jkr

முகாம்களில் உள்ள கர்ப்பிணித்தாய்மார்களின் குடும்பத்தினரை சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கும் நடவடிக்கையின் மூலம் கடந்த 29 ஆம் சிவன்கோவிலில் 124 பேர் தங்க வைக்கப்பட்டிருந்தனர். இவர்களை அதிகாரிகள் இன்று (திங்கள்) யாழ்ப்பாணத்திற்கு அனுப்

முகாம்களில் உள்ள கர்ப்பிணித்தாய்மார்களின் குடும்பத்தினரை சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கும் நடவடிக்கையின் மூலம் கடந்த 29 ஆம் சிவன்கோவிலில் 124 பேர் தங்க வைக்கப்பட்டிருந்தனர். இவர்களை அதிகாரிகள் இன்று (திங்கள்) யாழ்ப்பாணத்திற்கு அனுப்பியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களுக்குரிய சரியான ஆவணங்களின்றி இவர்களது பிரயாணத்திற்கு அனுமதி வழங்க முடியாது என இராணுவத்தினர் தெரிவித்திருந்தனர். இதனையடுத்து, இவர்கள் வவுனியா கோவில்குளம் சிவன்கோவில் கல்யாண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தார்கள் என்பது தெரிந்ததே.

இவர்களை யுஎன்எச்சிஆர் அதிகாரிகள் ஆலயத்திற்கு வந்து திங்களன்று காலையிலேயே அழைத்துச் சென்று யாழ்ப்பாணத்திற்கு அனுப்பி வைத்ததாக சிவன்கோவில் அறங்காவலர் சபையினர் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை, கர்ப்பிணித் தாய்மார்கள் அடங்கிய குடும்பங்களைச் சேர்ந்த மேலும் 150 பேர் திங்களன்று முகாம்களில் இருந்து விடுவிக்கப்பட்டு, தமது ஆலயத்தில் தங்கியிருப்பதற்காக அதிகாரிகளினால் கொண்டு வந்து விடப்பட்டுள்ளதாக ஆலய அறங்காவலர் சபையின் செயலாளர் ஆ.நவரட்ணராஜா தெரிவித்துள்ளார்.

அத்துடன் கடந்த 3 ஆம் திகதி முகாம்களில் இருந்து விடுவிக்கப்பட்டு, வவுனியா பஸ் நிலையத்தில் இறக்கி விடப்பட்ட கர்ப்பிணித் தாய்மார்கள் அடங்கிய குடும்பங்களைச் சேர்ந்த 70 பேரும் தொடர்ந்தும் தமது ஆலயத்தில் தங்கிருப்பதாகவும் நவரட்ணராஜா தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் யாழ். தீவகத்தைச் சொந்த இடமாகக் கொண்ட 292 குடும்பங்களைச் சேர்ந்த 692 பேர் ஞாயிறன்று யாழ்ப்பாணத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்கள். இவர்கள் வேலணை மத்திய கல்லூரியிலும், காரைநகர் தோப்புக்காடு பகுதியிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களை அந்தந்த பிரதேச செயலாளர்களிடம் ஒப்படைத்து சொந்த இடங்களுக்கு உடனடியாக அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "முகாம்களில் உள்ள கர்ப்பிணித்தாய்மார்களின் குடும்பத்தினரை சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கும் நடவடிக்கையின் மூலம் கடந்த 29 ஆம் சிவன்கோவிலில் 124 பேர் தங்க வைக்கப்பட்டிருந்தனர். இவர்களை அதிகாரிகள் இன்று (திங்கள்) யாழ்ப்பாணத்திற்கு அனுப்"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates