மக்கள் பிரதிநிதிகள் விலைகொடுத்து வாங்கப்படுவதாக விமல் வீரவன்ச குற்றச்சாட்டு

மக்கள் பிரதிநிதிகளை எதிர்க்கட்சியினர் விலைகொடுத்து வாங்குவதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
தேசிய சுதந்திர முன்னணியினர் இன்று நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் குறிப்பிட்டார்.
ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக போட்டியிடும் ஜெனரல் சரத் பொன்சேகாவின் குழுவினர் தனக்கு பணம் வழங்கியதாக குறிப்பிட்ட தேசிய சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் மொஹம்மட் முஸம்மில், அது தொடர்பாக ஆதாரம் இருப்பதாகக் கூறி இறுவட்டுகளையும் ஊடகவியலாளர்களுக்கு மாநாட்டின்போது வழங்கினார்.
முன்னாள் பிரதியமைச்சர் மயோன் முஸ்தபா ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு வழங்குவதாக அறிவித்த ஊடகவியலாளர் மாநாட்டுக்கு வருகை தந்திருந்த நாடாளுமன்ற உறுப்பினர் மொஹம்மட் முஸம்மில் இடையில் அங்கிருந்து சென்றார்.
அதன் பின்னர் தேசிய சுதந்திர முன்னணியினர் நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
Read Users' Comments (0)