சிரேஸ்ட கடற்புலி உறுப்பினர் ஒருவர் கைது?
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் சிரேஸ்ட கடற்புலி உறுப்பினர் ஒருவரை நீர்கொழும்பில் வைத்து கைது செய்துள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.குறித்த நபர், யுத்த சமயத்தில் முஸ்லிம் பெயரொன்றில் நடமாடி கொழும்பில் பல்வேறு தாக்குதல்களை நடாத்தத் திட்டமிட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.அப்துல் ரஹீம் என்ற பெயரில் குறித்த கடற்புலி உறுப்பினர் தங்கியிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
இவர், படகு மூலம் செல்ல அவுஸ்திரேலியா செல்வதற்கு மேற்கொண்ட முயற்சியின் போது கைது செய்யப்பட்டுள்ளார்.
அண்மைக்காலமாக நாட்டின் தென்பகுதிகளில் தமிழீழ விடுதலைப் புலிகளின் சிரேஸ்ட உறுப்பினர்கள் பலரைக் கைது செய்துள்ளதாக அரசாங்கம் அறிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
0 Response to "சிரேஸ்ட கடற்புலி உறுப்பினர் ஒருவர் கைது?"
แสดงความคิดเห็น