களுத்துறையில் கோழிக் கூண்டினுள் ரொக்கட் லோஞ்சர்.

களுத்துறை - நேபட பிரதேசத்தில் வீடொன்றின் கோழிக் கூண்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரொக்கட் லோஞ்சர் ஒன்றினை நேற்றையதினம் பொலிஸார் மீட்டுள்ளனர்.
இந்த ரொக்கட் லோஞ்சர் வெளிநாட்டில் இருந்து கொள்வனவு செய்யப்பட்ட ஒன்று என தெரிவிக்கப்பட்டுள்ளது. எட்டு அடி நீளத்தைக் கொண்ட இந்த லோஞ்சரின் உதவியுடன் 40 மில்லி மீற்றர் குண்டுகளை இலக்கை நோக்கி செலுத்த முடியும் என களுத்துறை பொலிஸார் தெரிவித்தனர். முத்துகம நீதிமன்றத்தில் அருகில் வைத்து நேற்று முன்தினம் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் வழங்கிய தகவலை அடுத்தே இந்த லோஞ்சர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
0 Response to "களுத்துறையில் கோழிக் கூண்டினுள் ரொக்கட் லோஞ்சர்."
แสดงความคิดเห็น