கரை ஒதுங்கிய அம்மன் சிலையால் பரபரப்பு

கடலூர் சில்வர் பீச்சில், அம்மன், நந்தி மற்றும் பலி பீடம் கருங்கல் சிலை ஒதுங்கி கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.கடலூர், தேவனாம் பட்டினம் சில்வர் பீச் கரையோரம், நேற்று காலை, இரண்டு அடி உயரமுள்ள பச்சை வாழியம்மன், நந்தி மற்றும் பலி பீடம் கருங்கல் சிலைகள் கிடந்தன. அவற்றை பார்த்த மக்கள், சிலைகளை மணல் மேட்டில் வைத்து, கற்பூரம் ஏற்றி வழிபட்டனர்.விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டையில், பச்சை வாழியம்மன் கோவில் புதுப்பிக்கும் பணி நடந்து வருகிறது. அங்கு, புதிய சிலை நிறுவப்பட உள்ளது.எனவே, பழைய சிலைகளை, நேற்று முன்தினம் இரவு, தேவனாம்பட்டினம் கடலில் போட்டு விட்டு சென்றுள்ளனர். அலை சீற்றம் அதிகமாக இருந்ததால், சிலைகள் கரை ஒதுங்கியது போலீசார் விசாரணையில் தெரிய வந்தது. அதைத் தொடர்ந்து, சிலைகள் மீண்டும் கடலில் கரையோரம் விடப்பட்டன.
0 Response to "கரை ஒதுங்கிய அம்மன் சிலையால் பரபரப்பு"
แสดงความคิดเห็น