வரலாற்றில் முதல் தடவையாக தலை சாய்த்தது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு…
வரலாற்றில் முதல் தடவையாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் சிறிலங்காவின் தேசிய கீதத்தை இசைத்ததுடன் அதற்குத் தலை தாழ்த்தி உள்ளனர். வவுனியா நகர சபைக்கான உறுப்பினர்கள் பதவியேற்பின்போது இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
நிகழ்வின் தொடக்கத்தில் தேசிய கீதம் பாடப்பட்டபோது எழுந்து நின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள், கீதத்தை முணுமுணுக்கவும் செய்தனர்.கடந்த காலங்களில் தமிழ் அரசியல் கட்சிகளால் வடக்கு-கிழக்கில் ஏற்பாடு செய்யப்படும் விழாக்களிலும் நிகழ்வுகளிலும் தேசிய கீதம் இசைக்கப்படுவதில்லை. விடுதலைப் புலிகளும் தமது கட்டுப்பாட்டுப் பகுதிகளில் அதற்குத் தடை விதித்திருந்தனர்.
எனினும், சில நாட்களின் முன்னர் வவுனியா கலாசார மண்டபத்தில் நடைபெற்ற நகர சபை உறுப்பினர்களின் பதவியேற்பு நிகழ்வின்போது தேசிய கீதம் இசைக்கப்பட்டதுடன், நாட்டின் பல் கலாசாரத் தன்மையை வெளிப்படுத்தும் வகையிலான கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.
இதற்கிடையே இனப் பிரச்சினைக்குத் அரசியல் தீர்வு காணும் வகையில் ஒரு முன்மொழிவை வைப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து பணியாற்றுமாறு ஈ.பி.டி.பி. மற்றும் புளொட் ஆகிய கட்சிகளுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் என்.சிறீகாந்தா அழைப்பு விடுத்திருக்கிறார்.

0 Response to "வரலாற்றில் முதல் தடவையாக தலை சாய்த்தது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு…"
แสดงความคิดเห็น