தென் மாகாண சபைத் தேர்தலில் இம்முறை 24 ஆசனங்கள் இழப்பு

கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற தென்மாகாண சபைத்தேர்தலில் 24 ஆசனங்கள் இழக்கப்பட்டுள்ளன. ஜே.வி.பி.முன்னாள் உறுப்பினர்கள் 12 பேர், ஐக்கிய தேசியக் கட்சி 07 உறுப்பினர்கள், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 05 உறுப்பினர்கள் ஆகியோரே இவ்வாறு ஆசனங்களை இழந்தோராவர்.
ஆளும் மற்றும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த சுமார் 19 புதிய உறுப்பினர்கள் இம்முறை தேர்தலில் போட்டியிட்டனர்.
ரி.ரட்ண கமகே, நிசாந்த பெரேரா, ரி.கே. ஜெயசுந்தர, ரி.எம்.ஜயவீர, கே.சுமித்திரா டி சில்வா ஆகியோர் காலி மாவட்டத்திலும் சேனா ரத்னாயக்க,லால் பிரேமநாத், எஸ்.யூ.மௌலானா ஆகியோர் மாத்தறை மாவட்டத்திலும். பியசேன ராம நாயக்க, அத்துல வெலந்தகெத, கொட, சிசிர குமார வாஹல தந்திரி, ஜயந்த வன்னியாரச்சி ஆகியோர் அம்பாந்தோட்டை மாவட்டத்திலுமாக ஜே.வி.பி தனது ஆசனங்களை இழந்துள்ளது.
அஜித் டி சில்வா காலி மாவட்டத்திலும், டானி அபேவிக்கிரம, நிலங்க ஹந்தவிதாரண, சுசிந்த ஹந்தகே, லக்மல் நிலந்த மாத்தறை மாவட்டத்திலுமாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தனது ஆசனங்களை இழந்துள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சி தனது முன்னாள் சபை உறுப்பினர்களான சுனில் சேனாநாயக்க, ரஞ்ஜித்குமாரகே, ஜயசிறி நாணயக்கார,ஆனந்த அபேவிக்கிரம ஆகியோரை காலி மாவட்டத்திலும் பிரகீத் பிரேமதிலக, ஜினதாச குணவர்த்தன ஆகியோரை மாத்தறை மாவட்டத்திலும், தேவிகா வீரசிங்கவை அம்பாந்தோட்டை மாவட்டத்திலும் என்ற வகையில் தனது ஆசனங்களை இழந்துள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் 15 உறுப்பினர்களும், ஐக்கிய தேசியக்கட்சியின் 03 உறுப்பினர்களும், ஜே.வி.பியின் ஒரு உறுப்பினரும் புதிதாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
ரன்டிமா கமகே, சஜிந்த வாஸ் குணவர்த்தன, ரி.டி.எஸ். ஜயவீர, லசந்த விஜேயநாயக்க, சமிந்த சம்பத், அனார்கலி ஆகாஷா ஆகியோர் காலி மாவட்டத்திலும், சரத் யாப்பா அபேயவர்த்தன, சன்டிமா ராசபுத்ர, ஏ.எச்.பியசேன, காஞ்சனா விஜேசேகர, ஜயந்த கொடிதுவக்கு, அருணா குணரட்ன ஆகியோர் மாத்தறை மாவட்டத்திலும், கபில திசாநாயக்க, ஆனந்த சேனரத் விதானபத்திரன, அhஜுன நிஷந்த ஆகியோர் அம்பாந்தோட்டை மாவட்டத்திலும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில்; முதன் முறையாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இம்முறை ஐதேகவின் காலி மாவட்டத்தின் புதுமுகமாக அறிமுகமானார் கிரிஷாந்த புஷ்பகுமார(ரத்தரன்). மாத்தரை மாவட்டத்தில் கயான் சஞ்சீவ, ஹப்புதாந்திரிகே நிஷாந்த ஆகியோர் தெரிவானாலும் அம்பாந்தோட்டையில் எவரும் புதிதாகத் தெரிவாகவில்லை.
ஜே.வி.பியைச் சேர்ந்த குமுது சுஜீவ பிரியந்த என்பவர் புதிதாக அம்பாந்தோட்டை மாவட்டத்திற்குத் தெரிவானார்.
0 Response to "தென் மாகாண சபைத் தேர்தலில் இம்முறை 24 ஆசனங்கள் இழப்பு"
แสดงความคิดเห็น