இந்தியக் கடனுதவியில் கொழும்பு-மாத்தறை ரயில் பாதை அபிவிருத்தி
கொழும்பு - மாத்தறை இடையிலான ரயில் பாதை அபிவிருத்திப் பணிகளுக்கு இந்திய அரசாங்கம் 100 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவியை வழங்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் மேற்படி ரயில் பாதையின் அபிவிருத்திப் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாகப் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கக் கூடியவாறு ரயில் பாதை அபிவிருத்தி செய்யப்படவுள்ளது. இதன் மூலம் கொழும்பிலிருந்து மாத்தறைக்கு 2 மணி நேரத்தில் செல்ல முடியும்.
இந்திய அரசாங்கத்தின் கடனுதவின் கீழ் இந்த ரயில் பாதையை அபிவிருத்தி செய்யப்படவுள்ளது. இதற்கென 100 மில்லியன் அமெரிக்க டொலர் செலவிடப்படவுள்ளது.
அபிவிருத்தி செய்யும் பணிகள் 3 கட்டங்களாக முன்னெடுக்கப்படும். முதற் கட்டம் மாத்தறையிலிருந்து காலி வரையும், இரண்டாம் கட்டம் காலியிலிருந்து களுத்துறை வரையும், 3ஆம் கட்டம் களுத்துறையிலிருந்து கொழும்பு வரையும் இடம்பெறவுள்ளது. இவ் அபிவிருத்திப் பணிகள் 2010 இறுதிக்குள் பூர்த்தியடையும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இதன் நிர்மாணப் பணிகளை இரு இந்திய அரச கம்பனிகள் முன்னெடுக்கவுள்ளன. கண்காணிப்புப் பணிகளை ரயில்வே திணைக்களம் மேற்கொள்ளவுள்ளது என அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
0 Response to "இந்தியக் கடனுதவியில் கொழும்பு-மாத்தறை ரயில் பாதை அபிவிருத்தி"
แสดงความคิดเห็น