ஐ.தே.கட்சி மூன்று மாதத்தில் ஆட்சியமைப்பது பகற்கனவே -அமைச்சர் ஹேமகுமார நாணயக்கார!
பொதுச்செயலர் திஸ்ஸ அத்தநாயக்க குறிப்பிட்டுள்ளமை வெறும் பகற் கனவேயென அமைச்சர் ஹேமகுமார நாணயக்கார தெரிவித்துள்ளார். காலியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் நடைபெறும் தேர்தலின்போது ஐ.தே.கட்சி அடையப்போகும் பாரிய தோல்வியை நினைத்தே அதன் பொதுச்செயலர் தனக்கு தானே ஆறுதல் கூறிக்கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டிற்கு எதிராக விடப்பட்டுள்ள சவால்களை எதிர்கொள்ளாமல் சர்வதேசத்துடன் ஐ.தே.கட்சி இணைந்துள்ளதால் விரக்தியடைந்துள்ள மக்கள் அக்கட்சியை விட்டு விலகிக் செல்வதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
0 Response to "ஐ.தே.கட்சி மூன்று மாதத்தில் ஆட்சியமைப்பது பகற்கனவே -அமைச்சர் ஹேமகுமார நாணயக்கார!"
แสดงความคิดเห็น