jkr
แสดงบทความที่มีป้ายกำกับ அகதி แสดงบทความทั้งหมด
แสดงบทความที่มีป้ายกำกับ அகதி แสดงบทความทั้งหมด

வவுனியாவிலிருந்து இறுதித் தொகையினர் மட்டு. வருகை


வவுனியா இடைத் தங்கல் முகாம்களில் தங்கியிருந்த மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த குடும்பங்களில் இறுதித் தொகுதியினர் இன்று அதிகாலை மட்டக்களப்பை வந்து சேர்ந்தனர்.

298 குடும்பங்களைச் சேர்ந்த 785 பேர் இறுதித் தொகுதியினாராக மீள் குடியேற்றத்தின் நிமித்தம் இராணுவத்தினரால் அழைத்து வரப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் அறிவித்துள்ளார்.

சிங்கள மகாவித்தியாலயத்திற்கு நேரடியாக அழைத்து வரப்பட்ட இக்குடும்பங்களின் விபரங்கள் பொலிஸ், இராணுவம் மற்றும் சிவில் அதிகாரிகளினால் பதிவு செய்யப்பட்ட பின்னர் நேரடியாக அவர்களது இருப்பிடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அதிகாரிகளின் தகவல்களின்படி இன்று சகல குடும்பங்களும் அவர்களது இருப்பிடங்களைச் சென்றடைந்து விடுவார்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

வவுனியா இடைத்தங்கல் முகாம்களிலிருந்து 4 தொகுதிகளில் இதுவரை 847 குடும்பங்களைச் சேர்ந்த 2349 பேர் மட்டக்களப்புக்கு மீள் குடியேற்றத்திற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

அதேவேளை, திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த குடும்பங்களில் ஒரு தொகுதியினரும் மீள் குடியேற்றத்திற்காக அங்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

இலுப்பைக்குளம் நலன்புரி நிலையத்திலிருந்து 208 பேர் சொந்த இடங்களுக்கு அனுப்பி வைப்பு


செட்டிக்குளம் நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டிருந்து மன்னார் இலுப்பைக்குளம் நலன்புரி நிலையத்திற்கு மாற்றப்பட்டவர்களில் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு தொகுதியினர் நேற்று மாலை அவர்களுடைய சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

மன்னார் இலுப்பைக்குளம் நலன்புரி நிலையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தவர்களில் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த 208 பேர் மேற்படி அவர்களுடைய சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியினைச் சேர்ந்த 18 குடும்பங்களைச் சேர்ந்த 45 பேரும் மன்னார் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 49 குடும்பங்களைச் சேர்ந்த 163 பேரும் பேருந்துகள் மூலம் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

மன்னார் நகரப்பகுதியை சேர்ந்த 163 பேரும் மன்னார் நகரப்பகுதியில் நேற்று மாலை 5.45 மணியளவில் இறக்கி விடப்பட்டனர்.இவர்கள் அழைத்து வரப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோநோகராதலிங்கம் மக்களுடன் கலந்துரையாடினார்
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

உலகம் குழுவதும் 100 கோடி மக்கள் பட்டினியால் தவிப்பு


உலகம் முழுவதும் சுமர் 100 கோடி மக்கள் பட்டினியில் தவித்துக் கொண்டிருப்பதாக ஐ.நா. உலக உணவு ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. உலக நாடுகள் விவசாயத்துக்கு முக்கியத்துவம் கொடுக்காவிட்டால், இந்த எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கும் அபாயம் இருப்பதாகவும் அது கூறுகிறது.

வறுமையின் உச்சத்தில் உள்ள பெரும்பாலான ஆபிரிக்க நாடுகளில் ஒருவேளை சாப்பாட்டுக்குக் கூட வழியில்லாமல் மக்கள் பரிதவிப்பில் இருப்பதாகவும், இதற்காகப் பள்ளிக்கு அனுப்புதல், உடைகள் வாங்குதல், அடிப்படை மருந்துச் செலவுகளைக் கூட அந்த நாட்டு மக்கள் கைவிட்டு வருவதாகவும் ஐ.நா. உலக உணவு ஸ்தாபனம் தெரிவிக்கிறது.

ஐ.நா. உலக உணவு ஸ்தாபனம் உதவி நடவடிக்கைப் பிரிவு தலைவர் ஓடிவ் இக்பஸார் கூறுகையில்,

"உலகம் முழுவதும் 30 நாடுளில் பட்டினியைப் போக்க அவசர கால நடவடிக்கைகள் எடுக்க வேண்டியுள்ளது. இதில் 20 நாடுகள் ஆபிரிக்காவைச் சேர்ந்தவை.
உலக அளவில் 2015ஆம் ஆண்டுக்குள் பட்டினி அவலத்தைப் பாதியாக குறைப்போம் என்று உலகத் தலைவர்கள் உறுதி பூண்டனர். அப்படி இருந்தும், இந்த எண்ணிக்கை மென்மேலும் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

தற்போது பட்டினியால் தவிக்கும் 30 நாடுகளையும் காப்பாற்ற வேண்டியது அவசியமாகின்றது. வளர்ந்த மற்றும் வளரும் நாடுகள் இதற்கு உதவ முன்வர வேண்டும்.

உணவு கிடைக்காமலும், போதிய சத்தின்மை காரணமாகவும் ஒவ்வொரு 6 விநாடிக்கும் ஒரு குழந்தை உயிரிழந்து கொண்டிருக்கிறது.

உலகின் பல பகுதிகளிலும் உணவுப் பொருட்களின் விலை மிகக் கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் ஏழை மக்களால் உணவுப் பொருட்களை வாங்கவே முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஏழைகள் அதிகம் உள்ள நாடுகளில் ஒரு வேளை உணவு கிடைப்பது கூட பெரும் போராட்டமாக உள்ளது.

சோமாலியாவில், வன்முறையும், உள்நாட்டுப் போரும் அந்நாட்டை உருக்குலைத்து விட்டது. கடந்த 20 ஆண்டுகளாக வன்முறை, மோதலில் ஊறிப் போய்க் கிடக்கும் அந்நாட்டில், ஒரு குடும்பம், தனக்குத் தேவையான உணவு, குடிநீருக்காக செலவிடும் தொகை கடந்த 2 ஆண்டுகளில் 85 சதவீதம் அதிகரித்துள்ளது.

கடந்த 2007ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஒரு குடும்பத்திற்கான செலவு 92 டொலராக இருந்தது. அது செப்டம்பர் மாதம் 171 டொலராக உள்ளது.

பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புவதையும், உடைகள் வாங்குவதையும் சோமாலியா மக்கள் கைவிட்டு நெடுநாட்களாகி விட்டன. பலர் கிடைக்கின்ற உணவைச் சாப்பிட்டுக் கொள்ள பழகி விட்டனர். இந்நாட்டில், சத்தான உணவு கிடைக்காததால், ஐந்து குழந்தைகளில் ஒன்று இறந்து விடும் அவலமும் நீடிக்கிறது.

ஆபிரிக்கா முழுவதும் கிட்டத்தட்ட இதே நிலைதான். அதாவது ஆபிரிக்கக் கண்டமே கிட்டத்தட்ட பட்டினிக்குப் பலியாகிக் கொண்டிருக்கிறது.

கென்யாவில் கடும் வறட்சி காரணமாக நூற்றுக்கணக்கான கால்நடைகள் மரித்துப் போய் விட்டன. இந்த நாட்டில் 30 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உணவு கிடைக்காமல் அவல நிலையில் உள்ளனர்.

உலகம் முழுவதும் பட்டினி மற்றும் சத்தான உணவின்மையால் தவிப்போரின் எண்ணிக்கை 100 கோடியைத் தாண்டி விட்டது.

விவசாயத்தை உலக அரசுகள் புறக்கணித்ததே இதற்குக் காரணம். கடந்த 80களுக்குப் பின்னர் உலகம் முழுவதும் விவசாயம் முக்கியமிழந்து போய் விட்டது.

1980ஆம் ஆண்டு விவசாயத்திற்கு உலக நாடுகள் சராசரியாக 17 சதவீதம் நிதியை ஒதுக்கின. ஆனால் 2006இல் இது 3.8 சதவீதமாக குறைந்து போனது. இருப்பினும் கடந்த 3 ஆண்டுகளாக இது லேசான உயர்வைக் கண்டுள்ளது. ஆனால்அது போதுமானதாக இல்லை.

உணவு உற்பத்தியை அதிகரித்தால்தான் பட்டினியை வீழ்த்த முடியும். இது பொதுவான பிரச்சினை. விவசாயத்திற்கு உலக நாடுகள் முக்கியத்துவம் கொடுக்காவிட்டால் உலகம் முழுவதுமே பட்டினிச் சாவுக்குள்ளாகி விடும். இதை எவராலும் தடுக்க முடியாத அவலம் ஏற்படும் என்று ஐ.நா. தெரிவிக்கிறது.

உலகிலேயே அதிக அளவில் பட்டினியால் வாடும் மக்கள் ஆசியா மற்றும் பசிபிப் பகுதிகளில்தான் உள்ளனர். அடுத்த இடம் ஆபிரிக்க கண்டமாகும்" என்றார்
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

முகாம்களில் வாழும் தமிழர்களின் விடுதலைக்கு மத்திய அரசின் ஊடாக தமிழக அரசு வலியுறுத்தும்-கனிமொழி எம்.பி. கூறுகின்றார்


வன்னியில் அகதிமுகாம்களில் வாழும் தமிழர்களின் விடுதலைக்காக மத்திய அரசாங்கத்தை தமிழக அரசு வலியுறுத்தும். இலங்கை விஜயம் தொடர்பில் எமது அறிக்கையினை தாயகம் திரும்பியதும் நாம் வெளியிடுவோம் என்று தமிழக பாராளுமன்ற குழுவின் உறுப்பினர் கனிமொழி தெரிவித்தார். இலங்கை வந்துள்ள தமிழக பாராளுமன்ற உறுப்பினர்கள் நேற்று கொழும்பில் பல கட்சிப் பிரமுகர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதன்போது இலங்கைக்கான விஜயம் தொடர்பில் கேசரிக்கு கருத்துத் தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது: இலங்கைத் தமிழர்களின் பிரச்சினையிலும் தற்போது அகதிமுகாம்களில் வாழும் மக்களின் பிரச்சினை தொடர்பிலும் தமிழக அரசாங்கத்தினால் நேரடியாக தலையிட முடியாத நிலை உள்ளது. இந்திய மத்திய அரசின் ஊடாகவே அகதிமுகாம்களில் வாழும் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் வலியுறுத்தல்களை மேற்கொள்ள முடியும். .

இலங்கை விஜயத்தின் போது வன்னியில் அகதிமுகாம்களை நாம் பார்வையிட்டோம். அகதி முகாம்களில் வாழும் மக்களுடன் நாம் உரையாடினோம். தம்மை முகாம்களில் இருந்து உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு அவர்கள் கோருகின்றனர். இவர்களது விடுதலை தொடர்பாக அரசாங்க பிரதிநிதிகளுடனான சந்திப்புக்களின் போது வலியுறுத்த உள்ளோம். அதேபோன்று தாயகம் திரும்பியதும் தமிழக அரசின் ஊடாக மத்திய அரசாங்கத்தை வலியுறுத்துவோம்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

மக்களை விரைவில் மீளக்குடியமர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும். யாழ் சென்ற தமிழக குழுவினரிடம் வேண்டுதல்


போரினால் பாதிக்கப்பட்டு, முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை விரைவில் மீளக்குடியமர்த்த வேண்டும்: அத்துடன் இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று யாழ்ப்பாணத்திற்கு ஞாயிறன்று விஜயம் செய்த தமிழக தூதுக்குழுவினரிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்திற்குச் சென்ற தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழுவினருக்கு துரையப்பா விளையாட்டரங்கத்தி்ற்கு அருகில் வரவேற்பளிக்கப்பட்டது. அதனையடுத்து, அங்குள்ள தந்தை செல்வாவின் உருவச்சிலைக்கு குழுவினர் மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்கள்.

பின்னர் யாழ் ‘நூலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சந்திப்பில் யாழ் மாவட்டத்தின் அரச திணைக்கள அதிகாரிகள், யாழ் மாநகரசபை உறுப்பினர்கள், மதத்தலைவர்கள், மீனவர் சங்கப் பிரதிநிதிகள், வர்த்தகர்சங்கப் பிரதிநிதிகள், பல்கலைக்கழக மாணவர் பிரதிநிதிகள் ஆகியோரைச் சந்தித்து அவர்களின் கருத்துக்கள் பிரச்சினைகள் குறித்து தமிழக அரசியல் தூதுக்குழுவினர் கேட்டறிந்து கொண்டனர். இந்தச் சந்திப்பையடுத்து, முகாம்களில் இருந்து அண்மையில் விடுவிக்கப்பட்டு, யாழ் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பைத் தொடரும் மாணவர்களையும் அவர்கள் சந்தித்துக் கலந்துரையாடினார்கள்.

இந்தச் சந்திப்புக்களின்போது முகாம்களில் உள்ள மக்களை விரைவில் விடுதலை செய்து அவர்களை அவர்களது சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இலங்கையின் இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண்பதற்கு இந்தியா ஒத்துழைக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வலியுறுத்தப்பட்டுள்ளன.

அத்துடன், வடபகுதி கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் அத்துமீறி வருகை தந்து மீன் பிடிப்பதனால் ஏற்பட்டுள்ள தீர்க்கப்படாத பிரச்சினைக்கு சுமுகாமான ஒரு தீர்வு காணப்பட வேண்டும் என மீனவர் சங்கப் பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதன்போது பதிலளித்த இந்தியக் குழுவினர், முதல்வர் கருணாநிதியின் வேண்டுகோளுக்கு இணங்கவும், சோனியா காந்தி மற்றும் பிரதமர் மன்மோகன்சிங் ஆகியோரின் அனுமதியோடும் இலங்கையின் உண்மையான நிலைமையை அறிவதற்காகவே தாங்கள் வந்துள்ளதாகவும், விசேடமாக இடம்பெயர்ந்த மக்களின் நிலைப்பாட்டை நேரில் பார்த்தும் கேட்டும் அறிந்து செல்வதற்காகவுமே வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இலங்கை விஜயத்தின் முடிவில் முதல்வர் கருணாநிதிக்கு தாங்கள் அறிக்கையொன்றை கையளிக்கவுள்ளதாகவும், இதுபற்றி மத்திய அரசாங்கத்தன் கவனத்திற்குக் கொண்டு வரவுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கைத் தமிழர்கள், இரண்டாந்தரப் பிரஜைகளாக அல்லாமல் முழு உரிமைகளுடனும் வாழ வழிசெய்ய வேண்டும் என்பதில் தமிழக அரசும் தமிழக மக்களும் உறுதியாக இருப்பதாகவும், இதற்கான ஓர் அரசியல் தீர்வை முன்னெடுப்பதற்கு இந்திய அரசு தயாராக இருப்பதாகவும், அந்த நோக்கத்தி்ன் முதற்படியாகவே தமது இந்த விஜயம் அமைந்திருப்பதாகவும் இந்தியக் குழுவினர் யாழ்ப்பாணத்தில் தெரிவித்துள்ளனர்.

மீனவர்களின் பிரச்சினைகள் குறித்து அமைச்சர் ப.சிதம்பரம் ஏற்கனவே சில நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ள இந்தியக் குழுவினர் மீனவர் பிரச்சினைக்கு விரைவில் சுமுகமான ஒரு தீர்வு காணப்படும் என்றும் உறுதியளித்துள்ளனர்.

முகாம்களில் இருந்’து வந்துள்ள யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் பிரச்சினைகள: தேவைகள் குறித்து கேட்டறிந்த அவர்கள் அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

வவுனியா நலன்புரி நிலையங்களில் பெண்களின் அந்தரங்க விடயங்களை பேணிப் பாதுகாக்கக் கூடிய வசதிகள் கூட கிடையாதென தப்பிவந்த அகதி தகவல்!


வவுனியா நலன்புரி நிலையங்களில் பெண்களின் அந்தரங்க விடயங்களை பேணிப் பாதுகாக்கக் கூடிய வசதிகள் கூட கிடையாதென்று செட்டிகுளம் அகதி முகாமிலிருந்து அண்மையில் தப்பிச்சென்ற தமிழ் அகதியொருவர் சர்வதேச மன்னிப்புச் சபைக்கு தெரிவித்துள்ளார். வவுனியா அகதி முகாம்களில் குறிப்பாக செட்டிகுளம் அகதிமுகாம்களில் உள்ள கர்ப்பிணிப் பெண்கள் குழந்தைகளைப் பிரவசிப்பதற்கு கூட மறைவிடங்கள் கிடையாதென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனால் பல கர்ப்பணிப் பெண்கள் வெளியாட்களுக்கு மத்தியில் பகிரங்க இடத்தில் வைத்து குழந்தைகளை பிரசவிப்பதற்கு திணிக்கப் பட்டுள்ளதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார். அகதி முகாம்களுக்கு போதிய மருத்துவ வசதிகள் கிடையாது என்பதால் கர்ப்பிணிப் பெண்கள் பெரியளவில் இன்னல்களையும், நெருக்கடிகளையும் எதிர்நோக்கி வருகின்றனர் என்றும் மகப்பேறு சம்பந்தப்பட்ட சிகிச்சையை பெறுவதற்காக அவர்கள் முகாம்களிலுள்ள மருத்துவ நிலையங்களுக்கு முன்னால் வரிசையில் மணிக்கணக்கில் கால்கடுக்க காத்துநிற்க வேண்டியுள்ளது. என்றும் சர்வதேச மன்னிப்புச்சபைக்கு அவர் விளக்கியுள்ளார். சர்வதேச மன்னிப்பு சபையின் இலங்கை விவகாரங்கள் குறித்த நிபுணர்களில் ஒருவரான யொலண்டா பொஸ்கெர், செட்டிகுளம் நலன்புரி நிலையத்திலிருந்து அண்மையில் தப்பிவந்த அகதிமூலம் இத்தககல்கள் சர்வதேச மன்னிப்புசபைக்கு கிடைக்கப் பெற்றுள்ளமையை உறுதிப்படுத்தியுள்ளார்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

மீள்குடியேற்றும் செயற்பாடுகளின் முன்னேற்றம் ஏமாற்றமளிக்கிறது- பிரிட்டன்


இடம்பெயர்ந்துள்ள மக்களை மீள்குடியேற்றும் செயற்பாடுகளில் இதுவரை காணப்படும் முன்னேற்றம் ஏமாற்ற த்தைத் தருவதாக அமைந்துள்ளது என்று இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரிட்டன் அபிவிருத்தி அமைச்சர் மைக் பொஸ்டர் தெரிவித்துள்ளதாக பிரிட்டன் உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

ஏற்கெனவே இருக்கும் "மூடப்பட்ட' முகாம்களிலிருந்து புதிய "மூடப்பட்ட' முகாம்களுக்கு இடம்பெயர்ந்தவர்களை மாற்றும் நடவடிக்கைகளுக்கு பிரிட்டன் நிதியுதவி வழங்க மாட்டாது என்றும் பிரிட்டிஷ் அபிவிருத்தி துறை அமைச்சர் மைக் பொஸ்டர் தெரிவித்துள்ளதாகவும் பிரிட்டன் உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

இரண்டுநாள் விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள பிரிட்டிஷ் அமைச்சர் வடபகுதியிலுள்ள முகாம்களுக்கு நேற்று விஜயம் செய்தார். இதனையடுத்து என்றும் இடம்பெயர்ந்தோர் முகாம்களுக்கு அவர் சென்று பார்வையிட்ட பின்னர் கொழும்பிலுள்ள பிரிட்டிஷ் உயர் ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ஒக்டோபர் நடுப்பகுதி முதல் டிசம்பர் மாதம் வரையான பருவப்பெயர்ச்சி மழையினால் முகாம்களில் வாழ்ந்து வரும் 2 லட்சத்து 60 ஆயிரம் சிவிலியன்கள் மீது ஏற்படப் போகும் தாக்கம் குறித்து அமைச்சர் கவலை தெரிவித்தார். கண்ணிவெடி அகற்றுவதற்கும் முகாம்வாசிகளை சொந்த வீடுகளுக்கு அனுப்புவதற்கும் உதவுவதன் மூலம் பிரிட்டன் மீள் குடியமர்வுப் பணிகளுக்கு நிதியுதவி வழங்கி வருகிறது. ஆனால் இதுவரை இப்பணிகளில் காணப்படும் முன்னேற்றம் ஏமாற்றத்தை தலுவதாக இருக்கிறது என்று மைக் பொஸ்டர் குறிப்பிட்டுள்ளார்.

இடம்பெயர்ந்தவர்களின் நடமாடும் சுதந்திரம் குறிப்பாக பருவப் பெயர்ச்சி மழை ஆரம்பிப்பதற்கு முன்னர் அவர்களுக்கு நடமாடும் சுதந்நிரம் வழங்கப்படுவது எம்மை பொறுத்த வரை முன்னுரிமை விடயமாகும். கடந்த மே மாதம் மைக் பொஸ்டர் மேற்கொண்ட விஜயத்தின் பின்னர் முகாம் நிலைமையில் முன்னேற்றம் காணப்படுகிறது. ஆனால் எதிர்வரும் பருவப்பெயர்ச்சி மழை பாதிப்பை தரலாம். நீரை அசுத்தமடையச் செய்து சுகாதார சீர்கேடுகளை ஏற்படுத்தி நோய்களும் பரவலதூரம்.

முகாம்களுக்குள் மழையினால் ஏற்படக்கூடிய மனித அவலங்களை தவிர்ப்பதற்கு உறவினர், நண்பர்களுடன் முகாம்வாசிகளை தங்க அனுமதிப்பதே பொருத்தமான நடவடிக்கையாகும். உதாரணமாக, மிகப் பெரும் முகாமான மெனிக் பாமிலுள்ள அகதிகளில் 70 சதவீதமானோரை வெளியே தங்க வைக்கலாம். ஆனால் புதிய மூடப்பட்ட முகாம்களுக்கு இடம்பெயர்ந்தவர்களை மாற்றுவது ஏற்றுக்கொள்ளப்பட முடியாததாகும். வருடம் முடிவதற்குள் பெரும்பான்மையான முகாம்வாசிகளை விடுவிப்பதென்ற வாக்குறுதியை அரசாங்கம் நிறைவேற்றுமானால் மேலும் 4.8 மில்லியன் பவுண்ஸை நிதியுதவியை வழங்க பிரிட்டன் தயாராக இருக்கிறது என்றும் அமைச்சர் பொஸ்டர் தெரிவித்தார்.

பல முகாம் வாசிகளுக்கு உதவ அவர்களது உறவினர்களும் நண்“பர்களும் காத்திருக்கிறார்கள். அத்தகைய முகாம்வாசிகளை அரசாங்கம் ஒரு தற்காலிக நடவடிக்கையாக முகாம்களிலிருந்து விடுவிக்க வேண்டும். அரசாங்கம் அப்படி நடந்து கொண்டால் பருவப்பெயர்ச்சி மழை ஓய்ந்ததும் மீதமுள்ள மூடப்பட்ட முகாம்களில் உயிர்காக்கும் அவசரகால நடவடிக்கைகளுக்கு மட்டும் பிரிட்டன் உதவும் என்றும் பொஸ்டர் தெரிவித்தார்
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

மட்டு.வந்த 50 இடம்பெயர் குடும்பங்கள் சொந்த இடங்களுக்கு அனுப்பி வைப்பு


வவுனியா இடைத்தங்கல் முகாம்களிலிருந்து கடந்த மாத நடுப்பகுதியில் மட்டக்களப்புக்கு மீள் குடியேற்றத்திற்காக அழைத்து வரப்பட்டு அங்குள்ள இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்த குடும்பங்களில் இன்று 50 குடும்பங்களைச் சேர்ந்த 142 பேர் அவர்களது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த மாதம் 10 ஆம் திகதி வவுனியாவிலுள்ள இடைத்தங்கல் முகாமகளிலிருந்து விடுவிக்கப்பட்டு மீள் குடியேற்றத்திற்கு என சிவில் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளினால் 127 குடும்பங்களைச் சேர்ந்த 367 பேர் பொறுப்பேற்கப்பட்டு மட்டக்களப்புக்கு அழைத்து வரப்பட்டிருந்தனர்.

இக் குடும்பங்களில் 45 குடும்பங்களைச் சேர்ந்த 127 பேர் குருக்கள் மடம் இடைத்தங்கல் முகாமிலும் 78 குடும்பங்களைச் சேர்ந்த 240 பேர் சிங்கள மகா வித்தியாலயம் இடைத்தங்கல் முகாமிலும் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

அழைத்து வரப்பட்ட ஆரம்ப நாட்களில் பாதுகாப்பு தரப்பினர் இவர்களது விபரங்களைப் பதிவு செய்ய வேண்டியிருப்பதால் 2 - 3 நாட்களின் பின்னரே வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என சிவில் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளினால் தெரிவிக்கப்பட்டாலும் கடந்த 23ஆம் திகதி முதல் கட்டம் கட்டமாக இக்குடும்பங்கள் இருப்பிடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு உறவினர்களிடம் கையளிக்கப்படுகின்றனர்.

அதிகாரிகளின் தகவல்களின் படி இன்று சிங்கள மகா வித்தியாலய இடைத்தங்கல் முகாமிலிருந்து 33 குடும்பங்களைச் சேர்ந்த 99 பேரும் குருக்கள் மடம் இடைத்தங்கல் முகாமிலிருந்து17, குடும்பங்களைச் சேர்ந்த 43 பேரும் விடுவிக்கப்பட்டு சிவில் அதிகாரிகளினால் பொறுப்பேற்கப்பட்டு பாதுகாப்புடன் வீடுகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டு உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளனர்.

அழைத்து வரப்பட்ட 127 குடும்பங்களைக் கொண்ட 367 பேரில் இதுவரை சிங்கள மகா வித்தியாலய இடைத்தங்கல் முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த 78 குடும்பங்களைச் சேர்ந்த 240 பேரில் 44 குடும்பங்களைச் சேர்ந்த 133 பேர் அவர்களது இருப்பிடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இம் முகாமில் 34 குடும்பங்களைச் சேர்ந்த 107 பேர் தொடர்ந்தும் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தெரிகின்றது.குருக்கள்மடம் முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த 45 குடும்பங்களைச் சேர்ந்த 127 பேரில் 24 குடும்பங்களைச் சேர்ந்த 62 பேர் இருப்பிடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில் மிகுதி 21 குடும்பங்களைக் கொண்ட 45 பேர் தொடர்ந்தும் அந்த இடைத்தங்கல் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளமை தெரியவருகின்றது
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

மனிக்பாம் ஸோன் 3 முகாமில் சுமார் 2000 பேர் விசேட தேவைக்கு உட்பட்டோர் எனத் தகவல்

வவுனியா மனிக்பாம் இடைத்தங்கல் முகாமின் ஸோன் 3 முகாமில் மாத்திரம் 2000 பேர் விசேட தேவைக்குட்பட்டோராக இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

முகாம்களில் உள்ளவர்களின் விபரங்கள் அடங்கிய கணக்கெடுப்பு ஒன்றின் மூலம் இது அறிய வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

யுத்தச் சூழ்நிலையில் காயமடைந்து அங்கங்களை இழந்தவர்கள், கண்பார்வை இழந்தவர்கள், வாய்பேச முடியாமலும், காது கேளாத நிலைக்குத் தள்ளப்பட்டவர்கள் மற்றும் இயற்கையிலேயே வலது குறைந்தவர்கள் போன்றோர் இந்த எண்ணிக்கையில் அடங்குவதாகத் தெரிகின்றது.

யுத்தத்தினால் இடம்பெயர்ந்தது மட்டுமன்றி, நேரடி தாக்கங்களுக்கு உள்ளாகி உடல் ரீதியாகப் பாதிக்கப்பட்டவர்களின் புனர்வாழ்வுக்கான நடவடிக்கைகளுக்காகவே இந்தத் தகவல்கள் சேகரிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

அக்கரைப்பற்று இடைத்தங்கல் முகாம் இன்று மாலையுடன் மூடப்பட்டுள்ளது


- வவுனியா இடைத்தங்கல் முகாம்களிலிருந்து மீள் குடியேற்றத்திற்காக அம்பாறை மாவட்டத்திற்கு அழைத்து வரப்பட்ட குடும்பங்கள் தங்க வைக்கப்பட்டிருந்த அக்கரைப்பற்று இடைத்தங்கல் முகாம் இன்று மாலையுடன் மூடப்பட்டுள்ளது.

இறுதியாக அங்கு தங்க வைக்கப்பட்டிருந்த 12 குடும்பங்களைச் சேர்ந்த 40 பேரும்இன்று மாலை விடுவிக்கப்பட்டு சிவில் அதிகாரிகளினால் பொறுப்பேற்கப்பட்டு இருப்பிடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த மாதம் 11 ஆம் திகதி அம்பாறை மாவட்டததைச் சேர்ந்த 42 குடும்பங்களைக் கொண்ட 130 பேர் விடுவிக்கப்பட்டு சிவில் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளினால் பொறுப்பேற்கப்பட்டு அம்பாறை மாவட்டத்திற்கு அழைத்து வரப்பட்டு குறித்த இடைத் தங்கல் முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

கடந்த 23 ஆம் திகதி முதல் இக் குடும்பங்கள் கட்டம் கட்டமாக மீள் குடியேற்றத்திற்காக அனுப்பி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

முகாம்களில் உள்ள கர்ப்பிணித்தாய்மார்களின் குடும்பத்தினரை சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கும் நடவடிக்கையின் மூலம் கடந்த 29 ஆம் சிவன்கோவிலில் 124 பேர் தங்க வைக்கப்பட்டிருந்தனர். இவர்களை அதிகாரிகள் இன்று (திங்கள்) யாழ்ப்பாணத்திற்கு அனுப்

முகாம்களில் உள்ள கர்ப்பிணித்தாய்மார்களின் குடும்பத்தினரை சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கும் நடவடிக்கையின் மூலம் கடந்த 29 ஆம் சிவன்கோவிலில் 124 பேர் தங்க வைக்கப்பட்டிருந்தனர். இவர்களை அதிகாரிகள் இன்று (திங்கள்) யாழ்ப்பாணத்திற்கு அனுப்பியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களுக்குரிய சரியான ஆவணங்களின்றி இவர்களது பிரயாணத்திற்கு அனுமதி வழங்க முடியாது என இராணுவத்தினர் தெரிவித்திருந்தனர். இதனையடுத்து, இவர்கள் வவுனியா கோவில்குளம் சிவன்கோவில் கல்யாண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தார்கள் என்பது தெரிந்ததே.

இவர்களை யுஎன்எச்சிஆர் அதிகாரிகள் ஆலயத்திற்கு வந்து திங்களன்று காலையிலேயே அழைத்துச் சென்று யாழ்ப்பாணத்திற்கு அனுப்பி வைத்ததாக சிவன்கோவில் அறங்காவலர் சபையினர் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை, கர்ப்பிணித் தாய்மார்கள் அடங்கிய குடும்பங்களைச் சேர்ந்த மேலும் 150 பேர் திங்களன்று முகாம்களில் இருந்து விடுவிக்கப்பட்டு, தமது ஆலயத்தில் தங்கியிருப்பதற்காக அதிகாரிகளினால் கொண்டு வந்து விடப்பட்டுள்ளதாக ஆலய அறங்காவலர் சபையின் செயலாளர் ஆ.நவரட்ணராஜா தெரிவித்துள்ளார்.

அத்துடன் கடந்த 3 ஆம் திகதி முகாம்களில் இருந்து விடுவிக்கப்பட்டு, வவுனியா பஸ் நிலையத்தில் இறக்கி விடப்பட்ட கர்ப்பிணித் தாய்மார்கள் அடங்கிய குடும்பங்களைச் சேர்ந்த 70 பேரும் தொடர்ந்தும் தமது ஆலயத்தில் தங்கிருப்பதாகவும் நவரட்ணராஜா தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் யாழ். தீவகத்தைச் சொந்த இடமாகக் கொண்ட 292 குடும்பங்களைச் சேர்ந்த 692 பேர் ஞாயிறன்று யாழ்ப்பாணத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்கள். இவர்கள் வேலணை மத்திய கல்லூரியிலும், காரைநகர் தோப்புக்காடு பகுதியிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களை அந்தந்த பிரதேச செயலாளர்களிடம் ஒப்படைத்து சொந்த இடங்களுக்கு உடனடியாக அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

ஏதிலிகளை களவாக வெளியேற்றியதில் பிரபல அரசியல்வாதிக்கு 200 கோடி ரூபா வருமானம் : சிங்கள நாளிதழ்


வவுனியா இடம்பெயர் முகாம்களிலிருந்து மக்களை சட்டவிரோதமாக வெளியேற்றும் செயற்பாட்டிற்காக பணம் அறவீடு செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த நடவடிக்கையின் மூலம் அரசியல்வாதி ஒருவர் 200 கோடி ரூபா பணத்தை வருமானமாக ஈட்டியுள்ளார் எனவும் பிரபல வார இறுதி சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

வடக்கு இடம்பெயர் முகாம்களிலிருந்து இதுவரையில் சுமார் 20,000 பேர் சட்டவிரோதமாக வெளியேற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இடம்பெயர் முகாம்களிலிருந்து மக்களை சட்டவிரோதமான முறையில் வெளியேற்றும் செயற்பாடுகளுடன் பிரபல அரசியல்வாதி ஒருவரும் அவரது சகோதரரும் தொடர்புபட்டிருப்பதாகக் குறிப்பிடப்படுகிறது.

இந்த நடவடிக்கையின் மூலம் குறித்த அரசியல்வாதி 200 கோடி ரூபா பணத்தை வருமானமாக ஈட்டியுள்ளார்.

முகாம்களிலிருந்து மக்களை வெளியேற்றி அவர்களை வவுனியா அல்லது கொழும்பிற்கு அழைத்துச் செல்லும் நடவடிக்கைகளுக்காக இந்தப் பணம் அறவீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் இவ்வாறு பணத்தைக் கொடுத்து தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறெனினும், நினைத்தவாறு இடம்பெயர் முகாமிலிருந்து எவராலும் வெளியேறிச் செல்ல முடியாது என அனர்த்த நிவாரண மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் ரிசாட் பதியூதீன் தெரிவித்துள்ளார்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

இடம்பெயர்ந்த மக்களை வலுக்கட்டாயமாக முகாம்களில் தடுத்து வைத்துள்ளமை அரசமைப்புக்கு முரணானது! தமிழ், முஸ்லிம் கட்சிகள் கூட்டறிக்கை!


மோதல்கள் காரணமாக இடம்பெயர்ந்த மக்களை வலுக்கட்டாயமாக முகாம்களில் தடுத்து வைத்துள்ளமை இலங்கையின் அரசமைப்புக்கு முரணானது சர்வதேச மனிதாபிமானச் சட்டங்களை மீறும் செயல் என ஐந்து தமிழ், முஸ்லிம் கட்சிகள் கூட்டாகச் சுட்டிக்காட்டியிருக்கின்றன. இந்த மக்களை உடனடியாக விடுவிக்குமாறும் அக்கட்சிகள் கோரியுள்ளன.

இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பில் ஆர். சம்பந்தன், ஜனநாயக மக்கள் முன்னணி சார்பில் அதன் தலைவர் மனோ கணேசன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் தலைவர் ரவூப் ஹக்கீம், தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் வீ. ஆனந்தசங்கரி, அகில இலங்கை ஐக்கிய முன்னணி சார்பில் கே.விக்னேஸ்வரன் ஆகியோர் ஒப்பமிட்டு கூட்டாக விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் அனைவரும் தமது பகுதிகளுக்குச் செல்வதற்கான உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும். பொதுமக்கள் மீது திணிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளும்இ இராணுவ நிர்வாகமும் முடிவுக்குக்கொண்டு வரப்பட்டு முழுமையான சிவில் நிர்வாகம் ஏற்படுத்தப்படவேண்டும் என்றும் அந்த அறிக்கையில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இலங்கையில் பல்லாயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்தவர்களுக்கான முகாம்களில் வலுக்கட்டாயமாக தடுத்துவைக்கப்பட்டுள்ளமை சட்டவிரோதமானது; அரசமைப்பிற்கு முரணானது; சர்வதேச மனித உரிமை வழக்காறுகளுக்கு எதிரானது. இந்த மக்கள் உடனடியாக தமது வீடுகளுக்குத் திரும்புவதற்காக விடுவிக்கப்படவேண்டும்.

தமது வாழ்வாதாரத்தை எவ்வித இடையூறுமின்றி ஆரம்பிப்பதற்கும் அல்லது தமது உறவினர்கள், நண்பர்களுடன் தங்குவதற்கும், தமது விருப்பத்தின்படி வேறு எங்காவது தங்குவதற்கு உள்ள உரிமையை பயன்படுத்துவதற்கும் அனுமதிக்கப்படவேண்டும். குற்றவியல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளவுள்ளவர்களை மேலும் தாமதமின்றி நீதிமன்றில் ஆஜராக்கவேண்டும். முகாம்கள் திறந்திருக்க வேண்டும் முகாம்கள் நீடித்திருக்கும் காலம்வரை உறவினர்கள், மதகுருமார், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், ஐ.நா. அமைப்புகள், ஊடகவியலாளர்கள், உள்நாட்டு சர்வதேச மனிதாபிமான அமைப்புகள் செல்வதற்கு ஏற்றவகையில் அவை திறந்திருக்கவேண்டும்.

வடபகுதியிலிருந்து வெளியேற்றப்பட்ட மிக மோசமான துயரங்களை இரண்டு தசாப்பதங்களாக அனுபவித்துள்ள முஸ்லிம் மக்கள் தமது பகுதிகளுக்குத் திரும்பி தமது வாழ்வாதாரத்தை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும். இதேபோன்று கிழக்கில் தொடர்ந்தும் இடம்பெயர்ந்த நிலையிலுள்ள அனைவரையும் தமது சொந்த இடங்களில் மீளக்குடியேற்றவேண்டும்.

வடமாகாணம் மற்றும் கிழக்கில் சில பகுதிகளுக்குச் செல்வதற்கும் அங்கிருந்து வருவதற்கும் விதிக்கப்பட்டுள்ள தடைகள் நீக்கப்படவேண்டும். இதற்கு அனுமதிப்பத்திரம் வழங்கும் முறையும் அடிப்படை உரிமையை மீறுவதாகும். இதுவும் நீக்கப்படவேண்டும். வடபகுதியில் காணப்படும் ஊரடங்குச் சட்டம் மற்றும் இயல்பு நிலை மீதான கட்டுப்பாடுகள் நியாயப்படுத்த முடியாதவை எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

ஆனந்தகுமாரசாமி முகாமில் கைதான 19 பேரும் நீதிமன்றத்தினுடாக விடுதலை

ஆனந்தகுமாரசாமி முகாமில் நடத்தப்பட்ட சுற்றி வளைப்பின்போது விசாரணைக்காகக் கொண்டு செல்லப்பட்ட 19 பேரும் ஞாயிறன்று வவுனியா மாவட்ட நீதிபதியின் இல்லத்தி்ல், அவரது முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டனர். நீதிமன்றத்தின் ஊடாக இவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில தினங்களுக்கு முன்னர், ஆனந்தகுமாரசாமி முகாமைச் சேர்ந்தவர்கள், இராமநாதன் முகாமுக்குச் சென்றபோது இராணுவத்தினரால் மறிக்கப்பட்டனர். இதனால் ஏற்பட்ட அசம்பாவித சம்பவத்தையடுத்து கைது செய்யப்பட்ட 19 பேருமே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவத்தில் 6 பேர் காயமடைந்ததாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகியிருந்தன என்பது குறி்ப்பிடத்தக்கது.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

நலன்புரி முகாம்கள் மிருகக்காட்சிசாலைகளல்ல - அரசாங்கம் தெரிவிப்பு


இடம்பெயர்ந்த மக்கள் தங்கியுள்ள நலன்புரி முகாம்கள் மிருகக்காட்சி சாலை அல்ல. அது மக்கள் தற்காலிகமாக தங்கியுள்ள இடங்களாகும்.

எதிர்க்கட்சியினருக்கு கண்டுகளிப்பதற்கு இடம் தேவைப்படின் நாட்டில் உள்ள மிருகக்காட்சிச்சாலை மற்றும் உடவளவை போன்ற இடங்களுக்கு செல்லலாம் என்று அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான அனுர பிரியதர்ஷன தெரிவித்தார்.

முறையாக கோரிக்கை விடுத்த எதிர்க்கட்சி எம்.பி.களுக்கு முகாம்களுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் எதிர்க்கட்சியினருக்கு அங்குசெல்ல ஆர்வம் இல்லை என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று வியாழக்கிழமை காலை நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அமைச்சர் இந்த விடயத்தை கூறினார்
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

வவுனியா பூந்தோட்ட கல்வியல் கல்லூரி முகாமில் மக்களுக்கும் இராணுவத்துக்குமிடையில் மோதல், ஒருவர் பலி

Photobucketவவுனியா பூந்தோட்ட கல்வியல் கல்லூரி முகாமில் மக்களுக்கும் இராணுவத்திற்கும் இடையில் முறுகல் நிலைஏற்பட்டது.

இம் முறுகல் நிலை மோசமாகி கிளிநொச்சியைச் சேர்ந்த ஒருவர் பலியானதுடன் பலர் காயத்திற்குள்ளாகினார்.

இறந்தவர் 5 பிள்ளைகளின் தந்தையான ஸ்ரீசந்திரமோகன் என்பவர் ஆவார்.

கிளிநொச்சி கனகபுரத்தைச் சேர்ந்த இவர் ஒரு கூலித்தொழிலாளி என்பது குறிப்பிடத்தக்கது.

இம்முறுகல் நிலை மோசமாகி வவுனியா பூந்தோட்ட கல்வியல் கல்லூரி முகாமை அண்டியுள்ள மக்களும் ஒன்றுதிரண்டு மோதியதனால், இராணுவம் மிகவும் மோசமாக மக்களை அடித்து முறுகல் வலுவடைந்து கொண்டிருக்கின்றது.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

செட்டிகுளம் மெனிக்பாம் நலன்புரி நிலையத்திற்குள் கொண்டு செல்லவிருந்த துப்பாக்கி ரவைகள் மீட்பு,


வவுனியா செட்டிகுளம் மெனிக்பாம் நலன்புரி நிலையத்திற்குள் ஆட்டோவில் கொண்டு செல்லப்படவிருந்த இரண்டு துப்பாக்கி ரவைகளை படையினா இன்று மீட்டுள்ளதாக தேசிய பாதுகாப்பு தொடர்பிலான ஊடக மத்திய நிலையம் அறிவித்துள்ளது. ரி56 ரக துப்பாக்கிகளுக்குப் பயன்படுத்தப்படுத்தக் கூடியவையே மீட்கப்பட்ட ரவைகள் என்று படையினர் குறிப்பிட்டுள்ளனர். நலன்புரி நிலையத்திற்குள் வெற்றிலை மற்றும் புகையிலை என்பவற்றைக் கொண்டுசெல்லும் ஆட்டோவொன்றில் இந்த துப்பாக்கி ரவைகள் மறைத்து வைத்து கொண்டு செல்லப்பட்டுள்ளன. அத்துடன் குண்டுகளுடன் இணைக்கப்பட்டிருந்த மீள்வலு சேர்க்கக்கூடிய 02 பற்றரிகளையும் படையினர் கைப்பற்றியுள்ளனர்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

சொந்த இடங்களில் மக்கள் குடியமர்ந்தாலே கிழக்கில் மீள்குடியேற்றம் முழுமையுறும் : முன்னாள் எம்.பி.



மூதூர் கிழக்கு உயர் பாதுகாப்பு வலயம் காரணமாக தமது இருப்பிடங்களை இழந்துள்ள குடும்பங்கள் தமது சொந்த கிராமங்களில் மீளக் குடியேறும் போது தான் கிழக்கு மாகாணத்தில் மீள் குடியேற்றம் என்பது முழுமையடையும்" என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராஜா கூறினார்.

மூதூர் இடம் பெயர்ந்தோர் நலன்புரிச் சங்கம் மட்டக்களப்பு கொக்குவில் இடைத்தங்கல் முகாமில் ஏற்பாடு செய்த 'உதவியவர்களுக்கு நன்றி' நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றிய போது,

"கிழக்கு மாகாணத்தில் நிலவிய யுத்த சூழ்நிலையின் போது இடம்பெயர்ந்த மக்களுக்கு சகலரும் விரும்பியவாறு நிவாரண உதவிகளை வழங்கக் கூடியதாக இருந்தது.

முகாம்களில் மக்கள் தங்க வைக்கப்பட்டிருந்தாலும் சுதந்திரமாக நடமாடக்கூடியதாக இருந்தது. ஆனால் வன்னியில் ஏற்பட்ட யுத்த சூழ்நிலை காரணமாக இடம்பெயர்ந்த மக்கள் சுதந்திரமாக நடமாட முடியாமல் முகாம்களில் முடங்கிக் கிடக்கின்றார்கள். உங்களுடன் ஒப்பிடும் போது அவர்களை விட நீங்கள் மேலான நிலையிலேயே இருக்கின்றீர்கள்.

மூதூர் பிரதேசத்திலிருந்து 2006ஆம் ஆண்டு இடம் பெயர்ந்தவர்களில் அநேகமானோர் தமது சொந்தக் கிராமங்களில் மீள் குடியேற்றப்பட்டு விட்டார்கள்.

ஆனால் சம்பூர், கூனித்தீவு மற்றும் கடற்கரைச்சேனை ஆகிய கிராமங்களைச் சேர்ந்த குடும்பங்கள் உயர் பாதுகாப்பு வலயம் காரணமாக சொந்த இடங்களில் மீளக் குடியமர முடியாதவர்களாக உள்ளனர்.அவர்களும் தமதுசொந்த கிராமங்களில் மீளக் குடியேற வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்" என்றும் குறிப்பிட்டார். சங்கத் தலைவர் குமாரசாமி நாகேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு - திருமலை ஆயர் பேரருட்திரு. கிங்ஸ்லி சுவாம்பிள்ளை, எகெட் நிறுவன பணிப்பாளர் அருட்தந்தை சில்வெஸ்டர் ஸ்ரீதரன், புனர்வாழ்வுத் திட்ட உதவிப் பணிப்பாளர் ஏ.எல்.எம். ஷெரீப் உட்படப் பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

மற்றுமொரு தொகுதி மக்கள் கிளிவெட்டிக்கு இன்று அனுப்பி வைப்பு

மூதூர் கிழக்கு உயர் பாதுகாப்பு வலயம் காரணமாக மீள் குடியேற்றமின்றி 2006 ஆம் ஆண்டு முதல் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள நலன்புரி நிலையங்களில் தங்கியிருந்த குடும்பங்களில் மற்றுமொரு தொகுதியாக 32 குடும்பங்களைச் சேர்ந்த 109 பேர் இன்று கிளிவெட்டி இடைத்தரிப்பு முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

சத்துருக்கொண்டான் நலன்புரி நிலையத்தில் தங்கியிருந்த 25 குடும்பங்களைச் சேர்நத 82 பேரும், ஆலன்குளம் நலன்புரி நிலையத்தில் தங்கியிருந்த 7 குடும்பங்களைச் சேர்ந்த 27 பேரும் என 05 பஸ்களில் வெருகல் ஊடாக அதிகாரிகளினால் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர் என மாவட்ட புனர்வாழ்வுத் திட்ட உதவிப்பணிப்பாளர் ஏ.எல்.எம். சரீப் தெரிவித்தார்.
குறிப்பிட்ட உயர் பாதுகாப்பு வலயம் காரணமாக தமது இருப்பிடங்களை இழந்துள்ள சம்பூர் கிழக்கு, சம்பூர் மேற்கு, கூனித்தீவு மற்றும் கடற்கரைச்சேனை ஆகிய கிராம சேவையாளர் பிரிவுகளைச் சேர்ந்த 1523 குடும்பங்களைச் சேர்ந்த 6074 பேரில் 745 குடும்பங்களைச் சேர்ந்த 2565 பேர் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 11 முகாம்களிலும் உறவினர்கள், நண்பர்கள் வீடுகளிலும் தங்கியிருந்தனர்.
அதிகாரிகள் தெரிவித்த தகவல்களின் படி,
மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரை பலாச்சோலை, மாவடிவேம்பு, கிரிமுட்டி, ஆரையம்பதி ஆதிவைரவர் கோவிலடி முகாம் சத்துருக்கொண்டான் இலக்கம் -01, 02 பாலமீன்மடு இலக்கம் 01, இலக்கம் 02, சிங்கள மகா வித்தியாலயம் மற்றும் ஆலங்குளம் ஆகிய முகாம்கள் மூடப்பட்டுள்ளன.
8 கட்டங்களில் கடந்த ஜூன் 16ஆம் திகதி முதல் இன்றுவரை 368 குடும்பங்களைச் சேர்ந்த 1330 பேர் இது வரை அங்கு அழைத்துச் செல்லப்பட்டு கிளிவெட்டி, பட்டித்திடல் மற்றும் தில்லாங்கேணி ஆகிய இடங்களில் தற்காலிகமாக குடியமர்த்தப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள ஏனைய குடும்பங்களைப் பொறுத்தவரை சாஹிரா வித்தியாலயம நலன்புரி நிலையத்தில் தங்கியுள்ள 106 குடும்பங்களைச் சேர்ந்த 349 பேரும் எதிர்வரும் 24ஆம் திகதியும்-
கொக்குவில் நலன்புரி நிலையத்தில் தங்கியுள்ள 97 குடும்பங்களைச் சேர்ந்த 321 பேர் 30ஆம் திகதியும் அங்கு அனுப்பி வைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாகக் கூறும் மாவட்ட புனர்வாழ்வுத் திட்ட உதவிப் பணிப்பாளர் ஏ.எல்.எம். சரீப் தெரிவித்தார்.
இதன் பிரகாரம் மூதூர் கிழக்கிலிருந்து இடம் பெயர்ந்தோர் மட்டக்களப்பு மாவட்டத்தில் தங்கியிருந்த அனைத்து நலன்புரி நிலையங்களும் மூடப்பட்டு விடும் என்றும் அவர் குறிப்பிட்டார்
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

மீள்குடியேற்றத்திற்காக அழைத்து வரப்பட்ட மக்களைச் சந்தித்தார் கி.மா. முதலமைச்சர்

வவுனியா இடைத் தங்கல் முகாமிலிருந்து மீள் குடியேற்றத்திற்காக அழைத்து வரப்பட்டு தற்போது குச்சவெளி பிரதேச பாடசாலையில் தங்க வைக்கப்பட்டுள்ள திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த குடும்பங்களை நேற்று கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் நேரில் சென்று பார்வையிட்டு உரையாடினார்.

மீள் குடியேற்றத்திற்காக அழைத்து வரப்பட்டுள்ள தாங்கள் சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படாமல் 4 - 5 நாட்கள் கடந்து விட்ட நிலையிலும் தொடர்ந்தும் இங்கு தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் உறவினர்கள் வந்து பார்வையிடுவதற்குக் கூட அனுமதி மறுக்கப்படுவதாகவும் இம்முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்கள் முதலமைச்சரிடம் சுடடிக் காட்டினர்.
பாதுகாப்பு தொடர்பான விபரங்களைப் பதிவு செய்வதன் காரணமாகவே மக்களை வீடுகளுக்கு அனுப்பி வைப்பதில் தாமதங்கள் ஏற்பட்டுள்ளதாகப் பாதுகாப்பு தரப்பு மூலம் தன்னால் அறிய முடிந்துள்ளதாகவும் வீடுகளுக்கு அனுப்பும் வரை உறவினர்கள் பார்வையிடுவதற்கான அனுமதியை அளிப்பது தொடர்பாக உரிய பாதுகாப்பு அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு நடவடிக்கை எடுப்பதாகவும் அமைச்சர் உறுதியளித்துள்ளார்
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS
Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates