jkr
แสดงบทความที่มีป้ายกำกับ கொழும்பு แสดงบทความทั้งหมด
แสดงบทความที่มีป้ายกำกับ கொழும்பு แสดงบทความทั้งหมด

அமில தேரரை விடுவிக்கக் கோரி சத்தியாக்கிரகம்


நிதிமோசடிக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள தேசிய பிக்கு முன்னணியின் தலைவர் தம்பர அமில தேரரை உடனடியான விடுவிக்கக் கோரி இன்று பிற்பகல் கொழும்பில் சத்தியாக்கிரக போராட்டம் ஒன்று நடைபெற்றது.

கொழும்பு புறக்கோட்டை அரச மரச் சந்தியிலுள்ள விகாரைக்கு முன்பாக ஆரம்பமான சத்தியாக்கிரக போராட்டம் மாலைவரை தொடர்ந்தது.

தேசிய பிக்கு முன்னணியைச் சேர்ந்த பிக்குமார் பலரும் பொதுமக்களும் இந்த சத்தியாக்கிரக போராட்டத்தில் அமில தேரருக்கு ஆதரவாக கலந்துகொண்டிருந்தனர்.

பயங்கரவாதத்துக்கு எதிராக போராடிய தேரரை உடனடியாக விடுதலை செய்யுமாறு அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

குண்டுதாரியான விடுதலைப் புலிகளின் சிரேஷ்ட உறுப்பினர் கொழும்பில் கைது!


தலைகர் கொழும்பில் குண்டுத் தாக்குதல்களை நடாத்த திட்டமிட்டிருந்த விடுதலைப் புலிகளின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் குண்டுத் தாக்குதலை மேற்கொள்ள குறித்த நபர் முயற்சி மேற்கொண்டுள்ளாக விசாரணைகளின் மூலம் தெரிய வந்துள்ளது. கட்டுநாயக்க நிலையத்தில் வைத்து மேல்மாகாண புலனாய்வுப் பிரிவினரால் குறித்தநபர் கைது செய்யப்பட்டுள்ளார். தாக்குதல்களை மேற்கொள்ளும் நோக்கில் வவுனியா பிரதேசத்தில் புதைக்கப்பட்டிருந்த 12கிளைமோர் குண்டுகளும் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவி;க்கப்படுகிறது. விடுதலைப்புலி உறுப்பினர்களிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் மூலமே குறித்த நபரை கைது செய்ய முடிந்ததாகவும் பாதுகாப்பு தரப்பினர் மேலும் தெரிவிக்கின்றனர்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

புலிகளின் இணையதள நிர்வாகி அடித்தார் சேது அந்தர் பல்டி. மஹிந்தவிற்கு ஆதரவு தெரிவிக்க கொழும்பு விரைகின்றாராம்.


புலிகள் சார்பான இணையத்தளங்களில் நிதர்சனம்.கொம் எனும் இணையத் தளத்தினை நிர்வகித்து வந்தவரென கடந்தகாலங்களில் கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகியிருந்த சேது என அழைக்கப்படும் நடராஜா சேதுரூபன் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளரான மஹிந்தவிற்கு ஆதரவு வழங்கவிரும்புவதாக சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களில் ஒருவரான டாக்டர் லெவின் ரிசி ராஜசிங்கம் ஊடாக தெரியப்படுத்தியுள்ளாதாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.

மஹிந்தவிற்கு தனது ஆதரவினை தெரிவிக்க கொழும்பு விரையவுள்ள சேது என அழைக்கப்படும் நடராஜா சேதுரூபன், தமிழ் மக்களுக்கு இம்மாற்றம் தொடர்பாக விளக்கமளிக்கும் பொருட்டு ஊடகங்களில் தோன்றி சில நேர்காணல்களை வழங்கவுள்ளதாகவும் லங்காவெப் எனும் இணையத்தளம் தெரிவிக்கின்றது.

நிதர்சனம்.கொம் எனும் இணையத்தளத்தினை சேதுவே இயக்குவதாக வெளியாகியிருந்த விமர்சனங்களில் உண்மையிருந்தால், அவ் இணையம் தமிழ் மக்களுக்கு எவ்வாறான துரோகங்களை இழைத்திருக்கும் என்பதை ஊகித்துக் கொள்ளமுடிந்துள்ளது. அதே நேரம் சில ஆங்கில இணையங்களில் சேது புலிகளின் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் பொட்டுவின் வழிநடத்தலில் இயங்கும் நபர் என செய்திகள் வெளியாகிருந்ததும், அச்செய்திகளுக்கு எதிராக அவர் வழங்குகளை பதிவு செய்துள்ளார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

புலிகளும் அவ்வியக்கத்தின் ஆதரவாளர்களும் காலத்திற்கு காலம் மாறி மாறிவரும் அரசுகளுடன் இணைந்து தமிழ் மக்களை ஏமாற்றி வந்துள்ளனர் என்பதற்கு இவ்வாறான விடயங்கள் சான்றுபகிர்கின்றன
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

இலங்கை: இந்திய தூதரகமும் 'முள்வேலி'க்குள்தான்!


கொழும்பு: தமிழர்களை முள்வேலிச் சிறைக்குள் வைத்திருக்கிறது இலங்கை அரசாங்கம் என்றால், கொழும்பிலுள்ள இந்திய தூதரகமோ தனக்குத் தானே பெரிய முள்வேலி போட்டுக் கொண்டு, எந்த செய்தியும் வெளியே தெரிந்து விடாமல் தடுத்து வருவதாக இலங்கை பத்திரிகையாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

பொதுவாக வெளிநாட்டுக்கு செல்லும் இந்தியர்களுக்கு, அந்த நாட்டில் வழிகாட்டியாகவும், ஆதரவாகவும் இருக்கக் கூடியது சம்பந்தப்பட்ட இந்திய தூதரகங்கள்தான். ஆனால் கொழும்பில் செயல்படும் இந்தியத் தூதரகம் பத்திரிகையாளர்கள் உள்பட இந்தியர்கள் யாரும் நெருங்க முடியாத தீவாக உள்ளதாம்.

இந்தியத் தூதராக கோபால் காந்தி பொறுப்பேற்கும் வரை அதன் செயல்பாடுகள் இந்தியப் பத்திரிகையாளர்கள் மத்தியில் ஓரளவு வெளிப்படையாகத்தான் இருந்து வந்தது. சிவசங்கர மேனன் தூதராக இருந்தபோது, பத்திரிகையாளர்களுக்கு எந்தவித கட்டுப்பாடும் கிடையாது. செய்திகளை அளிக்கும்போது, பெயர் வெளியிட வேண்டாம் என்று மட்டும் கேட்டுக் கொள்வார்.

கோபால் காந்தி சிறப்பாக உபசரித்தாலும், தகவல்களை ஓரளவுதான் கூறுவார். ஆனால், டெல்லியில் இருந்து அமைச்சர்களோ, அதிகாரிகளோ வந்தால் தகவல் நிச்சயமாகத் தெரிவிக்கப்படும்.

நிருபமா ராவ் தூதரான பின்னர்தான் நிலைமை மிக மோசமாகிவிட்டதாம்.

தன்னைப் பாராட்டி வரும் செய்திகளை விரும்பும் அவர், எதிர்கருத்து வெளியிடுவோரை கடுமையாகச் சாடுவாராம்.

இதனால் இலங்கைப் பத்திரிகையாளர்களுடன் இவருக்கு எப்போதும் நல்லுறவே இருந்ததில்லை என்கிறார்கள்.

'இந்தியத் தூதரகத்தின் ஊதுகுழலாகவே இந்திய பத்திரிகையாளர்கள் செயல்பட வேண்டும் என அவர் எதிர்பார்க்கிறார்' என்பது பத்திரிகையாளர்கள் குற்றச்சாட்டு.

அலோக் பிரசாத்தின் அலம்பல்...

இந்த நிலையை மேலும் மோசமாக்கிய 'பெருமை' அலோக் பிரசாத்துக்கு உண்டு. அவர் பத்திரிகையாளர்களை அடியோடு தவிர்ப்பதும், தேவையற்ற வெறுப்பைக் கக்குகிறாராம். இலங்கையில் சீனா செயல்படுத்தி வரும் திட்டங்கள் குறித்து இந்திய அதிகாரிகள் ஆலோசனை மேற்கொள்ள வந்த செய்திகளை முழுமையாக மறைத்துள்ளார் அலோக் பிரசாத்.


வடக்குப் பகுதியில் கண்ணி வெடிகளை அகற்றும் பணியில் இரண்டு இந்தியக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர். ஆனால், காரணம் ஏதும் இல்லாமல் அதுபற்றிய அனைத்து செய்திகளையும் மறைத்துவிட்டாராம். ஆனால் கண்ணிவெடி விவகாரத்தை இந்திய மற்றும் இலங்கை அரசுகளே வெளிப்படையாக அறிவித்திருந்தது நினைவு கூறத்தக்கது.

பாஸிடிவ் செய்திகளைக் கூட வெளிவிடாமல் தடுப்பதில் எக்ஸ்பர்ட் அலோக் பிரசாத். விடுலைப் புலிகளுக்கு எதிரான போரின்போது வடக்கு மற்றும் கிழக்குப் பகுதியில் இந்தியா கட்டிய 2 மருத்துவமனைகளில் இந்திய டாக்டர்கள் பலரும் பணிபுரிந்த விஷயம் பற்றி நல்லவிதமாக எழுத முயன்ற பத்திரிகையாளர்களைக் கூட விரட்டிவிட்டார் அலோக் பிரசாத்.

இதனால் வந்திருந்த அனைத்து டாக்டர்களுமே உளவாளிகள்தானோ என்ற சந்தேகத்துடனே அனைத்து செய்திகளும் வெளிவந்தன.

தமிழகத்தைச் சேர்ந்த 10 எம்.பிக்கள் கொண்ட குழு அண்மையில் இலங்கை முகாம்களைப் பார்வையிட வந்த போது இந்தியத் தூதரகம் செய்தது கேவலத்தின் உச்சம். அவர்களின் பயணத் திட்டத்தை ஏதோ தேர்தல் அறிவிப்பு மாதிரி முதல்வர் கருணாநிதி இங்கே சொல்லிக் கொண்டிருக்க, இலங்கை பத்திரிகையாளர்களுக்கு அதுபற்றி எந்த விவரமும் சொல்லப்படவில்லை.

வந்திருந்த எம்பிக்களிடமும், "கட்டாயம் பத்திரிகையாளர்களிடம் நீங்கள் பேசவே கூடாது என்பது இந்திய அரசின் உத்தரவு" என்று கூறி வாயடைக்கச் செய்துவிட்டாராம் அலோக் பிரசாத். அதையும் மீறி திருமாவளவன் ஒரு சில நிருபர்களிடம் பேச, அவரை தடுத்திருக்கிறார் டி.ஆர்.பாலு.

அட அவ்வளவு ஏன்... இப்போது மகிந்த சகோதரர்களுக்கு பொன்சேகாவால் நெருக்கடி என்று தெரிந்ததும் அடித்துப் பிடித்துக் கொண்டு அடுத்த விமானமேறினாரே, நிதி அமைச்சர் பிரணாப்.... இந்த தகவல்கூட, யாருக்கும் சொல்லப்படாமல் ரகசியமாகவே வைக்கப்பட்டிருந்ததாம்.

ஆனால் மற்ற நாட்டுத் தூதரகங்கள் அப்படி இல்லை. தங்கள் நாட்டிலிருந்து உயர் அதிகாரிகள், பிரதிநிதிகள் மற்றும் அமைச்சர்கள் வரும்போது முறையாக அறிவித்து, பத்திரிகையாளர் சந்திப்பு நடத்துகின்றன.

ஆனால் நமக்கோ மடியில் எக்கச்சக்க கனம் போலிருக்கிறது... அதனால்தான் பத்திரிகையாளர்களைக் கண்டதும் ஜர்னோஃபோபியா'வில் சிக்கியவர்கள் மாதிரி ஆகிவிடுகிறார்கள் இந்திய தூதரக அதிகாரிகள்!!
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

அடைமழையால் நாடெங்கும் வெள்ளம் : அனர்த்த முகாமைத்துவ நிலையம்


நேற்றிரவு பெய்த அடை அழையால் நாட்டின் பல இடங்களில் வெள்ள ஏற்பட்டுள்ளது என்று அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

புறக்கோட்டை, மருதானை, மாளிகாவத்தை, மகரகம, தெஹிவளை, கடுவெல ஆகிய இடங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதாகவும் மேற்படி நிலையம் அறிவித்துள்ளது. இவை தவிர நாட்டின் ஏனைய பாகங்களிலும் வெள்ளம் ஏற்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதனால் கொழும்பின் பல வீதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

கொழும்பு இரவுவிடுதியில் துப்பாக்கிப் பிரயோகம், இருவர் படுகாயம்

Free MySpace Iconsகொழும்பு நாரஹென்பிட்டி திம்பிரிகஸ்யாய வீதியில் அமைந்துள்ள நைட் கிளப் ஒன்றுக்கு முன்பாக இன்று அதிகாலை 3.00மணியளவில் இடம்பெற்ற சூட்டுச் சம்பவத்தில் இருவர் காயமடைந்துள்ளனர். இரு குழுக்களிடையே இடம்பெற்ற மோதலின்போதே இந்த சூட்டுச் சம்பவம் இடம்பெற்றதாக பொலீஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஸ்ட பிரதிப் பொலீஸ் மாஅதிபர் நிமால் மெதிவக்க தெரிவித்துள்ளார். சம்பவத்தில் காயமடைந்தவர்கள் கொழும்பு தேசிய மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதுடன், இருரில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் பொலீஸ் ஊடகப்பேச்சாளர் கூறியுள்ளார். இதுபற்றிய விசாரணைகளை நாரஹென்பிட்டிய பொலீசார் நடத்தி வருகின்றனர். குறித்த இருவரும் இரவு விடுதியிலிருந்து வெளியேறி உந்துருளியொன்றில் புறப்படத் தயாரானபோது மற்றொரு உந்துருளியில் வந்தவர்கள் துப்பாக்கிப் பிரயோகம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

இந்தியக் கடனுதவியில் கொழும்பு-மாத்தறை ரயில் பாதை அபிவிருத்தி


கொழும்பு - மாத்தறை இடையிலான ரயில் பாதை அபிவிருத்திப் பணிகளுக்கு இந்திய அரசாங்கம் 100 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவியை வழங்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் மேற்படி ரயில் பாதையின் அபிவிருத்திப் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாகப் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கக் கூடியவாறு ரயில் பாதை அபிவிருத்தி செய்யப்படவுள்ளது. இதன் மூலம் கொழும்பிலிருந்து மாத்தறைக்கு 2 மணி நேரத்தில் செல்ல முடியும்.

இந்திய அரசாங்கத்தின் கடனுதவின் கீழ் இந்த ரயில் பாதையை அபிவிருத்தி செய்யப்படவுள்ளது. இதற்கென 100 மில்லியன் அமெரிக்க டொலர் செலவிடப்படவுள்ளது.

அபிவிருத்தி செய்யும் பணிகள் 3 கட்டங்களாக முன்னெடுக்கப்படும். முதற் கட்டம் மாத்தறையிலிருந்து காலி வரையும், இரண்டாம் கட்டம் காலியிலிருந்து களுத்துறை வரையும், 3ஆம் கட்டம் களுத்துறையிலிருந்து கொழும்பு வரையும் இடம்பெறவுள்ளது. இவ் அபிவிருத்திப் பணிகள் 2010 இறுதிக்குள் பூர்த்தியடையும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இதன் நிர்மாணப் பணிகளை இரு இந்திய அரச கம்பனிகள் முன்னெடுக்கவுள்ளன. கண்காணிப்புப் பணிகளை ரயில்வே திணைக்களம் மேற்கொள்ளவுள்ளது என அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

தண்ணீர் விவகாரம்: அமெரிக்க தூதரகத்திற்கு இலங்கை அரசு அபராதம்


கொழும்பு நகரில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் சட்டவிரோதமாக தண்ணீர் பயன்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறி இலங்கை அரசு சுமார் 3000 டாலர்கள் அபராதம் விதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொழும்பு நகரில் எண்.7, ஆல்பிரட் கிரசன்ட் பகுதியில் உள்ள அமெரிக்கத் தூதரக வளாகத்தில் தண்ணீர் சட்டவிரோதமாக பயன்படுத்தப்ட்டு வந்ததாக இலங்கை நீர்வடிகால் வாரியம் புகார் கூறியதன் அடிப்படையில் இந்த அபராதம் விதிக்கப்பட்டதாக இலங்கைத் தமிழர் ஆதரவு இணையதளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சமீபத்தில் சட்டவிரோதமாக மின்சாரத்தைப் பயன்படுத்தியதாக தூதரக அதிகாரிகளுக்கு இலங்கை மின்சாரத்துறை சுமார் 12 ஆயிரம் டாலர்கள் அபராதமாக விதித்தது என்றும் அந்த இணையதளங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

தெஹிவளை உயிரியல் பூங்காவிற்குள் பொலித்தீன் கொண்டுசெல்லத் தடை


கொழும்பு தெஹிவளையிலுள்ள தேசிய உயிரியல் பூங்காவிற்குள் சுற்றுலாப் பயணிகள் பொலிதீன் கொண்டு செல்வதைத் தடை செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தேசிய விலங்கியல் பூங்கா திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதனடிப்படையில் உயிரியல் பூங்காவிற்குள் பிரவேசிக்கும் சுற்றுலாப் பயணிகள் மீது சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளது. பூங்காவிலுள்ள விலங்கினங்களைப் பாதுகாக்கும் பொருட்டே இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. பூங்காவிற்கு வருகை தரும் பொதுமக்கள் விலங்கினங்களுக்குப் பொலிதீன் பொதிகளுடன் உணவுப் பொருட்களை வழங்குவதைத் தடுப்பதே இதன் நோக்கம் எனத் தேசிய விலங்கியல் பூங்கா திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

கொழும்பில் கர்ப்பப்பை சிகிச்சை பெற்ற பெண்ணின் வயிற்றுக்குள் ஒன்பது அடி நீளத்துணி மீட்பு, பெண் மரணம்

கர்ப்பப்பை தொடர்பான சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட பெண்ணொருவர், மூன்று நாட்கள் கழித்து மீண்டும் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டபோது அவரது வயிற்றுக்குள் இருந்து ஒன்பது அடி நீளமான பஞ்சுத் துணி வெளியில் எடுக்கப்பட்ட விபரீதம் கொழும்பு கோட்டை ஜெயவர்த்தனபுர வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளதுடன் குறித்த பெண் மூன்று நாட்களின் பின்னர் உயிரிழந்த பரிதாபமும் ஏற்பட்டுள்ளது. உயிரிழந்த பெண் கர்ப்பப்பை சத்திர சிகிச்சைக்காக செட்டம்பர் 15ம் திகதி குறித்த வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். எனினும் சத்திர சிகிச்சைக்கு பின்ன குறித்த பெண்ணின் நிலை மோசமடைந்ததையடுத்து திரும்பவும் மூன்று நாட்களின்பின் அவர் சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இவ்வாறு சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டபோது அவரது வயிற்றுக்குள்ளிருந்து ஒன்பது அடி நீளமான பஞ்சுத்துணி இருந்தமை வைத்தியர்களால் கண்டுபிடிக்கப்பட்டு அகற்றப்பட்டது. இந்நிலையில் மூன்று நாட்கள் கடந்ததும் அவர் உயிரிழந்துள்ளார். விசாரணைகள் தொடர்கின்றன.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS
Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates