இன்று நள்ளிரவு 12 மணியுடன் நிறைவுக்கு வருகின்றன.

1981ஆம் ஆண்டின் 15ம் இலக்க சட்டத்திற்கு அமைவாக சகல பிரசார நடவடிக்கைகளும் இன்று நள்ளிரவுடன் நிறைவுக்கு வருவதாக தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது. அத்துடன், பிரசார நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள எதிர்வரும் தினங்களில் அரசியல் கட்சிகளோ, அரசியல்வாதிகளோ அல்லது எந்தவொரு தனிநபருமோ பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடுதல் தேர்தல் விதிமுறைகளை மீறுகின்ற செயல் என்பதுடன் அது தண்டனைக்குரிய குற்றமாகும் என்றும் திணைக்களம் குறிப்பிடப்பட்டுள்ளது.

26ஆம் திகதி நடைபெறவிருக்கின்ற ஜனாதிபதித் தேர்தலுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள தேர்தல்கள் திணைக்களம் நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தல்கள் நடைபெறுவதற்கு சகல தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்றும் கோரியுள்ளது. இந்நிலையில், தேர்தல் காலங்களில் வன்முறைகள் மற்றும் சட்டத்திற்கு முரணான சம்பவங்கள் இடம்பெறாத வகையிலும் நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலை நடத்தும் வகையிலும் பொது மக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்கு ஏதுவான சகல பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக பொலிஸ் திணைக்களம் கூறியுள்ளது.

773 வன்முறைகள்

ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்ட தினத்திலிருந்து நேற்று வெள்ளிக்கிழமை வரை தேர்தல் விதிமுறைகளை மீறிய 773 சம்பவங்கள் தமக்கு பதிவாகியிருப்பதாக நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தல்களுக்கான மக்கள் இயக்கம் (கபே) தெரிவித்துள்ளது. தாக்குதல் மற்றும் சொத்துக்களுக்கு ஊறுவிளைவித்த 187 சம்பவங்களும் ஆட்களை தாக்கிய 134 சம்பவங்களும் இதில் அடங்கியிருப்பதாகவும் கபே குறிப்பிட்டுள்ளது. ஆதரவாளர்களிடம் கோரிக்கை இது இவ்வாறிருக்க இன்று நள்ளிரவுடன் சகல தேர்தல் பிரசார நடவடிக்கைகளும் நிறைவுக்கு வருகின்றமையினால் தேர்தல் நடைபெறும் தினமான 26ஆம் திகதி வரையிலான தினங்களிலும் அதன் பின்னரும் கட்சி ஆதரவாளர்கள், பொதுமக்கள் என சகலரும் அமைதி பேணுமாறும் இக்காலப் பகுதிக்குள் எந்தவிதமான பிரசார நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கோ, அநாவசியமான குழப்பங்களை விளைவிப்பதற்கோ முயற்சிக்க வேண்டாம் எனவும் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மற்றும் ஐக்கிய தேசிய முன்னணி ஆகியவற்றின் செயலாளர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

ஜனாதிபதித் தேர்தல் : நேற்றுமாலை வரை 730 வன்முறைகள்


ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டு நேற்று வெள்ளிக்கிழமை மாலை வரை 730 தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகத் தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான நிலையம் தெரிவித்துள்ளது.

தேர்தல் வன்முறைகளில் ஐவர் உயிரிழந்துள்ளதாகவும் 33பேர் பலத்த காயங்களுக்குள்ளாகியுள்ளதாகவும் 16 தீவைப்பு சம்பவங்களுடன் 5 கொலை முயற்சிகள் இடம்பெற்றுள்ளதாகvum அந்நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.

அதிக வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்ற மாவட்டமாக குருணாகலில் 71 வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. பொலன்னறுவையில் 63 வன்முறைச் சம்பவங்களும், மாத்தறையில் 56 வன்முறைச் சம்பவங்களும் அதிகபட்சமாக இடம்பெற்றுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

234 தேர்தல் வன்முறைகள் பதிவு


ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்ட தினத்திலிருந்து இதுவரையிலும் 234 தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கமான (கபே) அமைப்பின் ஊடக இணைப்பாளர் கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்தார்.

நாட்டின் பல பாகங்களில் தேர்தல் தொடர்பான கட்டவுட்கள் மற்றும் போஸ்டர்கள் இன்னும் அகற்றப்படாமல் உள்ளன. அவற்றை அகற்றுமாறு தேர்தல் ஆணையாளர் பொலிஸாருக்கு அறிவித்துள்ள போதிலும் இதுவரையிலும் அவற்றை அகற்றுவதற்கான எதுவித நடவடிக்கைகளையும் பொலிஸார் எடுக்காமல் உள்ளனர். எனவே, தேர்தல் விதிமுறைகளை இவ்வாறு மீறுவோரை தடுத்து நிறுத்த தேர்தல் ஆணையாளருக்கு உள்ள அதிகாரங்களை அவர் பிரயோகிக்க வேண்டும் எனவும் அவர் கூறினார். தேர்தல் வன்முறைகள் தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில்;

ஜனாதிபதி தேர்தலுக்கான கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் தேர்தல் ஆணையாளர் உரையாற்றிய போது சகல கட்சிகளும் தேர்தல் சட்ட விதிமுறைகளை பின்பற்ற வேண்டுமென கோரப்பட்டதோடு அவ்வாறு தேர்தல் சட்ட விதிமுறைகளை மீறுவோருக்கு எதிராக பொலிஸார் சட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் பணிப்புரை விடுத்திருந்தார்.

ஆனால், தற்பொழுது தேர்தல் சட்ட விதிமுறைகள் பாரிய அளவு மீறப்பட்டுவருகிறது. அது மாத்திரமல்லாமல் தேர்தல் ஆணையாளரின் பணிப்புரைகளை பொலிஸார் பின்பற்றுவதாகத் தெரியவில்லை. எனவே, நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலை நடத்துவதற்கு தேர்தல் ஆணையாளர் நடடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

ஜனாதிபதித் தேர்தல் மூலம் தமிழ் மக்களின் அடுத்த கட்ட நகர்வை தீர்மானிக்க முடியும் - மக்களை பொறுப்புடன் செயற்பட தமிழ் புத்திஜீவிகள் வலியுறுத்து


நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் உரிய உத்திகளையும் வியூகங்களையும் வகுத்து செயற்படுவதன் மூலம் எமது மக்களுக்கான அடுத்தகட்ட நகர்வை நோக்கிய அடித்தளத்தை சரியாக இடமுடியுமென தமிழ் புத்திஜீவிகள் விடுத்துள்ள விநயமான வேண்டுகோளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதகுருமார் பல்கலைக்கழக பேராசிரியர்கள் வடக்கு மாகாண அமைச்சின் உயரதிகாரிகள் சமூகப்பணிமற்றும் மனிதாபிமான நடவடிக்கைகளுக்கான அமைப்பின் பிரதிநிதிகள் அடங்கலாக 20 தமிழ் புத்திஜீவிகள் கூட்டாக விடுத்துள்ள அந்த அறிக்கையில் ஜனாதிபதித் தேர்தலை தமிழ் மக்கள் எவ்வாறு நோக்க வேண்டுமென்பதை வலியுறுத்தி மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

அதிகாரத்துக்கு வரக்கூடிய தரப்போடு பேரம் பேசுதலுக்கான நல்ல ஒரு சந்தர்ப்பமாக இத்தேர்தலை பயன்படுத்துவதுடன் தீர்க்க தரிசனத்துடனும் தொலைநோக்கோடும் அணுகி இத் தேர்தல் மூலம் உரிய தெரிவை மேற்கொள்வது தமிழ் மக்களின் இன்றியமையாத ஒரு செயற்பாடாகும்.

நீதி நியாயம் சமவுரிமை கௌரவமான வாழ்வு என்பன சிதறடிக்கப்பட்டு எமது இனம் பெரும் இக்கட்டில் சிக்கி தவித்துக் கொண்டிருக்கும் இன்றைய தருணத்தில் ஒரு சுபீட்சமான எதிர்காலத்தை நோக்கி நமது மக்களை அரசியல் நீதியாக வழிநடத்திச் செல்லவேண்டிய பாரிய பொறுப்பு தமிழ் மக்களிடமே இருப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

ஜனாதிபதி தேர்தலில் மகிந்தவுக்கு இந்தியாவும், சரத்திற்கு அமெரிக்காவும் ஆதரவு: தென்பகுதியில் தேர்தல் பயம் கூடும் என இராஜதந்திரிகள் கருத்து


ஜனாதிபதித்தேர்தலில் போட்டியிடவுள்ள மகிந்த ராஜபக்ஷவை ஆதரிப்பதில் இந்தியாவும், ஜெனரல் சரத்பொன்சேகாவை ஆதரிப்பதில் அமெரிக்காவும் மறைமுகமாக ஈடுபட்டுள்ளதாக கொழும்பு இராஜதந்திர வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இவ்வாறு யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகும் வலம்புரி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

எதிர்வரும் ஜனவரி 26 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில் எதிர்க்கட்சிகளின் கூட்டமைப்பு தமது பொதுவேட்பாளராக முன்னாள் இராணுவத்தளபதி ஜெனரல் சரத்பொன்சேகாவை நிறுத்தியுள்ளது.

ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதி அறிவிக்கும் வரை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் தகவலை வெளியிடாமல் அமைதிகாத்த ஜெனரல் சரத்பொன்சேகா தற்போது தேர்தலில் தான் போட்டியிடுவதை பகிரங்கமாக அறிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும் முன்னாள் இராணுவத்தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவும் போட்டியிடும் கள நிலைமை தென்பகுதியில் ஒருபோதும் இல்லாத தேர்தல் பயத்தை உண்டு பண்ணும் என அரசியல் ஆய்வாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

ஜனாதிபதித் தேர்தலில் வன்னி யுத்த வெற்றியுடன் சம்பந்தப்பட்ட இரு பெரும் முக்கியஸ்தர்கள் போட்டியிடுவதால் உள்நாட்டில் ஏற்படக்கூடிய தேர்தல் களேபரத்திற்கு அப்பால் இலங்கை தொடர்பில் இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்குமான மறைமுகப் போட்டியில் எதிர் ஒலிப்புக்களும் ஜனாதிபதித் தேர்தலில் செல்வாக்கு செலுத்தும் என அரசியல் இராஜதந்திரிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ஷ வெற்றியடைய வேண்டும் என இந்தியா விரும்புகின்றது. அதேநேரம் ஜெனரல் சரத்பொன்சேகா ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதைக்கூட இந்திய மத்திய அரசு விரும்பவில்லை என கூறப்படுகின்றது.

ஆனால் மகிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக போட்டியிடும். ஜெனரல் சரத் பொன்சேகா வெற்றி பெறுவதை அமெரிக்கா விரும்புவதாகவும் இதற்கான ஆலோசனைகள் ஜெனரல் சரத் பொன்சேகா அமெரிக்காவுக்குச் சென்ற போது வழங்கப்பட்டதாகவும் தெரிய வருகின்றது. இவ்வாறு வலம்புரி நாளிதழ் தனது இன்றைய பதிப்பில் தெரிவித்துள்ளது.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

ஜனவரி 26இல் ஜனாதிபதித் தேர்தல் : ஆணையாளர் அறிவிப்பு


இலங்கையின் 6ஆவது ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் ஜனவரி 26 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திசாநாயக்க இன்று உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

தற்போது பதவியில் உள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பதவிக்காலம் முடிய இன்னமும் இரண்டு ஆண்டுகள் இருக்கின்ற நிலையில், இந்த தேர்தல் நடத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS
Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates