jkr
แสดงบทความที่มีป้ายกำกับ மன்னார் แสดงบทความทั้งหมด
แสดงบทความที่มีป้ายกำกับ மன்னார் แสดงบทความทั้งหมด

மன்னாரில் ஜனாதிபதி வெற்றி கொண்டாட்டம்


ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தேர்தல் வெற்றி குறித்து செய்திகள் வெளியானதும், நேற்று புதன்கிழமை மன்னார் பஸார் பகுதியில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தலைமையில் வெற்றி விழாக்கள் கொண்டாடப்பட்டுள்ளன.

ஜனாதிபதியின் 'கட் அவுட்' ஒன்றும் திறந்து வைக்கப்பட்டது. மன்னார் மாவட்ட மீள் குடியேற்ற இணைப்புச் செயலாளர் அலிக்கான் செரிப் மக்கள் மத்தியில் ஜனாதிபதியின் வெற்றி குறித்து உரையாற்றினார்
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

மன்னாரில் சோதனை கெடுபிடிகள் நேற்று முதல் தளர்வு : ஸ்ரீ.ல.சு.க. ஒருங்கிணைப்பாளர்


மன்னார் மாவட்டத்தில் உள்ள பல சோதனைச் சாவடிகளின் சோதனை நடவடிக்கைகள் நேற்று(18.12.2009.) வெள்ளிக்கிழமை மாலை முதல் தளர்த்தப்பட்டிருப்பதாக வடக்கு மக்கள் முன்னணியின் தலைவரும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் வன்னி மாவட்ட ஒருங்கிணைப்பாளருமான திருமதி வீ. கீதாஞ்சலி தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

மன்னார் மாவட்டம் செல்வதற்குப் பல மாதங்களாக போக்குவரத்துக் கெடுபிடிகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்தன. இந்நிலையில் பாதுகாப்பு அமைச்சின் உயர் அதிகாரிகளுடன் நான் தொடர்பு கொண்டு பேசினேன்.

இதன்போது, முதற்கட்டமாக பறையநாளன்குளம் மற்றும் மன்னார் கோட்டை சோதனை நிலையத்திலுள்ள அடையாள அட்டை சோதனையிடும் கெடுபிடிகள் போன்றவை உடனும் நீக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது" என்றார்.

எனினும் இன்று நண்பகல் வரை மன்னாரிலிருந்து செல்லும் அனைத்து வாகனங்களும் கோட்டை சோதனை நிலையத்தில் பலத்த கெடுபிடிகளின் பின்னரே செல்ல அனுமதிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

மட்டக்களப்பு-மன்னார் பஸ் சேவை மீண்டும் ஆரம்பம்

மட்டக்களப்புக்கும் மன்னாரிற்கும் இடையிலான நேரடி இ.போ.ச. பஸ் சேவை 3 வருடங்களின் பினனர் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மன்னார் மற்றும் மட்டக்களப்பு இ.போ.ச டிப்போக்கள் இணைந்து தினசரி இவ் பஸ் சேவையை நடத்தி வந்தன.

மதவாச்சி சோதனைச் சாவடி ஊடாக போக்குவரத்து செய்வது குறித்து பாதுகாப்பு தரப்பினரால் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் காரணமாக குறிப்பிட்ட இ.போ.ச. பஸ் சேவை இடைநிறுத்தப்டப்டிருந்தது.

தற்போது அக்கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதையடுத்து பஸ் சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

மன்னார் கோட்டை சோதணைநிலையத்தினால் பயணிகள் பாரிய அசெளரியங்களுக்கு முகம்


மன்னார் கோட்டை சோதணைநிலையத்தில் உள்ள வீதிகள் குண்றும் குழியுமாக காணப்படுவதால் சோதணைகளை மேற்கொள்ள உள் செல்லும் பயணிகள் பாரிய அசெளரியங்களுக்கு முகம் கொடுப்பதாக விசனம் தெரிவிக்கின்றார்கள்
மன்னாரில் இருந்து வெளியிடங்களுக்குச் செல்லும் சகல விதமான வாகனங்களும் கோட்டை சோதணை நிலையத்திற்குள் சோதணை இடப்படுகின்றது. இதே வேளை வேறு இடங்களில் இருந்து வரும் சகல வாகணங்களும் கோட்டை சோதணை நிலையத்திற்குள் சென்று சோதணை நடவடிக்கைகளை மேற்கொண்டபின்பே மன்னார் நகருக்குள் செல்ல முடியும். இந்த நிலையில் கோட்டை சோதணை நிலையத்தில் உள்ள பகுதிகள் முழுவதும் பாரிய குண்றும் குழியுமாக காணப்படுகிறது.தற்போது பெய்து வரும் மழையின் காரணமாக அப் பகுதிகளில் மழைநீர் தேங்கிநின்று குளம் போன்று காட்சியழிக்கின்றது. இதனால் பயணிகள் ஏறி இறங்குவதில் பாரிய பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்துவருகின்றனர். இந்த கோட்டை சோதணை நிலையம் ஆனது கடற்படையினரால் அமைக்கப்பட்டது குறிப்பிடதக்கது.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

மன்னாரில் 7 நாள் சிசு ஒன்றை விற்பனை செய்த குற்றச்சாட்டின் பேரில் மூவர் கைது


மன்னார் பிரதேசத்தில் 7 நாட்களேயான சிசு ஒன்றை பணத்திற்காக விற்பனை செய்த குற்றச்சாட்டின் பேரில் மூன்று பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த சந்தேக நபர்களில் மருத்துவர் ஒருவரும் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது.


மருத்துவ சிகிச்சைக்காக தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பச்சிளம் குழந்தை ஒன்றே இவ்வாறு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

காய்ச்சல் காரணமாக குறித்த குழந்தையை தனியார் வைத்தியசாலை ஒன்றில் அனுமதித்ததாகவும், அந்தக் குழந்தையை மருத்துவர் உள்ளிட்ட மூவர் விற்பனை செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிசு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மேலதிக சிகிச்சை பெற்று வந்த சந்தர்ப்பத்தில் உயிரிழந்து விட்டதாக மருத்துவர் தெரிவித்துள்ளார்.

எனினும், குறித்த குழந்தை வத்தளைப் பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

பொலிஸார் இந்த சம்பவம் குறித்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS
Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates