jkr
แสดงบทความที่มีป้ายกำกับ அரசியல் แสดงบทความทั้งหมด
แสดงบทความที่มีป้ายกำกับ அரசியல் แสดงบทความทั้งหมด

ஜனாதிபதி தேர்தலும் பொதுத்தேர்லும் அடுத்தவருடம் ஏப்ரல் மாதத்திற்குள்.. -அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன


ஜனாதிபதி தேர்தலும் அடுத்த வருடம் ஏப்ரல் மாதத்திற்கு முன்னர் நடத்தப்படும் என ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார் தமது அமைச்சு அலுவலகத்தில் இன்றுகாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இத்தகவலை வெளியிட்டுள்ளார் இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில் அடுத்தமாதம் 15ம் திகதி இடம்பெறவுள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுக்கூட்டத்தில் இத்தேர்தல்கள் பற்றிய உத்தியோகபூர்வ அறிவிப்பு விடுக்கப்படும் தென்மாகாணசபைத் தேர்தலில் அரசாங்கத்திற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை வெற்றி வழங்கிய பொதுமக்களுக்கு அரசாங்கம் நன்றி தெரிவித்துள்ளது என்றார்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

தென் மாகாண சபைத் தேர்தலில் இம்முறை 24 ஆசனங்கள் இழப்பு


கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற தென்மாகாண சபைத்தேர்தலில் 24 ஆசனங்கள் இழக்கப்பட்டுள்ளன. ஜே.வி.பி.முன்னாள் உறுப்பினர்கள் 12 பேர், ஐக்கிய தேசியக் கட்சி 07 உறுப்பினர்கள், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 05 உறுப்பினர்கள் ஆகியோரே இவ்வாறு ஆசனங்களை இழந்தோராவர்.

ஆளும் மற்றும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த சுமார் 19 புதிய உறுப்பினர்கள் இம்முறை தேர்தலில் போட்டியிட்டனர்.

ரி.ரட்ண கமகே, நிசாந்த பெரேரா, ரி.கே. ஜெயசுந்தர, ரி.எம்.ஜயவீர, கே.சுமித்திரா டி சில்வா ஆகியோர் காலி மாவட்டத்திலும் சேனா ரத்னாயக்க,லால் பிரேமநாத், எஸ்.யூ.மௌலானா ஆகியோர் மாத்தறை மாவட்டத்திலும். பியசேன ராம நாயக்க, அத்துல வெலந்தகெத, கொட, சிசிர குமார வாஹல தந்திரி, ஜயந்த வன்னியாரச்சி ஆகியோர் அம்பாந்தோட்டை மாவட்டத்திலுமாக ஜே.வி.பி தனது ஆசனங்களை இழந்துள்ளது.

அஜித் டி சில்வா காலி மாவட்டத்திலும், டானி அபேவிக்கிரம, நிலங்க ஹந்தவிதாரண, சுசிந்த ஹந்தகே, லக்மல் நிலந்த மாத்தறை மாவட்டத்திலுமாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தனது ஆசனங்களை இழந்துள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி தனது முன்னாள் சபை உறுப்பினர்களான சுனில் சேனாநாயக்க, ரஞ்ஜித்குமாரகே, ஜயசிறி நாணயக்கார,ஆனந்த அபேவிக்கிரம ஆகியோரை காலி மாவட்டத்திலும் பிரகீத் பிரேமதிலக, ஜினதாச குணவர்த்தன ஆகியோரை மாத்தறை மாவட்டத்திலும், தேவிகா வீரசிங்கவை அம்பாந்தோட்டை மாவட்டத்திலும் என்ற வகையில் தனது ஆசனங்களை இழந்துள்ளது.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் 15 உறுப்பினர்களும், ஐக்கிய தேசியக்கட்சியின் 03 உறுப்பினர்களும், ஜே.வி.பியின் ஒரு உறுப்பினரும் புதிதாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

ரன்டிமா கமகே, சஜிந்த வாஸ் குணவர்த்தன, ரி.டி.எஸ். ஜயவீர, லசந்த விஜேயநாயக்க, சமிந்த சம்பத், அனார்கலி ஆகாஷா ஆகியோர் காலி மாவட்டத்திலும், சரத் யாப்பா அபேயவர்த்தன, சன்டிமா ராசபுத்ர, ஏ.எச்.பியசேன, காஞ்சனா விஜேசேகர, ஜயந்த கொடிதுவக்கு, அருணா குணரட்ன ஆகியோர் மாத்தறை மாவட்டத்திலும், கபில திசாநாயக்க, ஆனந்த சேனரத் விதானபத்திரன, அhஜுன நிஷந்த ஆகியோர் அம்பாந்தோட்டை மாவட்டத்திலும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில்; முதன் முறையாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இம்முறை ஐதேகவின் காலி மாவட்டத்தின் புதுமுகமாக அறிமுகமானார் கிரிஷாந்த புஷ்பகுமார(ரத்தரன்). மாத்தரை மாவட்டத்தில் கயான் சஞ்சீவ, ஹப்புதாந்திரிகே நிஷாந்த ஆகியோர் தெரிவானாலும் அம்பாந்தோட்டையில் எவரும் புதிதாகத் தெரிவாகவில்லை.

ஜே.வி.பியைச் சேர்ந்த குமுது சுஜீவ பிரியந்த என்பவர் புதிதாக அம்பாந்தோட்டை மாவட்டத்திற்குத் தெரிவானார்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

சனல் 4 வீடியோ தொடர்பான இராணுவ விசாரணைகளை அரசு இதுவரை நடத்தவில்லை : மங்கள சமரவீர


இராணுவத்தின் 60 ஆவது ஆண்டு விழா கொண்டாடப்பட்டாலும், இலங்கை இராணுவம் இன்று உலகில் பிரபல்யம் வாய்ந்த ஒரு படையணியாகப் போற்றப்பட்டாலும் இன்று சனல் 4 வீடியோ தொடர்பில் இராணுவத்தினர் மீது பல குற்றசாட்டுகள் எழுந்துள்ளன. இது தொடர்பில் எவ்வித விசாரணைகளும் நடத்தப்படவில்லை" என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மக்கள் பிரிவின் அமைப்பாளரும் எம்பியுமான மங்கள சமரவீர இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போது தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,"இராணுவத்தினர் நாட்டுக்காக அரிய பல சேவைகளை செய்தாலும், தியாகங்கள் புரிந்தாலும் அவர்கள் மீதுள்ள குற்றச்சாட்டுகள் குறித்தும் விசாரணை நடத்தப்பட வேண்டியதவசியம்.

1982களில் கதிர்காம ரூபசுந்தரி என்ற பெண்ணைத் துஷ்பிரயோகம் செய்ததாக லெப்டினன் ஜெனரலாக இருந்த அல்பட் விஜயசூரிய மீது குற்றஞ் சுமத்தப்பட்டது. இவர் மீது விசாரணை நடத்தப்பட்டு, சிறிமாவோ பண்டாரநாயக்காவின் ஆட்சிக்காலத்தில் 16 வருட கடூழிய சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.

1970-1980 களில் நாட்டின் இறைமையைப் பாதுகாக்க இரணுவத்தினர் தமது உயிரைத் தியாகம் செய்தனர்.1983 ஆம் ஆண்டு இடம்பெற்ற கலவரத்தில் 13 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். மேலும் கடந்த 20 வருட காலமாக நிலவிய யுத்தத்தின் போதும் ஏராளமானோர் கொல்லப்பட்டனர்.மேலும் பலர் அங்கவீனர்களாயினர்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவின் ஆட்சிக் காலத்தில் மேலும் 1994 ஆம் ஆண்டுஆகஸ்ட் மாதம் பொல்கொலை கங்கையில் தமிழ் இளைஞர்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன. இது தொடர்பான நபர்களைக் கைது செய்து அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டது.

மேலும் 1996இல் இராணுவத்தினரால் கிரிஷாந்தி குமாரசுவாமி என்ற மாணவி மீதான துஷ்பிரயோக வழக்கில் பல இராணுவத்தினர் தொடர்புபட்டிருந்தனர். இவர்களுக்கு எதிராக விசாரணைகள் நடத்தப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது.

நான் ஊடக அமைச்சராக இருந்த காலகட்டத்தில், 'சண்டே டைம்ஸ்' பத்திரிகையில் பாதுகாப்பு தரப்பு தொடர்பான கட்டுரைகளை எழுதிய இக்பால் அத்தாஸுக்கு சிலரால் மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்தது. இதுதொடர்பில் உடனடியாக ஆராய்ந்து நாம் நடவடிக்கை எடுத்தோம். விமானபப்டையினரே அச்சுறுத்தல் விடுத்ததாகக் கூறப்பட்டது. சம்பந்தப்பட்ட விமான படையினக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டது.

உலகிலுள்ள சிறந்த இராணுவப் படைகளுக்கு எதிராகவும் கூட எத்தனையோ குற்றசாட்டுக்கள் எழுந்துள்ளன. உலகில் சிறந்த இராணுவமாகக் கருதப்படும் அமெரிக்க இராணுவத்தினர் மீதும் பல குற்றசாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. குற்றச்சாட்டுக்கள் எழும்போதெல்லாம், உரிய விசாரணைகளை நடத்தி அவர்களுக்கு எதிராக அந்த அரசு நடவடிக்கை எடுத்து வருகின்றது.

இது இவ்வாறிருக்க, எமது இராணுவத்தினர் 60 ஆவது ஆண்டு விழாவைக் கொண்டாடும் போது, வரலாற்றில் இல்லாத பல குற்றச்சாட்டுக்கள் அவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளன. மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளமை தொடர்பில் எமது இராணுவத்தினர் மீதும் அரசு மீதும் பாரிய குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.

ஆனால் இந்த அரசாங்கமோ இது தொடர்பில் எவ்வித விசாரணைகளையும் இதுவரை நடத்தவில்லை. இது எமது இராணுவத்தினருக்கு அவமதிப்பை ஏற்படுத்தும் செயலாகும்.

சனல் 4 வீடியோ தொடர்பில் இராணுவத்தினர் மீது பாரிய குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. இது தொடர்பில் சர்வதேச விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. இதற்கெதிராகவும் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஆரம்பத்தில் தற்போதைய அரசாங்கம் இராணுவத்தினர் பற்றிக் கதைத்தாலும் தற்போது அவர்களைப் பற்றி எவருமே பேசுவதில்லை.

யுத்தத்தை வெற்றிகொண்டவர்களை மறந்து விட்டார்கள். யுத்தத்திற்காகப் பாடுபட்ட இராணுவ தளபதி சரத் பொன்சேகா உட்பட பலரை இன்று மறந்து செயற்படும் நிலை உருவாகியுள்ளது. மேலும் யுத்த வெற்றியில் பங்கு கொண்ட வீரர்களுக்கு பதக்கம் வழங்குவதற்கான யோசனை முன்னர் முன்மொழியப்பட்டது. ஆனால் இன்று அதற்கும் கூட பணம் இல்லை என்று தட்டிக்கழித்து விட்டார்கள்.

சரத் பொன்சேகாவுக்கு ஏற்ற பதவிகள் வழங்கப்படவில்லை. அவருக்கு விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளராக நியமனம் வழங்கத் தீர்மானிக்கப்பட்டதாகவும் அவர் அதை ஏற்க மறுத்துவிட்டதாகவும் தெரிவிக்கபடுகிறது.

மேலும் அவரது பெயரைக் கூட ஐ.டி.என். மற்றும் ரூபவாஹினி தொலைக்காட்சிகளில் குறிப்பிடவோ அவர் தொடர்பான செய்திகளை வெளியிடவோ தடை விதிக்கப்பட்டுள்ளது.

பண்டாரநாயக்க ஞாபகார்த்த மண்டபத்தில் இடம்பெற்ற இராணுவ ஆயுத கண்காட்சியில் கூட அவரது புகைப்படம் அகற்றப்பட்டு ஜனாதிபதியின் புகைப்படம் மாட்டப்பட்டிருந்தது. இது மேலிட உத்தரவு என்கிறார்கள்.

என்னை அன்று பலவாறாக ஏசிய மக்கள் இன்று ஏன் மௌனமாக இருக்கின்றார்கள்? இன்று சரத் பொன்சேகாவைப் பற்றி அவருக்கு ஏற்பட்டுள்ள அநீதி பற்றி ஏன் குரல் எழுப்ப மறுக்கின்றார்கள்?

57 ஆம் படையணி பிரிகேடியர் சவீந்திர சில்வாவின் பதவி தரமும் கூட இன்று கீழ்நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றது. இது குறித்தும் எவரும் எந்தக் கருத்தும் கூறுவதாகத் தெரியவில்லை" என்றார்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

கணக்கு வாக்கெடுப்பை சமர்ப்பிப்பதற்கு முடிவு -அரசாங்கம் அறிவிப்பு

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கம் 2010 ஆம் ஆண்டிற்கென வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்காமல் கணக்கு வாக்கெடுப்பை சமர்ப்பிப்பதற்கு முடிவெடித்துள்ளது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நேற்று செவ்வாய்க்கிழமை எம்பிலிப்பிட்டியவில் கூடிய விசேட அமைச்சரவைக் கூட்டத்தின் போதே இந்த முடிவு எட்டப்பட்டதாக நிதி மற்றும் திட்டமிடல் பிரதியமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.

ஆறாவது பாராளுமன்றத்தின் பதவிக் காலம் ஏப்ரல் மாதத்துடன் நிறைவடைய இருப்பதனால், பொதுத் தேர்தலுக்குப் பின்னர் புதிய அரசாங்கத்தினால் புதிய வரவு செலவுத் திட்டமொன்றைச் சமர்ப்பிக்கும் வகையிலேயே கணக்கு வாக்கெடுப்பு சமர்ப்பிக்கப்பட இருக்கின்றது. புதிய வரவு செலவுத் திட்டத்தைச் சமர்ப்பிக்கும் வரை செலவுகளை மட்டுமே உள்ளடக்கிய வகையிலேயே கணக்கு வாக்கெடுப்பு சமர்ப்பிக்கப்பட இருக்கின்றது. இதற்கான யோசனைகளை பிரதமர் அல்லது சபை முதல்வர் விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பர்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை ஜனாதிபதி எதற்காக 2 வருடங்கள் பாதுகாத்தார்: ரணில் கேள்வி


புரிந்துணர்வு உடன்படிக்கை பகிரங்கமானது. ஆனால், புலிகளுடனான ஜனாதிபதியின் பேச்சுவார்த்தை தான் இரகசியமானது. முடியுமெனில், இந்த இரகசியத்தை அம்பலப்படுத்த வேண்டும். இதன் பின்னரே தேசத்துரோகி யார் என்பதை அறிந்துகொள்ள முடியும் என்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். யுத்த நிறுத்த உடன்படிக்கையில் புலிகளுக்கு உயில் எழுதிக் கொடுக்கப்பட்டதாகக் கூறிய ஜனாதிபதி, அதனை இரண்டு வருடங்களுக்குப் பாதுகாத்தது எதற்காக? உண்மைகளை மூடிமறைக்க முற்பட வேண்டாம் என்றும் அவர் சொன்னார்.

கொழும்பு கேம்பிரிட்ஜ் டெரசில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விஷேட செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து வெளியிடுகையிலேயே எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார். இங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, 2006 2007 ஆம் ஆண்டு காலப் பகுதியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசனையின் பேரில் அவரது செயலாளர் லலித் வீரதுங்க கிளிநொச்சிக்கு சென்று பேச்சு நடத்தினார். இவரின் ஓமந்தையூடான பயணத்துக்கு படையினரின் தடைகள் எதுவும் இருக்கவில்லை. அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

இதன் பின்னர் பிறிதொரு சந்தர்ப்பத்தில் முன்னாள் அமைச்சர் அமரர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளேயும் புலிகளுடன் பேசுவதற்கு அங்கு சென்றிருந்தார். உள்நாட்டில் மட்டுமல்லாது வெளிநாடுகளிலும் இன்றைய அரசாங்கம் புலிகளுடனான இரகசியத் தொடர்புகளைப் பேணி வந்தது. 2002 ஆம் ஆண்டில் புலிகளுடன் புரிந்துணர்வு உடன்படிக்கை ஏற்படுத்தப்பட்டதன் பின்னர் அது நாட்டைக் காட்டிக் கொடுக்கும் உடன்படிக்கை என்று கூறி என்னை தேசத் துரோகி எனக் கூறினர்.

ஐக்கிய தேசியக்கட்சி புலிகளுடன் எந்த சந்தர்ப்பத்திலும் இரகசியத் தொடர்புகளைக் கொண்டிருக்கவில்லை. ஏற்படுத்தப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கை பகிரங்கமானது. அரசாங்கம் காத்து வந்த புலிகளுடனான இரகசியத் தொடர்புகளை மேலும் வலுப்படுத்துவதற்கு பணமும் பரிமாறப்பட்டது. இதனை மங்கள சமரவீர எம்.பி. உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் அம்பலப்படுத்தியுள்ளனர். இவ்வாறு இரகசிய உறவுகளை வைத்திருந்த அரசாங்கம் 2005 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது வடக்கு மக்களின் வாக்குரிமையையும் பறித்தெடுத்திருந்தமை தெரிந்த விடயமாகும்.

இது இவ்வாறிருக்க ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பஷில் ராஜபக்ஷ, அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா ஆகியோரின் தலைமையில் கூட புலிகளுடன் அரசாங்கம் இரகசிய பேச்சுக்களை நடத்தி வந்துள்ளது. இவற்றை அரசாங்கத்தினால் மூடி மறைத்து விட முடியாது.

அரசாங்கத்தினால் புலிகளுடன் மேற்கொள்ளப்பட்ட சகல தொடர்புகளுக்கும் இரகசிய பேச்சுக்களுக்கும் அதன் பின்னணிகளுக்கு புலிகள் அமைப்பின் தயா மாஸ்ரர் மற்றும் ஜோர்ஜ் மாஸ்ரர் ஆகியோரே சாட்சிகளாக இருக்கின்றனர். அரசாங்கத்துக்கு உதவிய தயா மாஸ்ரரும் ஜோர்ஜ் மாஸ்ரரும் இன்று அரசாங்கத்தின் பார்வையில் தேசத் துரோகிகளாக அல்லாது தேசப் பற்றாளர்களாக பார்க்கப்படுகின்றனர்.

என்னைத் தேசத் துரோகி என்று அரசாங்கம் கூறுகின்றது. அப்படியானால் 2002 இல் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பதவிக்கு வந்து மறுகணமே அதனை இரத்துச் செய்திருக்க வேண்டுமே. அப்படியானால் அவர் ஏன் அதனைச் செய்யவில்லை. இவ்வாறெல்லாம் தவறிழைத்துள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே இந்நாட்டின் துரோகியாவார்.

இன்று அவர் செல்லுமிடமெல்லாம் யுத்தத்தை தானே தனியாக வென்றதாக மார்தட்டுகிறார். ஆனால் படையினர் இங்கு மறைக்கப்பட்டும் மறக்கப்பட்டும் வருகின்றனர். யுத்தம் வெல்லப்பட்ட பின்னர் படையினருக்கான கௌரவம் அரசினால் அலட்சியப்படுத்தப்பட்டு வருகின்றது.

மக்களும் சொல்லொணாத் துன்பம் அனுபவித்து வருகின்றனர். எனவே தேசத் துரோகி யார் என்பதை புரிந்து கொள்ள முடிகின்றது. நான் தேசத் துரோகி இல்லை என்பதை உணர்த்தியிருக்கின்றேன். அதற்கான சக்தி ஜனாதிபதிக்கும் இருக்குமானால் அவர் அதனை நிரூபித்துக் காட்ட வேண்டும்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

அமைச்சர்களின் பாதுகாப்பு செலவீனங்கள் குறைக்கப்பட வேண்டும் : மங்கள சமரவீர


யுத்தம் முடிவடைந்துள்ள நிலையில், அமைச்சர்களுக்குப் பாதுகாப்புக்காக 50 பாதுகாப்பு வீரர்கள் மற்றும் அதிகமான குண்டு துளைக்காத வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவை குறைக்கப்பட வேண்டும்" என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மக்கள் பிரிவின் ஏற்பாட்டாளரும் எம்.பியுமான மங்கள சமரவீர தெரிவித்தார்.

இலங்கையில் அமைச்சர்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு தொடர்பிலும் இதனால் நாட்டில் ஏற்படும் பாதுகாப்பு செலவினம் குறித்தும் தெளிவுப்படுத்தும் ஊடகவியலாளர் மாநாடு இன்று ராஜகிரிய ஸ்ரீலங்கா சுதந்திர முன்னணி மக்கள் பிரிவு அலுவலகத்தில் இடம்பெற்றது.

அங்கு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

"அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவுக்கு கூட நமது நாட்டு ஜனாதிபதிக்கான பாதுகாப்புகளைப் போல் வழங்கப்படவில்லை. ராஜபக்ஷ குடும்பத்துக்கான பாதுகாப்பும் அந்த குடும்பங்களின் உறவினர்களில் இருந்தே பாதுகாப்பு உத்தியோகத்தர்களை நியமிப்பதும் வரையறையை மீறுவதாக உள்ளது.

ஜனாதிபதியின் பாதுகாப்புக்கென குவிக்கப்பட்டிருக்கும் ஆயிரக்கணக்கான துருப்புக்களை 50 ஆகக் குறைப்பதன் ஊடாகவும் அதேபோல் அநாவசிய வாகன விரயத்தைக் கட்டுப்படுத்தும் விதத்தில் அவரது பாதுகாப்புக்கென வழங்கப்பட்டிருக்கும் வாகனங்களை ஐந்தாக குறைப்பதற்கும் தேசிய பாதுகாப்பு சபைக்கு நான் ஆலோசனை வழங்குகிறேன்.

நாட்டின் நலன்கருதி தேசிய பாதுகாப்பு சபை, அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

உயிர் அச்சுறுத்தல் ஏற்படும் பட்சத்தில் அவர்கள் தொடர்பான் முறைப்பாட்டினைச் சமர்ப்பிக்கும் போது, அது தொடர்பான விசாரணைகளை நேரடியாக நடத்தும் அதிகாரம் பாதுகாப்பு தரப்பினருக்கு வழங்கப்பட வேண்டும்.

சூழ்நிலைக்கேற்ப, பாதுகாப்பு செயலாளர், படை அதிகாரிகள் ஆகியோர் இது தொடர்பில் கலந்தாலோசித்து ஒரு தீர்வினை எடுக்க வேண்டும்.


விமான சேவைகள் நஷ்டம்

இதுவரை காலமும் இலாபத்தில் இயங்கிவந்த நிறுவனங்கள் இன்று நஷ்டத்தில் இயங்கி வருகின்றன. இதற்குக் காரணம் இன்றைய அரசாங்கமே.

1980 ஆம் ஆண்டிலிருந்தே விமான சேவையாற்றிவரும் நிறுவனம் இலங்கை விமான சேவை. இன்று இது நஷ்டத்தில் இயங்கும் நிலை தோன்றியுள்ளது.

வெளிநாடுகளிடம் கடன்வாங்கி அம்பாந்தோட்டையில் துறைமுகம் ஒன்று அமைக்கப்பட்டு வருகிறது. இன்று கொழும்புத் துறைமுகம் வீழ்ச்சி அடைந்து காணப்படுகின்றது. துறைமுக ஊழியர்களுக்கு மேலதிக கொடுப்பனவுகள் வழங்கப்படுவதில்லை. இதனால் அவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

தென்மாகாண சபை தேர்தலுக்காகப் பல அரச வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு மோசடிகள் நடைபெற்று வருகின்றன" என்றார்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

நாளொன்றுக்கு கோடிக்கணக்கான நிதியை செலவழித்து இடம்பெயர்ந்த மக்களை பராமரிப்பது வாக்குகளை அபகரிக்கவல்ல - ஜனாதிபதி

நாளொன்றுக்கு கோடிக்கணக்கான நிதியைச் செலவழித்து இடம்பெயர்ந்துள்ள அப்பாவி மக்களை நாங்கள் பராமரிப்பது வாக்குகளை அபகரிப்பதற்காக அல்ல. அங்குலத்திற்கு அங்குலம் புதைக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகளின் மேல் இந்த மக்களைத் தள்ளிவிட முடியாது.

அரசியலைவிட அந்த மக்களின் உயிர்கள் எமக்கு பெறுமதியானவை. அதனால் தான் புலிகளின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் முழு உலகமும் எமக்கு எதிராக நின்ற போதும் நாங்கள் இந்த மக்களை மீட்டெடுத்தோம் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

அலரி மாளிகையில் இன்று திங்கட்கிழமை காலை நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார்
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

இலங்கைக்கு மீண்டும் வருவதற்கு குச்னர் மிலிபான்ட் விருப்பம்- அமைச்சர் போகொல்லாகமவுடனும் பேச்சு

பிரான்ஸ் வெளிநாட்டமைச்சர் பேர்னாட் குச்னர், பிரிட்டிஷ் வெளிநாட்டமைச்சர் டேவிட் மிலிபான்ட் ஆகிய இருவரும் வட பகுதியில் இடம்பெயர்ந்த மக்களின் நிலைமையை அவதானிப்பதற்காக மீண்டும் இலங்கைக்கு வருகை தர விருப்பம் தெரிவித்துள்ளனர். நியூயோர்க்கில் வைத்து வெளியுறவு அமைச்சர் றோஹித போகொல்லாகமவிடம் இந்த முடிவை அவர்கள் தெரிவித்ததாக வெளியுறவு அமைச்சு விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளியுறவு அமைச்சர் போகொல்லாகம நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமைக் காரியாலயத்தில் பிரான்ஸ், பிரிட்டிஷ் வெளிநாட்டøமச்சர்களை வெள்ளிக்கிழமை சந்தித்தார். அமைச்சர் போகொல்லாகம விடுத்த அழைப்பின் பேரில் அமைச்சர்கள் குச்னர், மிலிபான்ட் ஆகியோர் இந்த வருடம் ஏப்ரல் மாதம் இலங்கைக்கு மேற்கொண்ட விஜயத்தின்போது மூன்று அமைச்சர்களுக்கும் இடையே இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் தொடர்ச்சியாகவே தற்போதைய சந்திப்பு இடம்பெற்றது.

இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருக்கும் நலன்புரி கிராமங்களின் நிலைமை, முகாமிலிருந்து அழைத்துச் செல்லப்படுவோர் வேறு இரகசிய நிலையங்களில் வைக்கப்படுகிறார்களா என்பது உட்பட மீள் குடியேற்ற முயற்சிகள் ஆகியன குறித்து இலங்கை தரப்பிடமிருந்து பிரான்ஸ், பிரிட்டிஷ் அமைச்சர்கள் விபரங்களைக் கோரினார்கள். இது சம்பந்தமாக ஆரம்பத்தில் இணக்கம் தெரிவிக்கப்பட்ட கால எல்லை, மீள குடியேற்றப்படும் மக்கள் தொகை ஆகியவற்றை இலங்கை அரசாங்கம் அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும் என்று பிரான்ஸ், பிரிட்டிஷ் அமைச்சர்கள் கேட்டுக் கொண்டார்கள். இதற்குப் பதிலளித்த அமைச்சர் போகொல்லாகம, எவ்வõறாயினும் கண்ணிவெடிகளை துரிதமாக அகற்றுவதற்கு போதிய உபகரணங்களும் பயிற்றப்பட்ட ஊழியர்களும் கிடைப்பதில் மீள் குடியேற்றம் தங்கியுள்ளது என்று கூறினார். சர்வதேச சமூகத்தின் ஒரு பகுதி ஏற்கனவே இந்த விடயத்தில் உதவி வருவதாக தெரிவித்த அமைச்சர் ஏனையோரும் உதவ முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

மக்களை நலன்புரி கிராமங்களில் வைத்திருப்பதில் அரசாங்கத்திற்கு எவ்வித நன்மையும் இல்லை என்று தெரிவித்த அமைச்சர், மீள் குடியமர்வுக்கு அரசாங்கம் முன்னுரிமை கொடுத்துள்ளது என்றும் கூறினார். கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுள்ள கிழக்கு மாகாணத்தில் குடியமர்த்துவதற்கென ஏற்கனவே ஒரு தொகுதி மக்கள் இனம் காணப்பட்டுள்ளார்கள் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

அமெரிக்கா உட்பட சில நாடுகள் இலங்கையை போர்க் குற்ற நாடாக பிரகடனப்படுத்த முயற்சி - விமல் வீரவன்ச எம்.பி. குற்றச்சாட்டு


சர்வதேச மட்டத்தில் இலங்கையை ஒரு போர்க் குற்ற நாடாக பிரகடனப்படுத்தி விட வேண்டும் என்பதில் புலிகளுக்கு ஆதரவான அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகள் சூழ்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

புலிகள் அழிக்கப்பட்டு விட்டனர் என்ற வேதனையிலே இவ்வாறு இந்த நாடுகள் செயற்படுகின்றன என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச குற்றம் சாட்டினார்.

விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டுள்ள போதிலும் அந்த அமைப்பின் நோக்கங்களை நிறைவேற்றத் துடிக்கும் சர்வதேச சக்திகளின் சதித் திட்டங்களை முறியடிப்பதற்கு அனைவரும் அணி திரள வேண்டும். அத்துடன் இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றுக்கு எமது கட்சி தயாராகி வருகின்றது என்றும் அவர் தெரிவித்தார்.

கட்சித் தலைமையகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே விமல் வீரவங்ச மேற்கண்டவாறு தெரிவித்தார்
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

வெளிவிவகார அமைச்சராக பசில் ராஜபக்ஷவை நியமிக்க முயற்சிகள்


விரைவில் மேற்கொள்ளப்படவுள்ள அமைச்சரவை மாற்றத்தின்போது வெளிவிவகார அமைச்சர் பதவியை ஜனாதிபதியின் சிரே~;ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷவிற்கு வழங்கத் திட்டமிட்டிருப்பதாக அரசாங்கத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மகிந்தராஜபக்ஷ ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்ட பின்னர் வெளிவிவகார அமைச்சராக ரோகித்த போகொல்லாகம நியமிக்கப்பட்டார். அவர் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆட்சிக் காலத்தில் அரசாங்கத்தில் இணைந்துகொண்டிருந்தார்.

ரோகித்த போகொல்லாகம வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்ட பின்னர், அவர் அடிக்கடி வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டதுடன், அந்தப் பயணத்தின் போது குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள், தனக்கு நெருக்கமானவர்கள் பலரை தன்னுடன் அழைத்துச் செல்வதை வழமையாகக் கொண்டிருந்தார். இந்தப் பயணங்களுக்காக பெருமளவில் மக்களின் பணம் செலவிடப்பட்டு, ஆடம்பர விடுதிகளில் தங்கியிருந்ததாக ஊடகங்கள் தொடர்ந்தும் தகவல்களை வெளியிட்டுவந்தன. இதனைத்தவிர வெளிவிவகார சேவையும் சீர்குலைவை எதிர்நோக்கியுள்ளது. இந்தப் பின்னணியிலும் ரோகித்த போகொல்லாகமவைப் பாதுகாத்துவந்த ஜனாதிபதி கடந்த வாரத்தில் அவரை கடுமையாக சாடியதாக வார இதழ்கள் அனைத்தும் செய்திகளை வெளியிட்டிருந்தன.

இதன் அடுத்தக் கட்ட நடவடிக்கையாக ரோகித்த போகொல்லாகமவை வெளிவிவகார அமைச்சர் பதவியிலிருந்து நீக்கிவிட்டு பசில் ரராஜபக்ஷவை அந்தப் பதவியில் அமர்த்தவுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

சமீபத்தில் இரவு விருந்தொன்றில் இந்த விடயம் பேசப்பட்டபோது பெருமளவானவர்கள் பஸிலையே விரும்பினர் எனக் கூறப்படுகிறது. விடுதலைப் புலிகளுடனான யுத்தம் மிகவும் தீவிரமடைந்திருந்த வேளை அதனை நிறுத்துமாறு சர்வதேச சமூகங்கள் இலங்கை மீது கடும் அழுத்தங்களைப் பிரயோகித்த வேளை, பஸில் ராஜபக்ஷ இந்தியாவுடனான உறவைக் கையாண்ட விதத்தைப் பலரும் சுட்டிக்காட்டியுள்ளனர். அதேவேளை, பஸில் ராஜபக்ஷ இந்தப் பதவியை ஏற்றுக்கொள்வாரா என்ற கேள்வியும் சுட்டிக்காட்டப்படுகின்றது வெளிவிவகார அமைச்சர் முழுமையாக வெளிநாட்டு விடயங்களில் கவனம் செலுத்தவேண்டும். உள்நாட்டு அரசியல் குறித்து சிந்திப்பதற்கு அவருக்கு நேரமிருக்காது. பஸில் ராஜபக்ஷவைப் பொறுத்தவரை தனது அரசியல் எதிர்காலம் குறித்த எதிர்பார்ப்புகள் அவருக்கு இருக்கலாம். தனது அரசியல் செல்வாக்கைக் கட்டியெழுப்ப அவர் விரும்பலாம்.மேலும் வடக்கினதும் கிழக்கினதும் மீள்குடியேற்ற, புனர்வாழ்வு நடவடிக்கைகள் அவர்மீது சுமத்தப்பட்டுள்ள நிலையில், வெளிவிவகார அமைச்சர் பதவி இதிலிருந்து அவர் தூர விலகவேண்டிய நிலையை உருவாக்கும்.

விடுதலைப் புலிகளின் பிரசாரம் தீவிரமாகப் பல வழிகளில் முன்னெடுக்கப்படுகின்ற சூழ்நிலையில், யுத்தத்திற்குப் பிந்திய இராஜதந்திர அணுகுமுறைகளைமேற்கொள்ள வேண்டிய தேவை இலங்கைக்கு உள்ளது எனவும் அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன

அதுமாத்திரமல்லாது ஊடகத்துறை அமைச்சை அநுர பிரியதர்~ன யாப்பாவிடமிருந்து பெற்று தனக்குக் கீழ் கொண்டுவந்து அமைச்சரவை அந்தஸ்தற்ற ஊடகத்துறை அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்தனவை அந்தப் பதவியில் வைத்துக்கொள்ள ஜனாதிபதி திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

ரஜனி திரணகம நினைவுகள் 20 ஆண்டுகளின் பின்


தி. ஸ்ரீதரன் பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எப்

மனித உரிமையாளரும், பெண்ணியவாதியும், மருத்துவ பேராசிரியருமான ரஜனி திரணகம அவர்கள் படுகொலை செய்யப்பட்டு 20 ஆண்டுகள் உருண்டோடி விட்டன.

அவர் 35 வயதில் படுகொலை செய்யப்பட்டார். எமது சமூகம் அதனுள் பிரசவித்த அரசியல் இயக்கங்கள் அவற்றின் செயற்பாடுகள் தொடர்பாக ஆக்கபூர்வமான முறையில் விமர்சித்திருந்தார். ‘முறிந்த பனை’ என்ற நூலினூடாக அவரும் அவரது சகாக்களான பல்கலைக்கழக ஆசியர்களும் இதனை மேற்கொண்டிருந்தனர்.

வெளிப்படையாகவும், பகிரங்கமாகவும் தமிழ் மக்கள் மத்தியில் நிலவிய ஜனநாயக விரோத செயற்பாடுகள் தொடர்பாக விமர்சனங்களையும், விழிப்புணர்வு கருத்துக்களையும் கேள்விகளையும் முறிந்த பனை எழுப்பியிருந்தது. இதற்காகவே அவர் குரூரமானமுறையில் புலிகளால் படுகொலைசெய்யப்பட்டார்

அவரது பங்களிப்பு எவ்வளவு முக்கியமானது என்பதை கடந்த 20 வருட அனுபவங்களிலும், எமது சமூகத்துக்கு ஏற்பட்ட பேரழிவுகளிலும், பின்னடைவுகளிலும் நாம் உணர்ந்து கொள்ளக்கூடியதாக இருந்தது. அவரது விமர்சனங்கள் பின்னாளில் வரக்கூடிய பேரழிவுகள் பற்றிய எச்சரிக்கையாகவும் இருந்தது.

ஆரோக்கியமான விமர்சனங்கள் செவிமடுக்கப்பட்டிருந்தால் அதற்கான இடைவெளி எமது சமூகத்தில் அனுமதிக்கப்பட்டிருந்தால் பெருமளவு உயிரழிவுகளை தவிர்த்து அரசியல் உரிமைகளை வென்றெடுக்கக்கூடிய பல சந்தர்ப்பங்களை நாம் இழந்திருக்கமாட்டோம்.

பகுத்தறிவிற்கு புறம்பாக அழிவை நோக்கி எந்த குற்ற உணர்ச்சியும் இன்றி எந்த பிரக்ஞையும் இன்றி அழைத்துச் செல்வதில் இருந்த வன்முறை உணர்வு ஆயுதங்களை நேரடியாக கையாள்பவர்களிடம் மாத்திரம் இருக்கவில்லை தமிழ் ஊடகம், தமிழர்கள் மத்தியில் நிலவிய ஆதிக்கத்தை வழிபடும் அரசியல் எல்லா இடங்களிலுமே வன்முறை வௌ;வேறு வடிவங்களில் காணப்பட்டது.

ஏகபிரதிநிதித்துவ கருத்துரு தமிழர்கள் மத்தியில் பலவந்தமாக விதைக்கப்பட்டிருந்தது. கேள்விக்கு இடமற்ற பாசிசம் மெல்ல வளர்ச்சியடைந்தது. பௌத்த சிங்கள பேரினவாதமும், தமிழ் பாசிசமும் ஒன்றையொன்று போஷித்து வளர்ந்தன.

இவற்றிற்கிடையிலான ஆதிக்கப் போட்டியில் காயடிக்கப்பட்டது குறிப்பாக தமிழ் மக்களினதும், பொதுவாக இந்த நாட்டின் அனைத்து மக்களினதும் வாழ்வே.

இன்று நாம் ஆரம்பித்த இடத்திற்குக் கூட திரும்பி வரவில்லை. அதைவிட மோசமான, இழிவான, அவலமான, அவமானகரமான நிலைமையை அடைந்துள்ளோம்.

ஆனால் தமிழ் பாசிசம் தனது வரலாற்றுத் தோல்வியை அடைந்தது. தனது அழிவிற்கான பொறிமுறையை உலகளாவிய எல்லா பாசிச இயக்கங்களை போலவே தமிழர்கள் மத்தியில் நிலவிய பாசிசமும் கொண்டிருந்தது.

ஆனால் தற்போது பாரிய யுத்தத்தின் பின்னர் மக்கள் மிகவும் பலவீனமடைந்த நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். முகாம்களில் உள்ள மக்கள் தமது சொந்த இடங்களுக்கு அனுப்பப்பட வேண்டும். அங்கு சுயமானதும், பாதுகாப்பானதுமான வாழ்வு கட்டியெழுப்பப்பட வேண்டும். மூன்று இலட்சம் மக்கள் பாரிய இழப்புக்களுக்குப் பின்னர் முட்கம்பி வேலிகளுக்குப் பின்னால் வாழ்வதை யாரும் எளிதாக எடுத்துவிட முடியாது.

தாமதமின்றி அவர்கள் மீளக் குடியேற்றப்பட வேண்டும்.

அதேவேளை தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளும் ஏனைய இலங்கையின் முஸ்லீம், மலையக மக்களின் உரிமைகளும் அங்கீகரிக்கப்பட வேண்டும். இலங்கை ஒரு பல்லினங்களின் நாடாக கட்டியெழுப்பப்பட வேண்டும்.

மக்களுக்கிடையே உறவுகளும், புரிதலும் ஏற்படுவதற்கான சந்தர்ப்பங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும்.

வௌ;வேறு கருத்துக்களுடன் சமூகத்தில் மனிதர்கள் வாழ்வதற்கான உரிமை பாதுகாக்கப்பட வேண்டும்.

ஆயுத கலாச்சாரத்தின் மிச்சம் மீதி முடிவுக்கு வர வேண்டும்.

மக்கள் சுதந்திரமாக நாட்டின் எப்பகுதிக்கும் சென்று வருவதற்கான உரிமைகள் அங்கீகரிக்கப்பட வேண்டும்.

மொத்தத்தில் ஜனநாயகத்தையும், மனித உரிமைகளையும் அடிப்படையாகக் கொண்ட வாழ்வொன்று கட்டியெழுப்பப்பட வேண்டும்.

இதுவே ரஜணி திரணகம அவர்களின் சிந்தனைகளுக்கு நாம் செய்யும் மரியாதையாக இருக்க முடியும்.

தி. ஸ்ரீதரன் பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எப்
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

சகல இனமக்களும் பங்கெடுக்கும் வகையில் அரச கட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டும்-இரா. சம்பந்தன்!


பாராளுமன்ற தேர்தல் முறைமை தொடர்பாக சிந்திப்பதைவிடுத்து இந்த நாட்டில் இணக்கப்பாடுகளை ஏற்படுத்தக்கூடிய அனைத்து இன மக்களும் பங்கெடுக்க கூடியதானதொரு அரச கட்டமைப்பை உருவாக்க இடமளிக்க வேண்டும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் குழுக்களின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார். அரச கட்டமைப்பை உருவாக்குவதற்கு இடமளிக்காவிடின் எந்தவிதமான அர்த்த புஷ்டியான விடயத்தையும் செய்துவிட முடியாது என்றும் அவர் சொன்னார்.

பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற பாராளுமன்ற திருத்தச் சட்டமூல விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்; இந்த சட்டமூலததின் மூல வடிவம் சபையில் சமர்ப்பிக்கப்படவில்லை. அதில் அரசின் அர்த்தமான சிந்தனையை புரிய முடிகிறது என்பதுடன் திருத்தங்களும் மாற்றங்களும் முன்வைக்கப்பட்டுள்ளன. அதனை வரவேற்கின்றோம். சிறுபான்மை எண்ணிக்கை கொண்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் போன்ற கட்சிகளுக்கு சட்டமூலத்தின் இரண்டாம் பந்தியில் 6ஆம் சரத்தின் உபபிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளமை பிரச்சினையாகவே அமையும். இன, சமய ரீதியிலான அரசியல் கட்சிகளை அங்கீகாரம் இழக்கச் செய்வதற்கு எதிராக உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அவ்வாறான சொற்களை ஏற்கமுடியாது என்றும் அதனை எதிர்ப்பதாகவும் தீர்ப்பளித்துள்ளது. வாக்குரிமை இறைமையுடன் ஏற்புடையது என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.

இதற்கு பின்னர் இன, மத போன்ற சொற்கள் அகற்றப்படும் என்றும் அதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அரசாங்கம் அறிவித்திருக்கின்றமை வரவேற்கத்தக்கதாகும். சமூகம்இ சமயம் சார்ந்த முக்கியத்துவத்தை ஒரு வரலாற்று ரீதியிலேயே பார்க்க வேண்டும். சோல்பரி யாப்பை பொறுத்தமட்டில் அந்த சட்டமோ சமயத்தை தடைச் செய்வதாகவோ, பிரித்து வைப்பதாகவோ கூறவில்லை. ஏனைய சமூகங்களின் பால் பாதிக்கப்படுவதையும் கூறவில்லை. பாகுபாடுகளையும் காட்டவில்லை. காட்டவும் கூடாது.

1972, 1978 ஆம் ஆண்டு அரசியலமைப்பு திருத்தங்கள் ஒரு கருவியாக செயற்பட்டுள்ளன. இந்த நாட்டில் விசேடமாக தமிழ் மக்கள் 72-78ஆம் திருத்தங்களில் இருந்து விலக்கப்பட்டிருந்தனர்.

சிங்களமொழி, பௌத்த மதம் என்று கூறப்பட்டு ஒரு சமய, சமூகத்திற்கு மட்டுப்படுத்தப்பட்டது. சோல்பரி யாப்பே பல பிரிவுகள் ஏற்படுவதற்கு காரணமாக அமைந்தன.இன்றைய சூழ்நிலையில் சமூகஇ பொருளாதார அரசியல் நன்மைகளை அவர்களே வளர்ப்பதற்கு தேவையான வகையில் ஏற்புடையதான கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும். இல்லையேல் அரசியலமைப்பில் அர்த்தபுஷ்டியை ஏற்படுத்த முடியாது.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

ரோஹித போகல்லாகம -எஸ்.எம். கிருஷ்ணா நியூயோர்க்கில் சந்திப்பு


நியூயோர்க்கில் நடக்கும் சர்வதேச காலநிலை மாற்றம் குறித்த மாநாட்டில் கலந்து கொள்ள சென்றுள்ள ‌இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, இலங்கை வெளியுறவு அமைச்சர் ரோஹித போகல்லாகமவை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

இலங்கையில் வடக்கு பகுதியில் போரினால் பாதிக்கப்பட்ட சுமார் 2,80,000 தமிழ் மக்களை முகாம்களிலிருந்து அவர்களது சொந்த இடங்களில் குடியமர்‌த்துவது குறித்து எஸ்.எம்.கிருஷ்ணா அமைச்சர் ரோகிதவுடன் ஆலோசித்துள்ளார்.

போர் நடைபெற்ற பகுதிகளில் புதைத்து வைக்கப்பட்டிருக்கும் கண்ணிவெடிகளை அகற்றும் பணி துரிதமாக இடம்பெற்று வருவதாகவும், ஒரு சில பகுதிகளில் மக்கள் குடியமர்த்தப்பட்டு வருவதாகவும் அமைச்சர் ரோஹித போகல்லகம தம்மிடம் தெரிவித்ததாக அமைச்சர் கிருஷ்ணா கூறியதாக பி.டி.ஐ. இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

தமிழர்களுக்கு அதிகார பங்கீடு வழங்குவது குறித்து ரோஹித போகல்லகம கருத்து எதுவும் வெளியிடவில்லை என எஸ்.எம்.கிருஷ்ணா தெரிவித்ததாகவும் பி.ரி.ஐ. இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

இலங்கைக்கான இரண்டாம் கட்ட கடன் ஒக்டோபர் நடுப்பகுதியில் வழங்கப்படும் : சர்வதேச நாணய நிதியத்தியம்


இலங்கையின் பொருளாதார நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருகின்றோம். தற்போதைய நிலைமையில் நாட்டின் பொருளாதார நிலைமை திருப்திகரமாக அமைந்துள்ளது. இதனடிப்படையில் இன்னும் சில வாரங்களில் சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர் சபை கூடி இலங்கைக்கான கடனின் இரண்டாம் தவணைப்பணத்தை ஒக்டோபர் மாதத்தின் நடுப்பகுதியில் வழங்குவதற்கான தீர்மானத்தை எடுக்கும் என்று இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த சர்வதேச நாணய நிதிய குழுவின் பிரதிநிதி கலாநிதி பிறையன் ஏய்ட்கன் தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியத்தின் அலுவலகம் ஒன்று இன்னும் சில வாரங்களில் இலங்கையில் அமைக்கப்படும். மேலும் நாணய நிதியம் 2.6 பில்லியன் டொலர் கடனை இலங்கைக்கு வழங்குவதில் எந்தவிதமான மறைக்கப்பட்ட நிபந்தனைகளும் இல்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார். இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த சர்வதேச நாணய நிதியத்தின் விசேட குழு நாட்டின் பல்வேறு தரப்பினருடனும் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை மத்திய வங்கயில் செய்தியாளர் மாநாடு ஒன்றை நடத்தியது. இதில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே குழுவின் பிரதிநிதி கலாநிதி பிறையன் ஏய்ட்கன் இந்த விடய“ங்களை குறிப்பிட்டார்.

செய்தியாளர் மாநாட்டில் தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர் மேலும் கூறியதாவது:

இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியம் 2.6 பில்லியன் டொலர்களை கடனாக வழங்குவதற்கு கடந்த ஜூலை மாதம் தீர்மானித்த நிலையில் அது தொடர்பான மீளாய்வு குறித்து ஆராய்வதற்காக நாணய நிதியத்தின் குழுவொன்று இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டது. இந்த குழுவில் பல உறுப்பினர்கள் இடம்பெறுகின்றனர். கடந்த எட்டாம் திகதியிலிருந்து நாங்கள் மீளாய்வு நடவடிக்கைகளை மேற்கொண்டுவந்தோம். அடுத்துவரும் 18 காலப்பகுதியில் நாங்கள் காலாண்டுகளில் இவ்வாறான மீளாய்வுகளை நடத்தவேண்டியுள்ளது.

நாட்டின் பொருளாதாரத்தை மதிப்பிடல், உடன்படிக்கையின் மூலம் ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயங்களை நிறைவேற்றுவதில் உள்ள முன்னேற்றங்கள் போன்றவற்றை மீளாய்வு செய்யவேண்டியுள்ளது. எமது விஜயத்தின்போது நாங்கள் மத்திய வங்கி, நிதியமைச்சு, வர்த்தக சமூகம், அமைச்சுக்கள், சமூக அமைப்புக்கள், தனியார் துறை வர்த்தக சமூகம் ஆகியவற்றின் பிரதிநிதிகளை சந்தித்து பேச்சுநடத்தினோம். இலங்கையின் தற்போதைய பொருளாதார அபிவிருத்திகள் எதிர்பார்க்கப்பட்டதையும் விட வலுவானதாக காணப்படுகின்றன. திருப்திகரமாக அமைந்துள்ளன. பணவீக்கம் குறைந்த மட்டத்தில் காணப்படுவதுடன் ஏற்றுமதியிலும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. பணவீக்கம் ஒற்றை இலக்கத்துக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

அரசாங்கத்தின் கொள்கை நடைமுறைகள் நாணய நிதியத்துடன் இணக்கப்பாட்டுக்கு வந்த விடயங்களுடன் ஒன்றிப்போயுள்ளதை காணமுடிகின்றது. இது தொடர்பில் திருப்தியடையலாம். கடந்தகாலங்களில் சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை உயர்வினால் இலங்கை அசௌகரியங்களை எதிர்கொண்டதையும் நாம் பார்க்கவேண்டும். நாட்டின் வெளிநாட்டு சொத்துக்களின் பெறுமதி உயர்ந்த மட்டத்தில் காணப்படுகின்றது. மேலும் வட்டி வீதங்களை குறைப்பதற்கு மத்திய வங்கி எடுத்த தீர்மானங்களும் வரவேற்கத்தக்கன.

இதேவேளை 2009 ஆம் ஆண்டின் வரவு செலவுத்திட்டத்தின் பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 7 வீதமாக அமையவேண்டும். அதாவது கடந்த வருடம் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத்திட்டத்தின் அடிப்படையிலேயே இவ்வருட இறுதியில் பற்றாக்குறை 7 வீதமாக காணப்படவேண்டும். எனினும் 2010 ஆம் ஆண்டுக்குரிய வரவு செலவுத்திட்டத்தின் பற்றாக்குறை 6 வீதமாக இருக்கவேண்டும் என்று நாங்கள் கோரியுள்ளோம். மேலும் நாட்டின் வரி நிர்வாகத்தை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. முக்கியமாக வரி ஆணைக்குழு நிறுவப்பட்டுள்ளதை குறிப்பிடலாம். எமது மீளாய்வு முடிந்துள்ள நிலையில் நாங்கள் வாஷிங்டனுக்கு திரும்பிச் செல்கின்றோம். ஆனால் இன்னும் சில வாரங்களுக்கு இலங்கையின் பொருளாதார நிலைமை தொடர்பில் கண்காணிப்போம். இவ்வாறான திருப்திகரமான நிலைமை தொடருமானால் நாங்கள் எமது பரிந்துரையை சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர் சபைக்கு வழங்குவோம்.

இந்நிலையில் இலங்கைக்கõன கடனின் அடுத்த தவணைப்பணத்தை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் நடுப்பகுதியில் வழங்குவதற்கõன தீர்மானத்தை நாணய நிதியத்தின் பணிப்பாளர் சபை எடுக்கும் என்று எதிர்பார்க்கின்றோம். அதாவது எமது பரிந்துரைகளைக்கொண்டே பணிப்பாளர் சபை தவணைப்பணத்தை வழங்குவதற்கான தீர்மானத்தை எடுக்கும்.

பொருளாதார வளர்ச்சி வீதத்தை இலங்கை முறையாக பராமரித்துச் செல்கின்றது. தற்போதைய நிலைமையில் நிலக்கண்ணிவெடிகளை அகற்றல், இடம்பெயர்ந்தவர்களை மீள்குடியேற்றல் மற்றும் அபிவிருத்தி செயற்திட்டங்கள் போன்றவற்றை நாங்கள் பார்க்கவேண்டும். சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு கடன் வழங்குவதில் எந்தவிதமான மறைக்கப்பட்ட நிபந்தனைகளும் உள்ளடக்கப்படவில்லை என்பதனை தெரிவிக்கின்றேன். மறைக்கப்பட்ட நிபந்தனைகளை மேற்கொள்ளும் கொள்கை சர்வதேச நாணய நிதியத்திடம் இல்லை என்பதனை கூறவேண்டும். நாணய நிதியம் மிகவும் வெளிப்படையான முறையில் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டுவருகின்றது. இலங்கை மத்திய வங்கியின் தங்க விற்பனை விவகாரம் குறித்து எங்களுக்கு எதுவும் தெரியாது. அது எமது விவகாரத்துக்குட்பட்ட விடயமும் அல்ல. அது தொடர்பில் மத்திய வங்கியுடன் எவ்விதமான பேச்சுக்களையும் நாங்கள் நடத்தவில்லை.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

மகிந்தவை தோற்கடிக்க 15 இற்கும் அதிகமான கட்சிகள் இணைந்து கொள்ளும்?


எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில், மகிந்த ராஜபக்சவை தோற்கடிக்கின்றமையை நோக்கமாகக்கொண்டு அமைக்கப்பட இருக்கும் எதிர்க்கட்சிகளின் உத்தேச கூட்டணியில் 15 இற்கும் அதிகமான கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புகள் இணைந்து கொள்ளும் என்று ஐ.தே.க. நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

எதிர்க்கட்சிகளின் உத்தேச கூட்டணியை அமைப்பது தொடர்பாக சுமார் ஐந்து கட்சிகள் ஐ.தே.கவுடன் ஆரம்பத்தில் புரிந்துணர்வு உடன்படிக்கையை மேற்கொள்ளும்.

நாளடைவில் 15 இற்கும் அதிகமான கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புகள் இக்கூட்டமைப்பில் இணையும் என்று அக்கட்சி தெரிவித்துள்ளது. இக்கூட்டமைப்புக்குத் தலைவராக ஐ.தே.க தலைவர் ரணில் விக்கிரமசிங்கவே இருப்பார் என்றும் அக்கட்சி கூறியது.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

அரசியல் தீர்விலும் மீள் குடியேற்றத்திலும் அரசாங்கம் அக்கறை காட்டவேண்டும் - சபையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தல்


தேசிய இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்விலும் இடம்பெயர்ந்த மக்களை மீளக் குடியமர்த்தும் விடயத்திலும் அரசாங்கம் அதிக அக்கறை காட்ட வேண்டியது அவசியம். பல வருடங்களாக யுத்தத்தின் பிடியில் சிக்கியிருந்த மக்கள் இன்னும் நலன்புரி முகாம்களில் வாடுவதனை அனுமதிக்க முடியாது என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சொலமன் சூ. சிறில் தெரிவித்தார்.

வீடு வசதிகள் அற்று எங்கு போவது என்று தெரியாத நிலையில் வந்த மக்களே நலன்புரி முகாம்களில் உள்ளனர் என்று ஊடகத்துறை அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்த கருத்து "வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதற்கு'' ஒப்பானதாகும் என்றும் அவர் கூறினார்.

சபையில் நடைபெற்ற அனர்த்த நிவாரணம் மற்றும் மீள்குடியேற்ற அமைச்சின் நிதி குறைநிரப்பு பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே சிறில் எம்.பி. இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு அவர் கூறியதாவது,

அனர்த்த நிவாரண சேவைகள் மற்றும் மீள்குடியேற்ற அமைச்சின் நிதி குறை நிரப்பு பிரேரணையில் நாம் கனத்த இதயத்துடன் ஏமாற்றம் நிறைந்த சூழ்நிலையிலேயே பேசுகின்றோம். இந்த அமைச்சு மக்களினால் தினம் பேசப்படுகின்ற அமைச்சு. அதேவேளை உலகத்தினால் பார்க்கப்படுகின்ற அமைச்சு அது நன்மையாக இருக்கலாம் தீமையாக இருக்கலாம். ஆனால் நாங்கள் உண்மையை பேச விரும்புகின்றோம்.

கடந்த மூன்று தசாப்த காலமாக தொடர்ந்து வந்த மோதல்கள் முடிவிற்கு வந்துள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளபோதிலும் தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் ரீதியிலான தீர்வு காண்பது மற்றும் பாதிக்கப்பட்ட மக்களை மீள் குடியேற்றுவது போன்ற விடயங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்பதை இன்றைய இச்சபை விவாதத்தில் அரசையும் அமைச்சையும் அதி வினயமாக கேட்டுக்கொள்கின்றோம்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

ஒருசில புலி உறுப்பினர்களுக்கு மட்டும் பிணை வழங்குவதா? : மனோ கணேசன்


தெரிவு செய்யப்பட்ட சில தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு மட்டும் பிணை வழங்கும் நடைமுறைகளை ஏற்றுக்கொள்ள முடியாதென ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளதாக கொழும்பில் வெளியாகும் ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சிரேஷ்ட தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு மன்னிப்பு வழங்கப்படுவதனை எந்த வகையில் நியாயப்படுத்த முடியும் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

"தயா மாஸ்டர், ஜோர்ஜ் மாஸ்டர் போன்ற சிரேஷ்ட விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு மன்னிப்பு வழங்கப்பட்டுள்ள அதேவேளை, சாதாரண விடுதலைப் புலி சந்தேக நபர்கள் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

முன்ளாள் போராளிகளுக்கு அளிக்கப்படவுள்ள மறுவாழ்வு திட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் என்றும் ஆதரவளிக்கும்.

16 வருடங்களுக்கு மேலாக தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலி சந்தேக நபர்களுக்கு இந்தத் திட்டத்தின் மூலம் நன்மை அளிக்கப்பட வேண்டும்.

மீள்குடியேற்றம், முன்னாள் போராளிகளுக்கு மறுவாழ்வு அளித்தல், காணாமல்போதல்கள் மற்றும் கைதுகள் என்பனவே தமிழ் மக்கள் நாட்டில் எதிர்நோக்கி வரும் பிரதான மனித உரிமை மீறல் பிரச்சினைகள்" என்றார்
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

“நாடுகடந்த தமிழீழம்” தாயக உறவுகளின் துயரினை போக்குமா? என்ற தலைப்பில் கனடாவில் புளொட் துண்டுபிரசுரம்! (முதன்முறையாக புலிகளால் கூட்டப்பட்ட கூட்டமொன்றில் வைத்து சக தமிழ்கட்சியொன்றின் துண்டுபிரசுரம் கனடாவில் வினியோகம்..)



நேற்றையதினம் கனடாவின் ரொறன்ரோ நகரில் இடம்பெற்ற புலம்பெயர் புலிகளின் நாடுகடந்த தமிழீழம் தொடர்பான ஆய்வு கூட்டம் புலிகளின் கனடா கந்தசுவாமி கோயில் ஆலய மண்டபத்தில் நேற்றுமாலை இடம்பெற்றது. இவ் கூட்டத்திற்கு சென்றிருந்த புளொட் உறுப்பினர்கள் நாடு கடந்த தமிழீழம்! தாயக உறவுகளின் துயரினை போக்குமா? என்ற தலைப்பில் துண்டு பிரசுரம் ஒன்றை கூட்டத்திற்கு வந்திருந்தவர்கள் மத்தியில் வினியோகம் செய்துள்ளனர். ஜனநாயக முறைக்கு வந்துள்ளதாக தெரிவித்து புலிகளால் நடாத்தப்பட்ட மேற்படி கூட்டத்திற்கு வந்திருந்தவர்களை குழப்ப வேண்டாம் என்று புலிகள் கோரியபோது அங்கே வந்திருந்த புளொட் உறுப்பினர்களும் நாங்களும் ஜனநாயக முறையில் எமது கருத்துக்களை மக்களுக்கு தெளிவூட்டவே வந்துள்ளோம் என்று தெரிவித்து தாங்கள் கொண்டு வந்த துண்டு பிரசுரங்களை மக்களுக்கு வினியோகம் செய்தனர். அவ் துண்டு பிரசுரங்களை வாங்கி கொண்ட மக்கள் “இப்பொழுது தான் உண்மையான ஜனநாயகம் கனடாவில் பிறந்துள்ளது என்றும், இதில் கூறப்பட்ட விடயங்களில் எந்தவொரு தவறினையும் காணவில்லை. நடந்த சம்பவங்களையும், தமிழீழம் என்ற பெயரில் மக்களிடம் சேகரித்த பணங்கள் தனிநபர் கைகளில் சிக்கியுள்ளதையும், தமிழீழத்திற்காக தம்முயிரை அற்பணித்த மாவீரர்கள் அவர்தம் குடும்பங்கள் வறுமையிலும், துன்பத்திலும் வாடும்போது இந்த பணம் அந்த மக்களை சென்றடையாமல் இங்கே வாழும் சில சுயநலவாதிகளின் கைகளிற்கு சென்றுவிடக் கூடாது. இதனைத்தானே புளொட் இயக்கத்தினர் தெரிவித்துள்ளனர்.. இதில் தவறு எதுவும் இல்லையே” என்று அங்கு கூடியிருந்த மக்கள் பலர் பேசிக் கொண்டதையும் காணமுடிந்தது.

முதன்முறையாக புலிகளின் ஆதரவாளர்களால் கூட்டப்பட்ட கூட்டமொன்றில் வைத்து சக தமிழ்கட்சியொன்றின் துண்டுபிரசுரம் வினியோகிக்கப்பட்டது இதுவே கனடாவில் இடம்பெற்ற முதல் சம்பவம் என்பதும் குறிப்பிடத்தக்கது. இது கனேடிய தமிழ்மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள ஜனநாயகத்திற்கான மாற்றமாகும். மக்கள் தங்கள் கருத்துக்களை தாங்களே கூறுவதற்கும், மற்றைய செய்திகள், கருத்துக்கள், விமர்சனங்களை வெளிப்படையாக தெரிவிப்பதற்கு விடுக்கப்பட்ட திறவுகோலகவும் அமைந்துள்ளது. இத்துடன் புளொட் இயக்கத்தின் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியினரால் விடுக்கப்பட்ட துண்டு பிரசுரத்தின் முழுமையான பகுதியும் இணைக்கப்பட்டுள்ளது..

நாடு கடந்த தமிழீழம்! தாயக உறவுகளின் துயரினை போக்குமா???
அன்பார்ந்த தமிழ்மக்களே விழிப்பாக செயற்படுங்கள்..
யார் இந்த “நாடுகடந்த தமிழீழத்தை” பிரகடனப்படுத்தபவர்கள் என்பதை அறிந்து கொண்டு செயற்படுங்கள். கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக தமிழீழம் என்று கூறி நமது இனத்தை, சொத்துக்களை, சொந்தங்களை அழித்துவிட்டு இறுதியில் இங்கிருந்து கொண்டு பிழையாக வழிநடாத்தி விடுதலைப் புலிகளின் தலைமையையும் அழித்த இந்த கூட்டத்தினர் இறுதியில் இன்று “நாடு கடந்த தமிழீழம்” என்ற போலி நாடகத்தை புலம்பெயர் தேசத்தில் அரங்கேற்றி மக்களின் பணத்தை அபகரிப்பதற்காக மேற்கொள்ளும் நாடகமே இந்த புலம்பெயர் தேசத்தில் மேற்கொள்ளும் புதிய நாடகம் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

புலம்பெயர் நாடுகளில் தாம் தமது குடும்பம் என்று பாதுகாப்பாக இருந்துகொண்டு எமது மக்களையும், மக்களின் சுயகௌரவத்துடன் வாழ்தலுக்கான போராட்டத்தையும் சிதைவடைய செய்தது மட்டுமல்லாமல் தொடர்ந்தும் அந்த மக்களை துன்பபடுத்த மேற்கொள்ளும் அரங்கேற்றங்களே இவ்வாறான அர்த்தமற்ற அறிக்கை போராட்டங்கள். தமிழீழம் என்ற போர்வையில் எமது மக்களை கடந்த இரு தசாப்த காலங்களிற்கு மேலாக உண்மையை பேசவோ, பிழையை தட்டிக்கேட்கவோ, விமர்சனங்களை வெளிப்படுத்தவோ முடியாத ஒர் இனமாக அடக்கி ஒடுக்கப்பட்ட ஒர் இனமாகவே நடாத்திவந்த இந்த கொள்ளை கூட்டம் மீண்டும் மீண்டும் நமது இனத்தை கூறி பிழைப்பு நடாத்துவதற்காகவும், தேடிய சொத்துக்களை பாதுகாத்து கொள்வதற்காக மேற்கொள்ளும் தந்திரங்களேயாகும்..

நமது இனம் சுதந்திரமாக, சுயகௌரவத்துடன் வாழ வேண்டும் என்பதற்காக தொடங்கப்பட்ட எமது மக்களின் விடுதலைப் போராட்டம் புலம்பெயர் தேசங்களில் வசிக்கும் இவ் பிழையான கூட்டங்களின் வழிகாட்டுதலினால் திசைமாற்றப்பட்டு திசை தெரியாமல் இறுதியில் வன்னி மண்ணில் அஸ்தமித்துள்ளது. பணத்தையே கொள்கையாக கொண்டு புலம்பெயர் தேசங்களில் வாழும் இந்த கூட்டத்தினர் வடக்கு கிழக்கு எமது தாயக தேசத்தில் என்ன நடக்கின்றது என்பதை சுதந்திரமாக அறிந்து கொள்ளமுடியாத நிலையை உருவாக்கி ஊடக சுதந்திரத்தையே மறுதலித்து சுதந்திரமான செய்திகளை வெளியிட்டுவந்த ஊடகங்களை பயமுறுத்தி ஒர் அச்சநிலையில் வைத்துக்கொண்டே தமது வசூலிப்புக்களை கனேடிய மண்ணில் மேற்கொண்டனர் என்பதை யாவரும் அறிவர்.

கடந்த ஆண்டு ஒரு வருடங்களுக்கு மேலாக வன்னியில் இடம்பெற்ற மோதல்கள் தொடர்பான உண்மை செய்திகளை மழுங்கடித்து இராணுவத்தின் முன்னேற்றத்தை முறியடித்து போராளிகள் போரிடுகின்றனர் என்றும், அர்த்தமற்ற அரசியல் ஆலோசனைகளை கூறியும் எமது மக்களை ஏமாற்றி பிழைப்பு நடாத்திய இந்த கூட்டத்தினர் இறுதியில் வன்னியில் புலிகளின் தலைமை முள்ளிவாய்க்காலில் அழிக்கப்படும்வரை ஊடகம் என்ற பெயரில் உலாவரும் கொள்ளை குழுவினரின் ஊடகங்கள் மக்களை ஏமாற்றியே வந்துள்ளன என்பதை புரிந்து கொள்ளுங்கள். விடுதலை என்ற பெயரில் சிங்கள அரசுகளுடன் புலிகள் கொண்ட இரகசிய பேச்சுக்கள், பேச்சுவார்த்தை நாடகங்கள் எல்லாவற்றையும் சிந்தித்து, நினைவுமீட்டி பாருங்கள்.

*** 1980ம் ஆண்டு தொடக்கம் 1985ம் ஆண்டு காலப்பகுதிவரை சரியானபாதையில் சென்ற எமது மக்களின் விடுதலை போராட்டத்தையும், புலிகளின் விடுதலை பாதையையும் பிழையான பாதைக்கு இட்டுச்சென்றவர்கள்தான் இந்த கூட்டத்தினர் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

*** 1987ம் ஆண்டு இலங்கை-இந்திய ஒப்பந்தத்தின் மூலம் எமது மக்களிற்கு கிடைத்த வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைந்த மாகாண அரசையும், 13வது திருத்த சட்டமூலத்தையும் பிரேமதாசா அரசுடன் கூட்டமைத்து குழப்பியவர்கள்தான் இந்த கூட்டத்தினர்.

*** 1987ம் ஆண்டு தொடக்கம் 2009ம் ஆண்டு வரையில் எமது மக்களிற்கு கிடைக்கக்கூடிய சகல அரசியல் தீர்வுகளையும், பிரபாகரனையும் விடுதலைப்புலி அமைப்பையும் தூண்டிவிட்டு குழப்பியவர்கள்தான் இவர்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள். பிரபாகரன் தனது பிழைகளை திருத்தி கொள்வதற்கு விடாது தேசியத் தலைவர் என்ற மாஜையான பதவியை கொடுத்து தொடர்ந்து அரசியல் ரீதியாகவும், இராணுவ ரீதியாகவும் பாரிய பிழைகளை இழைக்க தூண்டி பிரபாகரனின் அழிவுக்கும், விடுதலைப் புலிகள் அமைப்பின் அழிவிற்கும் எமது மக்களின் அழிவிற்கும் வழிகோலியவர்கள் இவர்கள் என்பதை மறந்து விடாதீர்கள்.

*** தமிழ் மக்களின் ஒப்பற்ற அரசியல் தலைவர், புத்திஜீவிகள், சகல போராளிகள், சக போராளி அமைப்புக்களின் தலைவர்கள், நாட்டு பற்றுக்கொண்ட தமிழ்மக்கள் என எல்லோரையும் புலிகளைக்கொண்டு துரோகி என்ற பட்டம் கொடுத்து அழிப்பதற்கு தூண்டுகோலாக இருந்தவர்கள் இவர்கள் என்பதை மறந்து விடாதீர்கள்.

*** புலம்பெயர்ந்த தமிழ்மக்களிடம் மிரட்டியும், ஏமாற்றியும் சேர்த்த கோடிக்கணக்கான சொத்துக்களை தமது பெயர்களில் வைத்துக்கொண்டுள்ள இவர்கள், அவ் சொத்துக்களை தாமே அபகரிக்க ஆடும் நாடகமே இந்த நாடுகடந்த தமிழீழம் என்பதை மறந்துவிடாதீர்கள். இனியும் இலங்கையில் எந்தவொரு அரசியல் தீர்வும் வரவிடாமல் தடுப்பதற்கும், முகாம்களில் அல்லல்படும் எமது தமிழ்மக்களை மேலும் மேலும் துன்பப்பட வைத்து அதில் தமது அரசியல் இலாபம் தேட முயலும் கூட்டமே இவர்கள்.

*** இவர்களின் இந்த நடவடிக்கை மூலம் சிங்கள கடும்போக்காளர்களை கொண்டு இலங்கை அரசாங்கத்திற்கு பாரிய அழுத்தத்தைக்கொடுத்து எந்தவொரு அரசியல் தீர்வும் இலங்கையில் வராது தடுப்பதன் மூலம் தமிழ்மக்களுக்கு சொந்தமான புலிகளின் சொத்துக்களை தாம் தமது பெயர்களில் தொடர்ந்து தக்கவைத்து கொள்வதற்கு ஆடும் நாடகமே இது என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

*** புலிகளிடம் இருந்த சொத்துக்கள் யாவும் ஒண்று திரட்டப்பட்டு புலிகளின் பிழையான போராட்டத்தினால் அகதிகளாக்கப்பட்டுள்ள மக்களின் புனர்வாழ்வுக்கும், புலிகளினால் வலுக்கட்டயாமாக போராட்டத்தில் ஈடுபடுத்தப்பட்டு கொல்லப்பட்ட போராளிகளின் குடும்பத்திற்கும் அங்கவீனமாக்கப்பட்ட போராளிகளின் மறுவாழ்வுக்கும் பயன்படுத்த வேண்டும் என இந்த கூட்டத்திற்கு அந்த பணத்தினை உண்மையான போராட்டத்திற்கு என நம்பி இவர்களிடம் பறிகொடுத்த மக்களாகிய நீங்கள் அழுத்தம் கொடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.

மீண்டும் மீண்டும் தமிழீழம் என்றும் போராட்டம் என்றும் மக்களை ஏமாற்றி பிழைப்பு நடாத்தாமல், அல்லல்படும் மக்களின் மறுவாழ்வினை ஏற்படுத்தி முட்கம்பி வேலிகளுக்குள்ளும், வைத்தியசாலைகளிலும் அல்லும் பகலும் அவதியுறும் மக்களின் அவலத்தை நீக்கி, அவர்களுக்கு ஒர் சுயகௌரவத்துடன் கூடிய சுதந்திரமான வாழ்வை ஏற்படுத்தி கொடுத்து அவர்களது இயல்பு வாழ்வினை மேம்படுத்துவோம். கடந்த பல ஆண்டுகளாக ஆயுததாங்கிய போராட்டம் ஊடாக எமது உரிமையை வென்றெடுக்கலாம் என்று நம்பி ஏமாற்றப்பட்டது போல் இனிமேலும் ஏமாராது சரியான பாதையில் சரியான இலக்கை நோக்கி செயற்படுவோம்.

சகல சௌபாக்கியங்களுடன் சுதந்திரமாக வாழ்ந்து கொண்டு எமது மக்களை மேலும் துன்புறுத்தலுக்கு உள்ளாக்காமல் அவர்கள் பட்ட வேதனைகள், துன்பங்களில் இருந்து விடுபட்டு ஒர் மனித இனமாக வாழ்வதற்குரிய ஏற்பாடுகளை முன்னெடுப்போம்.
-ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(PLOTE & DPLF) -கனடா
2 Responses to “ “நாடுகடந்த தமிழீழம்” தாயக உறவுகளின் துயரினை போக்குமா? என்ற தலைப்பில் கனடாவில் புளொட் துண்டுபிரசுரம்! (முதன்முறையாக புலிகளால் கூட்டப்பட்ட கூட்டமொன்றில் வைத்து சக தமிழ்கட்சியொன்றின் துண்டுபிரசுரம் கனடாவில் வினியோகம்..) ”
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

விடுவிக்கப்படும் இடைத்தங்கல் முகாம் மக்கள் கைது செய்யப்படுகின்றனர். மாவை.



இடைத்தங்கல் முகாம்களில் இருந்து விடுவிக்கப்படும் மக்கள் மீண்டும் கைது செய்யப்படுகின்றனர் எனவும், இது ஒரு சிறையில் இருந்து மற்றுமோர் சிறைக்கு அனுப்புவது போன்ற செயலாகும் எனவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா கூறியுள்ளார்.

கடந்த சுமார் 2 தசாப்தங்களாக புலிகள் இம்மக்களை வெளி உலகைக் காட்டாமல் வன்னியில் அடைத்து வைத்திருந்தனர். அக்காலகட்டங்களில் புலிகளுடன் இணைந்து நின்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பினர், அம்மக்களின் வாக்குகளை ஆயுத முனையில் பெற்றுக்கொண்டு பாராளுமன்றம் சென்று புலிகளின் நலன் காப்பாளர்களாக செயற்பட்டு வந்திருந்தனர். இன்று புலிகள் முற்றாக ஒழிக்கப்பட்டுள்ள நிலையில் அரசுடன் பின்கதவால் தமது அரசியல் எதிர்காலம் தொடர்பாக பேரம்பேசலில் ஈடுபட்டுள்ள கூட்டமைப்பினர், மக்களை தொடர்ந்து குழப்ப நிலையில் வைத்திருக்கும் நோக்கில் இவ்வாறான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர் எனக்கூறப்படுகின்றது.

குறிப்பாக புலம்பெயர் நாடுகள் பலவற்றிற்கும் சென்று புலிகளுக்கு ஆதரவான பிரச்சாரங்களை முன்னெடுத்து வந்திருந்தனர். இன்று இடைத்தங்கல் முகாம்களில் இருந்து விடுவிக்கப்படும் மக்கள் எவ்வித வாழ்வாதாரங்களும் அற்றவர்களாக முகாம்களில் இருந்து வெளியேறுகின்றனர். ஆனால் அன்று புலம்பெயர் தமிழர்களிடம் சென்று புலிகளுக்கு நிதிவழங்குங்கள் என இரந்து கேட்ட கூட்டமைப்பினர், இன்று முகாம்களில் இருந்து வெளியேறும் மக்களின் எதிர்கால பொருளாதார நலன் தொடர்பாக எந்தவித நடவடிக்கைகளும் எடுத்ததாக தெரியவில்லை.

இடைத்தங்கல் முகாம் மக்கள் தொடர்பாக ஆரம்ப காலகட்டங்களில் முதலைக்கண்ணீர் வடித்த புலம்பெயர் தமிழருக்கு அம்மக்கள் தொடர்பாக உண்மையான ஆர்வம் இருந்தால் அவர்கள் இடைத்தங்கல் முகாம்களில் இருந்து வெளியேறும்போது அம்மக்களுக்கு ஏதாவது சுயதொழில் செய்துவாழக்கூடிய வழிவகைகளை அமைத்துக்கொடுக்க முன்வரவேண்டும் என்பது அனைவரதும் எதிர்பார்ப்பாக இருக்கின்றது. இவ்வாறான ஆக்கபூர்வமான விடயங்களுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் முயற்சி செய்யாது அம்மக்களின் அவலங்களை உலகுக்கு கூறி தொடர்ந்து அரசியல் செய்ய முனைந்து வருகின்றனர்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

ஐ.தே.கட்சி மூன்று மாதத்தில் ஆட்சியமைப்பது பகற்கனவே -அமைச்சர் ஹேமகுமார நாணயக்கார!


பொதுச்செயலர் திஸ்ஸ அத்தநாயக்க குறிப்பிட்டுள்ளமை வெறும் பகற் கனவேயென அமைச்சர் ஹேமகுமார நாணயக்கார தெரிவித்துள்ளார். காலியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் நடைபெறும் தேர்தலின்போது ஐ.தே.கட்சி அடையப்போகும் பாரிய தோல்வியை நினைத்தே அதன் பொதுச்செயலர் தனக்கு தானே ஆறுதல் கூறிக்கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டிற்கு எதிராக விடப்பட்டுள்ள சவால்களை எதிர்கொள்ளாமல் சர்வதேசத்துடன் ஐ.தே.கட்சி இணைந்துள்ளதால் விரக்தியடைந்துள்ள மக்கள் அக்கட்சியை விட்டு விலகிக் செல்வதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS
Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates