jkr
แสดงบทความที่มีป้ายกำกับ ஆயுதம் แสดงบทความทั้งหมด
แสดงบทความที่มีป้ายกำกับ ஆயுதம் แสดงบทความทั้งหมด

பிரதி அமைச்சர் பாயிஸின் சாரதி மீது புத்தளத்தில் துப்பாக்கி சூடு


கால் நடைவளத் துறை பிரதி அமைச்சர் கே.ஏ.பாயிஸின் சாரதி மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் சாரதி சிறு காயங்களுக்குள்ளான நிலையில் புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று மாலை(25) புத்தளம் நூர் நகர் புகையிரத நிலைய வீதியில் இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளதாக புத்தளம் பொலீஸார் தெரிவித்தனர்.

பிரதி அமைச்சரின்; வாகனச் சாரதியான எம்.ஹபீல் என்பவரே சூட்டுக காயங்களுக்குள்ளானவராவார்.

மேலும் சம்பவம் பற்றி தெரியவருவதாவது :

பிரஸ்தாப சாரதிணீ நூர் நகர பகுதியில் உள்ள வீட்டுக்குள் தமது மோட்டார் சைக்கிளில் இருந்து இறங்கி செல்ல முற்பட்ட போது.அங்கு வந்த வந்த மூவர் இவரின் கைப்பகுதியில் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றதாக வைத்திய சாலை பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

ரிப்பிடர் ரக துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தப்படும் துப்பாக்கி ரவைகளே இச்சூட்டு சம்பவத்துக்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பெலீஸார் தெரிவித்தனர்.

சம்பவம் குறித்து புத்தளம் உதவி பொலீஸ் அத்தியட்சகர் சகதபால தலைமையிலான பொலீஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

போரின் இறுதிக்கட்டத்தில் புலிகள் எரித்திரியாவிடம் 10 விமானங்கள் கொள்வனவு : உயர் பாதுகாப்பு அதிகாரி


இறுதிக் கட்ட யுத்த முன்நகர்வுகளின் போது தமிழீழ விடுதலைப் புலிகள் சுமார் 10 இலகுரக விமானங்களை எரித்திரியாவிடமிருந்து கொள்வனவு செய்ததாக உயர் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

யுத்தம் தொடர்ச்சியாக நடைபெறும் என்ற நம்பிக்கையில் புலிகள் இந்த விமானங்களைக் கொள்வனவு செய்த போதிலும், எதிர்பாராத விதமாக யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

பாகங்களாக பிரித்து கப்பலின் மூலமாக இலங்கையின் வடகிழக்கு கடற்கரையின் ஊடாக குறித்த விமானங்கள் விநியோகிக்கப்பட இருந்ததாகவும், யுத்தத்தில் புலிகள் அடைந்த தோல்வி காரணமாக குறித்த விமானங்கள் விநியோகிக்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

விமானங்கள் கிடைக்கும் பட்சத்தில், மலேசியா, இந்தோனேசியா நாடுகளிலுள்ள பயிற்சி நிலையங்களிலிருந்து விமானிகளை வரவழைக்கவும் புலிகள் திட்டமிட்டிருந்ததாக அவர் தெரிவித்தார்.

போர் முடிவுற்ற காலகட்டத்தில், முல்லைத்தீவுக் காட்டுப் பகுதியில் விமான பயிற்சி நிலையம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதாகவும் சுமார் 12 பேருக்கு விமானிப் பயிற்சி வழங்கப்பட்ட தகவல் கிடைக்கப் பெற்றதாகவும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.

இவர்களில் இருவர் கைது செய்யப்பட்டனர் எனவும் ஏனையோர் இடம்பெயர் முகாம்களில் ஒளிந்திருக்கலாமெனவும் அவர் தெரிவித்தார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இலங்கை அரசாங்கம் எரித்திரியாவில் தூதரகமொன்றை அமைக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

குமரன் பத்மநாதனிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் மூலமே இந்தத் தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

தெகிவளைப் பிரதேசத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த புலிகளின் யுத்த உபகரணங்கள் புலனாய்வுப் பிரிவினரால் மீட்பு


கொழும்பு தெகிவளைப் பிரதேசத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் புலிகளின் யுத்த உபகரணங்களை புலனாய்வுப் பிரிவினர் நேற்றுக் கைப்பற்றியுள்ளனர். கைது செய்யப்பட்டு தெகிவளைப் பொலீசாரினால் விசாரிக்கப்பட்டுள்ள புலிச் சந்தேகநபர் ஒருவர் வழங்கிய தகவலுக்கமைய தெகிவளை மல்பிரட் கிறசென்ட் பிரதேசத்தில் உள்ள வீடொன்றுக்கு முன்னால் புதைத்து வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே இவற்றை புலனாய்வுப் பிரிவினர் மீட்டுள்ளனர். ரிமோட் கொன்றோலர் 01, ரிசீவர் 01, டைமர் 06, சக்தி வாய்ந்த பூஸ்டர்கள் 04, கன்வாஸ் பெல்ஸ் 01, சக்தி வாய்ந்த டெட்னேற்றர்கள் ஒருதொகை என்பனவே இதன்போது மீட்கப்பட்டுள்ளதாக பொலீஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மாஅதிபர் நிமால் மெதிவக்க தெரிவித்துள்ளார்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

ஓமந்தையில் பாரிய ஆயுதக்களஞ்சியம் கண்டுபிடிப்பு.


வவுனியா ஓமந்தைப் பிரதேசத்தில் புலிகளின் ஆயுதக் களஞ்சியமொன்றை பொலிஸ் விஷேட அதிரடிப் படையினர் நேற்றுக்காலை கண்டுபிடித்துள்ளனர். ஓமந்தைப் பிரதேசத்தில் மேற்கொண்ட பாரிய தேடுதல் நடவடிக்கையின் போது புலிகளால்; புதைத்து வைக்கப்பட்டிருந்த 26 ஆயிரத்து 734 மிதிவெடிகள், 90 கிலோ நிறையுடைய அதிசக்கதிவாய்ந்த கிளைமோர் உட்பட பெருந்தொகையான ஆயுதங்களையும் மீட்டெடுத்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார். பொலிஸ் விஷேட அதிரடிப் படையினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் பேரிலேயே நிலத்துக்கடியில் புலிகளால் ஆயுதக் களஞ்சியம் அமைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் மிதிவெடிகள் ரி.என்.ரி. ரக வெடிமருந்துகள் துப்பாக்கிகள் உள்ளிட்ட பெருமளவு ஆயுத உபகரணங்களும் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. இந்த ஆயுதக் களஞ்சியத்தைப் பாதுகாப்புப் படையினர் கண்டுபிடித்ததின் மூலம் பாரிய அழிவுகள் தவிர்க்கப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இதேவேளை வட பகுதியில் புலிகளால் புதைக்கப்பட்ட கண்ணி வெடிகளை அகற்றுவதற்காக கண்ணி வெடிகளை அகற்றும் ஐந்து இயந்திரங்களைத் தந்து உதவுதற்கு குரேஷியா முன்வந்துள்ளதாக தேசத்தைக் கட்டி எழுப்பும் அமைச்சு தெரிவித்துள்ளது. குரேஷியா வழங்கவுள்ள ஐந்து இயந்திரங்களையும் நாளை கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையம் ஊடாக இலங்கைக்கு கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள அதேவேளை சிலோவாக்கிய அரசாங்கமும் 210 மில்லியன் ரூபா பெறுமதியான இதுபோன்ற 5 இயந்திரங்களை அன்மையில் இலங்கைக்கு வழங்கியுள்ளது.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

தொப்பிகலையில் புலிகள் புதைத்து வைத்த ஆயுதங்கள் மீட்பு


தொப்பிகலையில் விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் புதைத்து வைத்திருந்த பெருமளவு ஆயுதங்களை இன்று காலை மட்டக்களப்பு விசேட அதிரடிப் படையினர் மீட்டுள்ளனர். தொப்பிகலை நகரமுல்ல அடர்ந்த காட்டுப் பகுதியில் மிகவும் பாதுகாப்பான முறையில் பொலித்தீனால் சுற்றப்பட்டு பூமிக்கடியில் இவ்வாயுதங்கள் புதைக்கப்பட்டிருந்தன. 52 ஆர்பீஜி ஷெல்கள், 12 T 56 ரக துப்பாக்கிகள், 300 துப்பாக்கி மகசீன்கள் உட்பட பெருமளவு ஆயுதங்கள் இன்று மீட்கப்பட்டுள்ளன.விசேட அதிரடிப்படை தளபதி, பிரதி பொலிஸ் மா அதிபர் சரத் சந்திரவின் பணிபுரையின் பேரில் ,கிழக்கு மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் பி. எஸ். ரணவனவின் வழிக்காட்டலில், வலய தளபதி விமலசேனவின் ஆலோசனையின்கீழ், மட்டக்களப்பு தலைமையக விசேட அதிரடிப்படை உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஸ். பி. குணரதன் தலைமையிலான விசேட அதிரடிப்படையினரே இவ்வாயுதங்களை மீட்டுள்ளனர்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS
Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates