குழந்தை ஒன்றை விற்பனை செய்ய முற்பட்ட மூவர் கைது.

பதினொரு மாதம் நிரம்பிய குழந்தை ஒன்றை 50 ஆயிரம் ரூபாவிற்கு விற்பனை செய்ய முயன்ற மூன்று சந்தேக நபர்களை விளக்கமறியலில் வைக்குமாறு கல்கிஸ்சை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த குழந்தையை விற்பனை செய்ய முயன்ற பிள்ளையின் தாயார் அதற்கு தரகராக செயற்பட்ட அக்குரஸ்ஸ பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் மற்றும் குழந்தையை விலைக்கு பெற்றுக்கொள்ளமுனைந்த பெண் ஆகியோருக்கே இவ்வாறு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி இந்த சந்தேக நபர்கள் இந்த மாதம் 16 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்படவுள்ளனர்.
0 Response to "குழந்தை ஒன்றை விற்பனை செய்ய முற்பட்ட மூவர் கைது."
แสดงความคิดเห็น