jkr
แสดงบทความที่มีป้ายกำกับ அம்பாறை แสดงบทความทั้งหมด
แสดงบทความที่มีป้ายกำกับ அம்பாறை แสดงบทความทั้งหมด

அக்கரைப்பற்றில் ஐ.தே.க.ஆதரவாளர்கள் பயணித்த வாகனங்கள்மீது கல்வீச்சு


அம்பாறையிலிருந்து திருக்கோயில் நோக்கி 30க்கும் மேற்பட்ட வாகனங்களில் சென்ற ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்கள் மீது நடத்தப்பட்ட சரமாரியான கல்வீச்சுத் தாக்குதலுக்கு இலக்காகி 20 பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் அக்கரைப்பற்று, அம்பாறை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் நேற்று பிற்பகல் 1.30 மணியளவில் அக்கரைப்பற்று அரசடிப்பகுதியில் இடம் பெற்றுள்ளது.

இந்த தாக்குதலை அடுத்து மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் பள்ளிக்குடியிருப்பு பிரதேசத்தில் இரகசியமான முறையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் அடங்கிய வெள்ளை வேன் ஒன்றை கைப்பற்றிய பொலிஸார் அதிலிருந்து 8 பேரையும் கைது செய்துள்ளனர்.

இந்தச் சம்பவம் அக்கறைப்பற்றுப் பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாகாண சபை உறுப்பினர்களான தயா கமகே, சந்திரதாஸ கலப்பதி, மற்றும் வசந்த பியதிஸ்ஸ எம்.பி. ஆகியோர் தலைமையில் அக்கறைப்பற்று தம்பிலுவில், திருக்கோயில், பொத்துவில் ஊடாக இந்த வாகனப் பேரணி செல்ல முற்பட்ட போதே இந்தத் தாக்குதல் இடம் பெற்றுள்ளது.

ஐ.தே.க. ஆதரவாளர்கள் மீதான தாக்குதலை அடுத்து அக்கறைப்பற்று பொலிஸ் நிலையத்திற்கு சென்ற கிழக்கு மாகாண சபை உறுப்பினர் தயா கமகே தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டார்.

தாக்குதலை அடுத்து ஐ.தே.க. ஆதரவாளர்கள் திருக்கோயில் செல்லுவதற்கு பொலிஸார் அனுமதி அளிக்கவில்லை. இதனால் பொலிஸாருக்கும் தயா கமகே தலைமையிலான குழுவினருக்குமிடையில் முறுகல் நிலை ஏற்பட்டது.

பொலிஸாரின் தடையினை அடுத்து அக்கறைப்பற்று நகரின் மத்தியில் உள்ள மணிக்கூட்டுக்கோபுரத்திற்கு அருகில் இவர்கள் கூட்டமொன்றினை நடாத்தினர்.

கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது கூட்டத்தில் கலந்து கொண்டோர் மீதும் கல் வீச்சு நடத்தப்பட்டது. இந்தக் கல்வீச்சில் ஈடுபட்ட சிலர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

ஐ.தே..க ஆதரவாளர்கள் மீதான தாக்குதல் மற்றும் கூட்டம் என்பவற்றினால் அக்கறைப்பற்று நகரம் சில மணிநேரம் பதற்றத்திற்குள்ளாகி இருந்தது. இங்கு கடைகளும் மூடப்பட்டதுடன் பொதுமக்களின் நடமாட்டமும் குறைந்திருந்தது
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

தோணக்கிழப்புப் பகுதியிலிருந்து ஆணொருவரின் சடலம் கரையொதுங்கியது


அம்பாறை, கல்முனை, பெரியநீலாவணை, தோணக்கிழப்புப் பகுதியிலிருந்து ஆணொருவரின் சடலம் கரையொதுங்கியுள்ளது. தோணக்கிழப்பு பகுதியில் கரையொதுங்கிய குறித்த சடலத்தை இன்றுகாலையில் மீட்டுள்ளதாக கல்முனைப் பொலீசார் தெரிவித்துள்ளனர். கரையொதுங்கிய சடலம் 40வயது மதிக்கத்தக்கவருடையதென்றும் பொலீசார் குறிப்பிட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்முனைப் பொலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

அம்பாறை மாவட்டத்தில் பெருவெள்ளம் :


அம்பாறை மாவட்டத்தில் பெய்துசவரும் அடைமழை காரணமாக அக்கரைப்பற்றையடுத்துள்ள நாவற்காடு கிராமம் முற்றாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. வறுமைக்கோட்டுக்கு கீழுள்ள மக்கள் அதிகம் வாழும் இப்பிரதேசத்தில் உள்ள ஓலைகளால் வேயப்பட்டவீடுகள் பல வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

அன்றாடம் கூலித்தொழில்புரிந்து வாழ்கையை ஓட்டிவரும் பலர் இவ்வெள்ளத்தால் கஸ்டங்களை சந்தித்துள்ளனர்.

பிரதேசத்திற்கு நேற்று விஜயம் செய்த கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பி.செல்வராஜா வெள்ள நிலைமைகளைப் பார்வையிட்டார். ஆன்றாடம் தொழில்புரிந்து
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

அம்பாறை மாவட்டத்தில் மஹிந்தவை ஆதரித்து பிரச்சாரங்கள் ஆரம்பம்.


ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கு ஆதரவு தெரிவிக்கும் பிரச்சாரப் பணிகள் இனியபாரதி அவர்களின் தலைமையில் அம்பாறை மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டத்திற்கான ஜனாதிபதி இணைப்பாளர் இனியபாரதி அவர்களால் நேற்று காரைதீவு பிரதேசத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்ட நிகழ்வுகளில் கட்சியின் ஆதரவாளர்கள் பலர் கலந்திருந்ததை காணமுடிந்தது.

காரைதீவு பிரதேச சபையின் பிரதித் தவிசாளரும் அமைச்சர் முரளிதரனின் அம்பாறை மாவட்ட இணைப்பாளருமான வீரகத்தி கிருஸ்ணமூர்த்தி, மற்றும் பிரதேச பிரமுகர்கள் பலரும் பிரச்சார பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

அம்பாறை இராணுவ முகாம் பகுதியில் குண்டுவெடிப்பு :


அம்பாறை இராணுவ முகாம் பகுதியில் இன்று நண்பகல் 11.30 இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவமொன்றில் மூவர் காயமடைந்து அம்பாறை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

அக்கரைப்பற்றில் முன்னாள் விடுதலைப் புலி சந்தேகநபர் கைது


அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்றில் விடுதலைப் புலி உறுப்பினர் என சந்தேகிகப்படும் இளம் யுவதியொருவர் விசேட புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டு அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

திருக்கோவில் காயத்திரி கிராமத்தைச் சேர்ந்த யாழ்நதி எனப்படும் தங்கவடிவேல் யுகிர்தா என்ற இளம் பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

ஏற்கனவே முன்பள்ளி ஆசிரியையாக சேவையாற்றிய இப் பெண் 2005 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்ததாகவும் கடந்த ஏப்ரலில் மாதம் அந்த அமைப்பிலிருந்து விலகி பெற்றோருடன் இணைந்து கொண்டதாகவும் கூறப்படுகின்றது.

கடந்த சனிக்கிழமை தனது தாயுடன் அம்பாறை வைத்திசாலைக்கு செல்வதற்காக வீட்டிலிருந்து ஆட்டோவில் அக்கரைப்பற்று வரை பயணம் செய்து அங்கிருந்து அம்பாறைக்கு தனியார் பஸ் வண்டியில் பயணம் செய்து கொண்டிருந்த வேளை ஆலிம் நகர் என்னுமிடத்தில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் தொடர்பாக கிடைத்த கவலையடுத்து வாகனமொன்றில் சென்ற பொலிஸார் குறித்த தனியார் பஸ் வண்டியை வழிமறித்து இவரை விசாரணைக்காக அழைத்துச் சென்றதாக இவரது கைது தொடர்பாகக் கூறப்படுகின்றது.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

பெண் புலிகளின் பிராந்திய பொறுப்பாளர் அம்பாறையில் கைது!


அம்பாறையில் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது பெண் புலிகளின் பிராந்திய பொறுப்பாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். படையினருக்கு கிடைத்த தகவலை அடுத்து நடத்திய தேடுதலின் போது இவர் கைது செய்யப்பட்டதாக அதிரடிப் படையினர் தெரிவித்துள்ளனர்.

இது போன்றதொரு மற்றொரு தேடுதல் நடவடிக்கையின் போது வவுனியாவில் வைத்து புலிகளின் உயர் மட்ட போராளி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் இன்றையதினம் தெரிவித்து உள்ளனர்
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

அம்பாறையில் நடந்தது என்ன? அலசுகிறது நவமணி.

அம்பாறை மாவட்டத்தில் வளர்ந்து வரும் தமிழ் முஸ்லிம் உறவைச் சீர்குலைப்பதற்காக இனக்கலவரமொன்றைத் தூண்டி விடுவதற்கான மறைமுகமான சதியொன்று இடம்பெற்று வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. போராளிகளாக இருந்து ஜனநாயக நீரோட்டத்துக்கு வந்துள்ள தேசிய அரசியல் கட்சி ஒன்றில் அங்கம் வகிக்கும் ஒரு குழுவினரின் கடந்த சில மாதங்களாக மேற்கொண்டு வரும் தொடர்ச்சியான சம்பவங்களே இச்சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தமிழ் முஸ்லிம் ஒற்றுமையை கட்டியெழுப்பும் வகையில் செயற்பட்டு வருவதனை விரும்பாத சக்திகள் அவரை அம்பாறை மாவட்டத்துக்கு வரக்கூடாதென்றும் அவரது கட்சி அலுவலகங்கள் திறக்கப்படக்கூடாது எனவும் கூறி மாவட்டத்தில் பேரணி ஹர்த்தால்களை நடத்தி மாவட்டத்தில் குழப்ப நிலையை உருவாக்கி வருகின்றனர். அம்பாறை மாவட்டத்தைச் சாராதவர்கள் தலைமைத்துவம் வழங்கி நடத்தும் இந்தச் செயற்பாடுகளில் முக்கியமாக கல்முனை நகரின் ஹிஜ்ரா வீதியை பாரதி வீதி என மாற்றியுள்ளதோடு பெரிய நீலாவணையில் போடப்பட்டிருந்த கல்முனை வரவேற்கின்றது என்ற விளம்பரப் பலகையும் இவர்களால் சில தினங்களுக்கு முன் உடைத்தெறியப்பட்டுள்ளது. (கருணா அவர்கள் முன் நின்று இதனை அகற்றினார்-மீன்மகள்) ஹிஜ்ரா வீதி பாரதி வீதி என மாற்றப்பட்டது தொடர்பான கல்முனை மேயர் எம்.எச்.எம். ஹரிஸிடம் நவமணி வினவியபோது இது தொடர்பாக மாநகர சபையில் எத்தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்றும் இது தொடர்பாக பொலிசில் தான் முறைப்பாடு செய்திருப்பதாகவும் கூறினார்.
பெரிய நீலாவணையில் போடப்பட்டிருந்த வரவேற்பு பலகை உடைக்கப்பட்டது தொடர்பாகவும் பொலிசில் முறைப்பாடு செய்துள்ளதாக மேயர் ஹரிஸ் தெரிவித்தார்.கல்முனை மாநகர சபை ஒருபோதும் தமிழ் மக்களுக்கு பாரபட்சம் காட்டிச் செயற்பட்டதில்லை எனச் சுட்டிக் காட்டிய அவர் கல்முனையில் வாழும் 30சதவீதமான தமிழர்களுக்கு அவர்களது விகிதாசாரத்திற்கேற்ப நிதி மற்றும் வளங்கள் ஒதுக்கப்பட்டு வருவதாகவும் இதற்கு மாநகர சபையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் உறுப்பினர்கள் சாட்சி பகர்வர் என்றும் கூறினார். இரு சமூகங்களும் ஒன்றுபட்டுச் செயற்பட வேண்டிய நிலையில் பிரிவினையை உருவாக்க முயற்சிப்பது ஏன் என்று புரியாததாகவுள்ளதாகவும் அவர் கூறினார். இக்குழுவின் இம் மாவட்டத்தில் உள்ள தமிழ் பாடசாலைகளை பலவந்தமாக மூடச்செய்வதுடன் எழுச்சிக் கூட்டமென்ற பெயரில் முஸ்லிம்களுக்கெதிரான நச்சு விதைகளை விதைத்து வருவதாகவும் தகவல்கள் தெரிவித்து வருகின்றன.
அவ்வாறான மிக முக்கிய கூட்டமொன்று கடந்த 17ம் திகதி நாவிதன் வெளி பிரதேசத்தில் உள்ள விவேகானந்தா மகாவித்தியாலயத்தில் நடத்தப்பட்டதாகவும் இதில் அரச உயர் அதிகாரிகள் பலவந்தமாக அழைத்துச் செல்லப்பட்டு உரையாற்ற வைக்கப்பட்டதாகவும் அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
30 வருடகால யுத்தத்தின் பின்னர் கிழக்கு உதயம் திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்டத்தில் பிரதான வீதிகள் கார்பட் இடப்பட்டு வீதி அமைப்பு முற்றாக மாற்றியமைக்கப்படுகிறது. இந்நிலையில் இக் கூட்டம் நடாத்திய ஹர்தால் காரணமாக வீதிகளில் டயர் போட்டு எரிக்கப்பட்டமையால் வீதிகள் யாவும் சேதமாக்கப்பட்டுள்ளன.மக்களின் விருப்பத்திற்கு மாறாகவே அவர்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபடுகின்றனர் என அறிய முடிகிறது. அதன் காரணமாக வீதியால் செல்லும் முஸ்லிம் மக்கள் அச்சத்துடன் செல்லவேண்டியுள்ளது.
அம்பாறை மாவட்டத்தில் இடம்பெற்று வரும் இவ் வன்முறைகள் தொடர்பாக தமிழ் புத்தி ஜீவிகள் கருத்து தெரிவிக்கையில் முப்பது வருடமாக இடம்பெற்ற வன்முறைகள், இனமுறண்பாடுகள், சந்தேகப்பார்வைகள் என்பவற்றில் இருந்து மக்கள் விடுபட்டு சந்தோசமாக இருந்து வருகையில் அரசியல் இலாபத்திற்காகவும் அதிகார மோகத்திற்காகவும் இனங்களை பிரித்துவைக்கும் நாடகமொன்று அரங்கேற்றப்படுகிறது.குpழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான் மிகவும் நல்லவர். ஆவரிடம் இன ரீதியான சிந்தனை இல்லை அவ்வாறான ஒருவர் கிழக்கில் முஸ்லிம் அரசியல்வாதிகளிடம் இணைந்து மாகாண சபைக்கான அதிகாரங்களை பெற்றுக் கொள்ள போராடுகின்றார். ஆனால், அவரது முனனைய சகபாடிகள் அவரை குறை கண்டு தூசிக்கின்றனர். இதில் என்ன நியாயம் இருக்கின்றது.



  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS
Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates