இறப்புக்களின் அர்த்தங்கள்…. ஏன் இந்த இறப்பு?? (கவிதை)

இதய சுத்தியுள்ள மனிதர்களே
இயல்பாக சிந்திப்போம்….வாரீர்
இரத்தக்கறைகள் வேண்டாம்…. இறந்த
இறப்புக்களின் அர்த்தங்கள் என்ன?
இயற்கைதனை நேசிப்பதனால்
இறமைகளை மதிப்போம்
இறைவனை துதித்திடும் மனிதர்களே..இறந்த
இறப்புக்களின் அர்த்தங்கள் என்ன?..
இதயத்தை நேசிக்கும் மனிதர்களே
இறக்கைகள் பறிபோனதால்..
இருப்பதை வைத்து இப்போ
இன்பமாய் வாழ எண்ணும் மனிதர்களே..இறந்த
இறப்புக்களின் அர்த்தங்கள் என்ன?..
இணைந்த கைகளை துண்டித்து
இரத்த கறைகளை கண்டு கழித்து
இன்னல்பட்ட மக்களை மறந்து
இசைந்து பாட எண்ணும் மனிதர்களே .இறந்த
இறப்புக்களின் அர்த்தங்கள் என்ன?
இத்தனை தியாகங்கள் எதற்க்கு
இறப்புக்கள் எதற்க்கு தற்பொழுது
இழத்து மூடிபருவக் கனவு கண்பதற்காகவா?
இகழ்ச்சியுடன் சிரிக்கும் மனிதர்களே..இறந்த
இறப்புக்களின் அர்த்தங்கள் என்ன?
இடுகாட்டில் சாம்பலான மகனையும் கணவரையும்
இழந்து கண்ணில் ஈரம் கசிந்த தாய்மார்களுக்கு
இரகசியமில்லாமல் நாம் கூறும் ஆறுதல்..?
இரண்டு முகம் கொண்ட மனிதர்களே..இறந்த
இறப்புக்களின் அர்த்தங்கள் என்ன?
இரக்கமில்லாத செயல்கள் நம்மிடையே
இரவு பகல் அறியா பார்வைகள்
இருப்பை மட்டும் சிந்திக்கும்
இதயம் கருகிப்போன மனிதர்களே.. இறந்த
இறப்புக்களின் அர்த்தங்கள் என்ன?
இருட்டுக்குள் வாழ்ந்த மக்களை
இரட்டிப்பு இருளிற்குள் வீழ்திவிட்டு
இதமாய் கதைகள் பேசி வாழ்ந்திடும்
இரக்கமற்ற புத்திமான்களே….. இறந்த
இறப்புக்களின் அர்த்தங்கள் என்ன?
இரசாயன கலவை கொடுத்து மக்களின்
இரத்தோட்டத்தை உடலில் நிறுத்த
இருமாப்புக் கொண்டு கங்கனம் கட்டும்
இரட்டை வேடம் போடும் கனவான்களே….. இறந்த
இறப்புக்களின் அர்த்தங்கள் என்ன?
இறைவனை வைத்து பணம் சம்பாதித்த
இ(க)றைத் தொண்டர்கள் நீங்கள்..
இரைதேடும் பறவைகளை காட்டி தற்போது
இடுப்பில் ஒர் உண்டியல் கட்டி
இசைத்தட்டுகளில் தேவாரம் திருவாசகம் பாடி
இழிவான காரியம்செய்யும் மானுடர்களே… இறந்த
இறப்புக்களின் அர்த்தங்கள் என்ன?
இலட்சம் இரண்டரை ஆகிப்போன
இழப்புக்கள்.. இறுமாப்புக் கொள்ள வேண்டாம்
இலட்சியமில்லா இழப்புக்கள்..
இயற்கைதனை அழிக்கும் ஆயுதம் வேண்டாம்
இரையாக மனிதப் பலிகளை பறிகொடுக்காமல்
இலட்சியவேட்கை என்னவென்று சிந்திப்போம்… இறந்த
இறப்புக்களின் அர்த்தங்கள் என்ன???
கிளியின் ஒர் கிராமத்து நாயகன்.. வவிதரன்
0 Response to "இறப்புக்களின் அர்த்தங்கள்…. ஏன் இந்த இறப்பு?? (கவிதை)"
แสดงความคิดเห็น