ஓமந்தையில் பாரிய ஆயுதக்களஞ்சியம் கண்டுபிடிப்பு.

வவுனியா ஓமந்தைப் பிரதேசத்தில் புலிகளின் ஆயுதக் களஞ்சியமொன்றை பொலிஸ் விஷேட அதிரடிப் படையினர் நேற்றுக்காலை கண்டுபிடித்துள்ளனர். ஓமந்தைப் பிரதேசத்தில் மேற்கொண்ட பாரிய தேடுதல் நடவடிக்கையின் போது புலிகளால்; புதைத்து வைக்கப்பட்டிருந்த 26 ஆயிரத்து 734 மிதிவெடிகள், 90 கிலோ நிறையுடைய அதிசக்கதிவாய்ந்த கிளைமோர் உட்பட பெருந்தொகையான ஆயுதங்களையும் மீட்டெடுத்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார். பொலிஸ் விஷேட அதிரடிப் படையினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் பேரிலேயே நிலத்துக்கடியில் புலிகளால் ஆயுதக் களஞ்சியம் அமைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் மிதிவெடிகள் ரி.என்.ரி. ரக வெடிமருந்துகள் துப்பாக்கிகள் உள்ளிட்ட பெருமளவு ஆயுத உபகரணங்களும் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. இந்த ஆயுதக் களஞ்சியத்தைப் பாதுகாப்புப் படையினர் கண்டுபிடித்ததின் மூலம் பாரிய அழிவுகள் தவிர்க்கப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இதேவேளை வட பகுதியில் புலிகளால் புதைக்கப்பட்ட கண்ணி வெடிகளை அகற்றுவதற்காக கண்ணி வெடிகளை அகற்றும் ஐந்து இயந்திரங்களைத் தந்து உதவுதற்கு குரேஷியா முன்வந்துள்ளதாக தேசத்தைக் கட்டி எழுப்பும் அமைச்சு தெரிவித்துள்ளது. குரேஷியா வழங்கவுள்ள ஐந்து இயந்திரங்களையும் நாளை கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையம் ஊடாக இலங்கைக்கு கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள அதேவேளை சிலோவாக்கிய அரசாங்கமும் 210 மில்லியன் ரூபா பெறுமதியான இதுபோன்ற 5 இயந்திரங்களை அன்மையில் இலங்கைக்கு வழங்கியுள்ளது.
0 Response to "ஓமந்தையில் பாரிய ஆயுதக்களஞ்சியம் கண்டுபிடிப்பு."
แสดงความคิดเห็น