முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மக்கள் தேசிய பாதுகாப்புக்கு எந்த வகையில் அச்சுறுத்தல்? : ரணில் கேள்வி
புலிகளின் தலைவர் பிரபாகரனுடன் இணைந்திருந்து அவருக்கு கீழ் செயற்பட்ட தயா, ஜோர்ஜ் மாஸ்டர்கள் மீது எவ்விதமான குற்றச்சாட்டுகளும் இல்லை என்று சட்டமா அதிபர் தெரிவித்திருக்கின்றார். அப்படியாயின் பிரபாகரனையே தெரியாத அவ்வியக்கத்துடன் தொடர்பு பட்டிராத முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மக்கள் மட்டும் எவ்வாறு தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பார்கள்?" என்று எதிர்க்கட்சி தலைவரும் ஐக்கிய தேசியக்கட்சி தலைவருமான ரணில் விக்ரமசிங்க கேள்வி எழுப்பினார்.
காணாமல் போனவர்கள் தொடர்பான மக்கள் கண்காணிப்பு குழுவின் மாநாடு மருதானையிலுள்ள சமூக, சமய நிலைய கேட்போர் கூடத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
யுத்தம் முடிவடைந்து விட்ட நிலையில் காணாமல் போனவர்களின் உறவினர்களில் சிலரே இங்கு வருகை தந்துள்ளனர். யுத்தம் இடம்பெற்றுக் கொண்டிருந்த காலத்தில் காணாமல் போனவர்கள், கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பிலான விபரங்களை அரசாங்கம் பகிரங்கப்படுத்த வேண்டும்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த சந்தர்ப்பத்தில் விடுத்த இத்தகைய கோரிக்கைக்கு அமைவாக இலங்கையில் முன்னாள் ஜனாதிபதி பிரேமதாஸா அன்று விபரங்களை வெளியிட்டார். காணாமல் போனவர்கள், சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள், விடுதலை செய்யப்பட்டோர் மற்றும் புனர்வாழ்வு அளிக்கப்பட்டோர் விபரங்களை வெளியிட்டால் மீதமிருக்கின்ற குறைந்த எண்ணிக்கையினருக்கே வழக்கு தாக்கல் செய்ய வேண்டிய நிலைமை ஏற்படும்.
இது தொடர்பில் அரசாங்கம் அறிவிக்கவேண்டும் வடக்கு கிழக்கை சேர்ந்தவர்களுக்கு மட்டும் இவை மட்டுப்படுத்தப்படவில்லை. ஊடகவியலாளர்களும் கடத்தப்பட்டுள்ளனர், காணாமல்போயுள்ளனர், கொலையும் செய்யப்பட்டுள்ளனர்.
கடத்தப்பட்டோர், காணாமல் போனோர் தொடர்பிலான விபரங்கள் சர்வதேசத்தைச் சென்றடைந்துள்ளன. அது தவறானதல்ல. காரணம்,இன்றைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தான் அன்று இதனை பழக்கி வைத்தவர். இவ்வாறானதொரு சம்பிரதாயத்தை உருவாக்கியவரும் அவரேயாவார்.
ஜனநாயகம் மீறப்பட்டமையினால் தான் இவ்வாறானதொரு நிலைமை ஏற்பட்டது. நாட்டில் ஜனநாயகமோ,சட்டமோ, அரசியலமைப்போ இல்லை. இதற்கு ஆதரவு தெரிவிக்கின்றவர்களும், மஹிந்த ராஜபக்ஷ அப்பதவியிலிருந்து விலகியதன் பின்னர் எதிர்ப்பு தெரிவிப்பவர்களும், எம்மைபோன்று என்றுமே எதிர்ப்பவர்களும் இருக்கின்றனர். மக்களை அகதி முகாம்களில் தடுத்து வைத்திருப்பதற்கு சட்டரீதியில் அனுமதியிருக்கின்றதா? மக்களை சிறைப்படுத்தி வைத்திருப்பதற்கு அரசியலமைப்பில் எந்த சட்டமும் இல்லை. மக்கள் பாதுகாப்பு சட்டத்தின் மூலம் அவ்வாறானதொரு ஏற்பாடுகள் எதுவும் ஏற்படுத்தப்படவில்லை .
விடுதலைப்புலிகளின் ஊடகப்பேச்சாளர் தயாமாஸ்டர்,மொழிப்பெயர்ப்பாளர் ஜோர்ஜ் மாஸ்டர் மீது எவ்விதமான குற்றச்சாட்டுகளும் இல்லை என்று சட்டமா அதிபர் நீதிமன்றத்திற்கு தெரிவித்திருக்கின்றார். புலிகளின் தலைவர் பிரபாகரனுடன் ஒன்றாக இருந்து அவரின் கீழ் செயல்பட்டவர்களில் இவர்கள் இருவரும் அடங்குகின்றனர்.
எனினும் பிரபாகரனையே கண்டிராத அவ்வியகத்துடன் தொடர்புகளை வைத்திருக்காதவர்களே இன்று வன்னி அகதி முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பலருக்கு பிரபாகரனையே தெரியாது. புலிகளின் தலைமையின் கீழ் இருந்த இருவரும் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் இல்லையென்றால் தடுத்துவைக்கப்பட்டுள்ள இரண்டரை இலட்சத்து மேற்பட்ட பொதுமக்கள் எவ்வாறு தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருப்பார்கள்?
வவுனியா மாநகர சபைத்தேர்தலின் போது மக்கள் அரசாங்கத்திற்கு வாக்களிக்காதது போல அடுத்த தேர்தல்களிலும் வாக்களிக்க மாட்டார்கள் என்பதற்காகவே வன்னி அகதி முகாம்களில் மக்கள் பலவந்தமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
வன்னி மக்களை ஒரு தடவை வாக்களிக்காமல் செய்தது போலவே இரண்டாவது தடவையாக அவர்களை சுதந்திரமாக வாக்களிக்கவிடாமல் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. வன்னி முகாம்களிலிருந்து தமிழ்ச்செல்வனின் செயலாளர் உட்பட 10 ஆயிரம் பேர் தப்பியோடி விட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. அவ்வாறு தப்பியோடியவர்கள் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லையென்றால் அகதி முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் மட்டும் எவ்வாறு பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பார்கள்?" என்று கேள்வி எழுப்பினார்.
மனோகணேசன் எம்.பி.
இங்கு கருத்து தெரிவித்த மக்கள் கண்காணிப்பு குழுவின் ஏற்பாட்டாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோகணேசன் கருத்து தெரிவிக்கையில், "யுத்தம் முடிவடைந்து விட்டதாக அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில் யுத்த காலத்தில் காணாமல் போனோர், கடத்தப்பட்டோர், கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டோர் வீடுகளுக்கு வந்துசேர வேண்டும்.
இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்கு யாழ்ப்பாணத்தில் இருக்கின்றவர்களும் முயற்சிகளை மேற்கொண்டனர். எனினும் முடியவில்லை. அவர்கள் இங்கு வருவதற்கு முடியாத நிலையில் இருக்கின்றனர். அவர்களுக்காக நாம் அங்கு செல்வோம். கடந்த மூன்றரை வருடங்களாக காணமல் போன நூற்றுக்கணக்கானோர் தொடர்பிலான விபரங்கள் குறித்து அரசாங்கம் அறிவிக்கவேண்டும்.
தயா, ஜோர்ச் மாஸ்டர்கள் விடுதலைச்செய்யப்படுகின்ற வேளையில் மாணவர்கள் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். கருணா நாடாளுமன்றத்திற்கு வந்து அமைச்சு பதவியையும் ஏற்றுக் கொண்டுள்ளார். எனினும் அவருக்கு கீழ் அன்று கிழக்கில் செயற்பட்டவர்கள் இன்னமும் சிறைச்சாலையில் வாடுகின்றனர்.
இராணுவத்திலிருந்து தப்பியோடிவர்களுக்கும், மக்கள் விடுதலை முன்னணி கிளர்ச்சியாளர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல இவர்களுக்கும் பொதுமன்னிப்பு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும். அல்லது இவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை மனித உரிமைகளுக்காக அன்று ஜெனீவாவில் குரல் கொடுத்த இன்றைய ஜனாதிபதி பகிரங்கமாக அறிவிக்கவேண்டும்" என்றார்.
மங்கள சமரவீர எம்.பி கருத்து
மாநாட்டில் கலந்து கொண்ட ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மக்கள் பிரிவு ஏற்பாட்டாளரும் எம்.பியுமான மங்கள சமரவீர கருத்து தெரிவிக்கையில், "ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அன்று எம்.பியாக இருந்த நேரத்தில் மனித உரிமைகளுக்காகவும் உறவுகளை இழந்தவர்களுக்காகவும் என்னோடு இணைந்து குரல் கொடுத்தார். மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான தகவல்கள் ஐ.நா. உள்ளிட்ட சர்வதேசத்திற்குக் கொண்டுசென்றார். அன்று அவருக்கோ, அதுதொடர்பில் எழுதிய ஊடகவியலாளர்களுக்கோ, மனித உரிமை குறித்து பேசியவர்களுக்கோ எவ்விதமான அச்சுறுத்தல்களும் விடுக்கப்படவில்லை காணாமல் போகவும் இல்லை.
மனித உரிமைகளை பாதுகாப்பதற்காக செயற்பட்ட தலைவரின் ஆட்சியின் கீழ் காணால் போதல் சிறையில் தடுத்துவைத்தல் அதிகரித்துள்ளது. அது தொடர்பில் குரல் கொடுப்பவர்கள் மீது பயங்கரவாதி என்ற முத்திரை குத்தப்படுகின்றது. இலங்கையர்கள் துன்பப்படுவார்களாயின் அது எமக்கு துன்பமானதாகும் அதனால் தான் நாம் குரல் கொடுக்கின்றோம்.
வன்னியில் மூன்றரை இலட்சம் மக்கள் அகதி முகாம்களில் வாழவில்லை அவர்கள் பலவந்தமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் அதனால் தான் அங்கிருந்து 10 ஆயிரம் பேர் தப்பியோடிவிட்டனர்" என்றார்.

0 Response to "முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மக்கள் தேசிய பாதுகாப்புக்கு எந்த வகையில் அச்சுறுத்தல்? : ரணில் கேள்வி"
แสดงความคิดเห็น