இந்திய எல்லையில் பாக். ரொக்கெட் தாக்குதல்

இந்தியா வாகா எல்லையில் நேற்றிரவு 10.00 - 11.00 மணிக்கிடையில் அடுத்தடுத்து இரண்டு ரொக்கெட்டுகளை ஏவி பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தத் தாக்குதலை இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையினர் உறுதி செய்துள்ளனர். தாக்குதலை தொடர்ந்து எல்லைப் பாதுகாப்புப் படை அதிகாரிகளும் - பாக். அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால் பாகிஸ்தான், ரொக்கெட் தாக்குதலைத் தாம் நடத்தவில்லை எனத் திட்டவட்டமாக மறுத்துள்ளது.தாக்குதல் சம்பவத்தின் எதிரொலியாக இந்திய எல்லையில் பாதுகாப்பும், கண்காணிப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளன என்றும் இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.
0 Response to "இந்திய எல்லையில் பாக். ரொக்கெட் தாக்குதல்"
แสดงความคิดเห็น