jkr
แสดงบทความที่มีป้ายกำกับ யாழ்ப்பாணம் แสดงบทความทั้งหมด
แสดงบทความที่มีป้ายกำกับ யாழ்ப்பாணம் แสดงบทความทั้งหมด

யாழ்ப்பாணத்தில் இன்று அதிகாலை 13 இடங்களில் கைக்குண்டுத் தாக்குதல்


யாழ்ப்பாணம் நல்லூரை அண்டிய பகுதிகளிலும், மானிப்பாய், கோண்டாவில் உட்பட்ட 13 இடங்களில் இன்று அதிகாலை 2.00 மணிமுதல் 4.00 மணி வரையிலான இடைவெளியில் கைக்குண்டுத் தாக்குதல்கள் இடம்பெற்றிருக்கின்றன.

தாக்குதல்களில் இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் தொடர்பில் இதுவரை தகவல்கள் எதுவும் வெளிவரவில்லை. மேற்படி சம்பவம் தொடர்பில் மனோ கணேசன் எம்.பி தெரிவிக்கையில்,

"30 வருட கால யுத்தத்தின் பின்னர் சுதந்திரமான முறையில் வாக்களிக்க முற்பட்ட யாழ். மக்களின் வாக்களிப்பு உரிமைகளைத் தடுக்கும் முகமாகவே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறான மிலேச்சத்தனமான செயற்பாடுகளுக்கு யாழ். மக்கள் துணை போகக் கூடாது" எனத் தெரிவித்தார்.

இலங்கை போக்குவரத்து பஸ் சேவைக்குச் சொந்தமான பஸ்கள் பலவும் சேதத்திற்குள்ளாக்கப்பட்டிருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

அதேவேளை, யாழ்ப்பாணத்தில் மக்கள் குழுவினராகச் சென்று வாக்களிப்பதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

Photo யாழ் கொத்துரொட்டிக் கடையில் நாய் இறைச்சி! வலம்புரி நாளேடு முஸ்லிம்களால் தீக்கிரை.


யாழ்ப்பாணம் ஐந்து சந்தியில் அமைந்திருக்கும் கொத்துரொட்டிக் கடை ஒன்றில் நாய் இறைச்சி கண்டுபிடிக்கப்பட்டதாக செய்தி வெளியிட்ட வலம்புரி நாளேடு முஸ்லிம்களால் தீயிட்டுக் கொளுத்தப்பட்டுள்ளது.
இன்று யாழ்;ப்பாணத்தில் வெளிவந்த வலம்புரி நாளேட்டில், ஐந்து சந்தியில் இயங்கி வரும் முஸ்லிம் கொத்துரொட்டிக் கடையொன்றில் நாய் இறைச்சி கண்டுபிடிக்கப்பட்டதாக பரபரப்பான செய்தி வெளியிடப்பட்டிருந்தது.

இதனை அடுத்து யாழ் நகர்ப் பகுதியில் திரண்ட நூறு வரையான முஸ்லிம் வணிகர்கள், வலம்புரி நாளிதழிற்கு எதிரான பதாகைகளை தாங்கியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதோடு அதன் இதழ்களை தீயிட்டுக் கொளுத்தியுள்ளனர்.

இது தொடர்பாக முகமதியா ஜும்மா பள்ளிவாசல் நிர்வாகிகளால் இன்று அறிக்கை ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

யாழ்ப்பாணம் இந்திய மயமாகின்றதா?, இந்திராகாந்தியின் பெயரில் யாழில் பல்கலைக் கழகம்


யாழ்ப்பாணம் இந்திய மயமாகின்றதா?, இந்திராகாந்தியின் பெயரில் யாழில் பல்கலைக் கழகம்
[ ஞாயிற்றுக்கிழமை, 27 டிசெம்பர் 2009, 06:25.49 AM GMT +05:30 ]
இலங்கையில் உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் இலங்கையின் வட பகுதியில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் இந்தியாவின் ஊடுறுவல் மற்றும் செல்வாக்கு செலுத்துதல் ஆகியன அதிகரித்து வந்ததை உலகமே நன்கு அறி;ந்திருந்தது.
கொழும்பில் உள்ள இந்திய தூதரகத்தின் அதிகாரிகள் அடிக்கடி யாழ்ப்பாணம் சென்ற வருவது மற்றம் யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தில் அடிக்கடி சந்திப்புக்களையும் கூட்டங்களையும் நடத்துவது போன்ற விடயங்கள் அங்கு நiபெற்று வந்தன.

ஏனைய நாடுகளை விட இந்தியாவிற்கு அதிக சுதந்திரம் உள்ளது போன்று தமிழ் மக்களுக்கு காட்டுவதும் இந்தியாவின் உதவியின்றி அழிந்து கிடக்கும் யாழ்ப்பாணத்தை மீண்டும் கட்டியெழுப்ப முடியாது என்ற எண்ணத்தை யாழ் மக்களின் மனங்களில் ஏற்படுத்த முனைந்ததை அனைவரும் நன்க கவனிக்கக் கூடியதாக இருந்தது.

இவ்வாறான நிலையில் தற்பொழுது புதிதான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அதுவும் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியதான செய்தியாகவே இதை புலம் பெயர்ந்த தமிழர்கள் கருத வேண்டியுள்ளது என எமக்கு கிடைத்த கருத்துப் பரிமாறல்கள் தெரிவிக்கதின்றன.

நேற்று முன்தினம் தமிழ்நாட்டின் திருவண்ணாமலையில் நடைபெற்ற கூட்டமொன்றில் உரையாற்றிய இந்தியாவின் மத்திய பாராளுமன்ற உறுப்பினரான திரு.சுதர்சன நாச்சியப்பன் பேசுகையில் யாழ்ப்பாணத்தில் அன்னை இந்திராகாந்தியின் பெயரில் மிகப் பெரிய பல்கலைக் கழகம் ஒன்று விரைவில் நிர்மாணிக்கப்படவுள்ளது என்றும் இந்த திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை தனது அங்கீகாரத்தை கொடுத்துள்ளதாகவும் இதைப்போலவே யாழ்ப்பாண மக்களின் வாழ்வை மேம்படுத்த பல நல்ல திட்டங்களை இந்திய அரசு அமுல் செய்யவுள்ளதாகவும் இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ளதால் அது நடந்து முடியும் வரையிலும் இந்திய அரசு காத்திருப்பதாகவும் திரு.நாச்சியப்பன் கூறியுள்ளார்.

இந்த தகவல்களைப் பார்க்கும் போது இந்தியாவின் பல தலைவர்களின் பெயர்கள் யாழ்ப்பாண மக்களால் அடிக்கடி உச்சரிக்கப்படும் வகையில் அங்கு ஊடுறுவல்
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க யாழ்.விஜயம்


நேற்று சனிக்கிழமை யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்திருந்த எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, ஜயலத் ஜெயவர்த்தன, ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் ஆகியோர் இணைந்து தமது முதல் விஜயத்தை நல்லூர் கந்தசாமி கோவிலில் இருந்து ஆரம்பித்தனர். தொடர்ந்து ஆரியகுளம் நாகவிகாரையை தரிசித்த இக்குழுவினர் ஆரியகுளத்தில் உள்ள புதிய உயர் கல்லூரி மாணவர்களையும் சந்தித்துக் கலந்துரையாடினர்.

அதனைத் தொடர்ந்து யாழ்.ஆயர் தோமஸ் சௌந்தர நாயகத்தினைச் சந்தித்த இக்குழுவினர் யாழ்ப்பாணத்தின் நிலமைகள் பற்றியும், எவ்வகையான செயற்பாடுகளை செய்யவேண்டும் எனவும் கேட்டு அறிந்தனர்.

தொடர்ந்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு விஜயம் மேற்கொண்ட இக்குழுவினர் அங்கு துணைவேந்தர் இல்லாததால் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத் தலைவர் சி.இளங்குமரன் தலைமையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள், பேராசிரியர்களுடனான சந்திப்பினை மேற்கொண்டனர். அங்கு பல்கலைக்கழக மாணவர்களினால் விடுக்கப்பட்ட கேள்விக்கு ரணில் விக்கிரமசிங்கவும், மனோ கணேசனும் விளக்கமளித்தனர்.

முக்கியமாக தேர்தலில் அன்னப்பறவை சின்னத்திற்கு தமிழ் மக்கள் ஏன் வாக்களிக்க வேண்டும்? இதன் மூலம் தமிழ் மக்களுக்கு எவ்வாறான நன்மைகள் கிடைக்கும்? என்ற கேள்விகள் மாணவர்களால் எழுப்பப்பட்டது. இது குறித்து மனோ கணேசன் பதிலளிக்கையில்,"யார் ஜனாதிபதியாக வந்தாலும் தமிழ் மக்களுக்கு தீர்வு என்பது கிடைக்கப் போவது இல்லை, இருந்தும் தற்போதுள்ள தமிழ் மக்களை இல்லாதொழிக்கும் ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழிக்கவேண்டும் என்பதற்காகவே அன்னப்பறவைக்கு வாக்களிக்க வேண்டும்" எனக் கூறினார்.தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளோரில் விசாரணைக்குட்படுத்த வேண்டியவர்களை விசாரணை செய்தும், மற்றவர்களையும் விடுவித்தல், அவர்களுக்கான புனர்வாழ்வு அழிக்கப்படுதல்,

காணமற்போனோர், மற்றும் கைது செய்யப்பட்டவர்களை விடுவித்தல், உயர்பாதுகாப்பு வலயங்கள் நீக்கப்படுதல், தொழிற்சாலைகள் உருவாக்கப்படல், 2 இலட்சம் வேலை வாய்ப்புக்களை யாழ்ப்பாணத்தில் வழங்கல், கல்வித் துறையை நவீனமயப்படுத்தல் குறிப்பாக உயர் கல்விகள், காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையை மீள இயங்க வைத்தல், ஏ-9 பாதையினை 24 மணிநேரப் பயன்பாட்டிற்குரியதாக்கல், மற்றும் பலாலி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்றுதல் போன்ற தேர்தல் உறுதி மொழிகள் யாழ்ப்பாண மக்களுக்காக ரணில் விக்கிரமசிங்க வழங்கினார்.

தொடர்ந்து யாழ்ப்பாணத்தின் உள்ள பத்திரிகை நிறுவனங்களுக்கும், மானிப்பாய் வீதியில் அமைந்துள்ள பள்ளிவாசலுக்கும், யாழ்ப்பாணம் வணிகர் கழகத்திற்கும் விஜயங்களை மேற்கொண்டார். வணிகர் கழகத்தில் யாழ்ப்பாண வணிகர்களின் ஏ-9 பாதையூடான போக்குவரத்தை சுதந்திரமாக்கல், மற்றும் வணிகள்களின் பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடினர்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

பலாலி வீதியில் இராணுவ சீருடையில் சடலம் மீட்பு


இன்று அதிகாலையில் யாழ்ப்பாணம் பலாலி வீதியில் இருந்து இராணுவ சிப்பாய் ஒருவரின் சடலம் துப்பாக்கிச் சூட்டுக் காயத்துடன் மீட்கப்பட்டுள்ளது.

அதிகாலையில் துப்பாக்கிப் பிரயோகச் சத்தம் கேட்டதாகவும் இதனைத் தொடர்ந்து காலையில் வீதியில் சென்றவர்கள் சடலத்தைக் கண்டு பொலிசாருக்குத் தகவல் தெரிவித்தனர். இதன் அடிப்படையில் யாழ்ப்பாணம் பொலிசார் குறிப்பிட்ட இடத்திற்கு வந்து சடலத்தை பொறுப்பெடுத்தனர்.

துப்பாக்கிச் சத்தம் கேட்ட போதிலும், குறிப்பிட்ட இடத்தில் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்தமையால் உடனடியாக எவரும் செல்லிவில்லை எனவும் அந்தப் பகுதியில் உள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.

யாழ்ப்பாணம், பலாலி வீதியில் தபால் கட்டைச்சந்திக்கு அருகில் மேற்படிச் சடலம் சீருடையுடன் காணப்பட்டது. குறிப்பிட்ட இடத்திற்கு அதிகாலையில் ஏராளமான பொலிசார் இராணுவப் பொலிசார் மற்றும் இராணுவத்தினரும் வந்து விசாரணைகளை மேற்கொண்டனர். இந்த துப்பாக்கிச் சூட்டுச் சத்தத்தினால் அந்தப் பகுதியில் பெரும் பதட்டமான நிலைமை காணப்பட்டது.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS
Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates