ஜனாதிபதி தேர்தலும் பொதுத்தேர்லும் அடுத்தவருடம் ஏப்ரல் மாதத்திற்குள்.. -அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன

ஜனாதிபதி தேர்தலும் அடுத்த வருடம் ஏப்ரல் மாதத்திற்கு முன்னர் நடத்தப்படும் என ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார் தமது அமைச்சு அலுவலகத்தில் இன்றுகாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இத்தகவலை வெளியிட்டுள்ளார் இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில் அடுத்தமாதம் 15ம் திகதி இடம்பெறவுள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுக்கூட்டத்தில் இத்தேர்தல்கள் பற்றிய உத்தியோகபூர்வ அறிவிப்பு விடுக்கப்படும் தென்மாகாணசபைத் தேர்தலில் அரசாங்கத்திற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை வெற்றி வழங்கிய பொதுமக்களுக்கு அரசாங்கம் நன்றி தெரிவித்துள்ளது என்றார்.
0 Response to "ஜனாதிபதி தேர்தலும் பொதுத்தேர்லும் அடுத்தவருடம் ஏப்ரல் மாதத்திற்குள்.. -அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன"
แสดงความคิดเห็น