ரொபேர்ட் பிளேக் செவ்வாயன்று இலங்கை வருகை
.jpg)
இலங்கைக்கான அமெரிக்காவின் முன்னாள் உயர்ஸ்தானிகரும், அமெரிக்காவின் தென்னாசிய மற்றும் மத்திய ஆசியாவுக்கான உதவி வெளிவிவகார அமைச்சருமான ரொபேர்ட் ஓ பிளேக் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.
உதவி வெளிவிவகார அமைச்சராக பதவியேற்ற பின்னர் ரொபேர்ட் ஒ பிளேக் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வது இதுவே முதற் தடவை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விஜயத்தின் போது, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, எதிர்க்கட்சிகளின் ஜனாதிபதி தேர்தலின் பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகா ஆகியோர் உட்பட முக்கியஸ்தர்களை பிளேக் சந்திக்கவுள்ளார்.
Read Users' Comments (0)