நாட்டுக்கு இடம் பெற்றுத்தந்த முதல் நபர் - மகிந்தவுக்கு ரணில் ‘புகழாரம்’
போரின் பின்னர் காணாமல் போனவர்கள் பற்றிய பட்டியல் ஒன்றை அரசு தயாரிக்க வேண்டும். சிறிய குற்றங்கள் புரிந்தவர்களையும் சாட்சிகள் இன்றி தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளவர்களையும் விடுவிக்க வேண்டும். ஏனையவர்கள் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும். அதையும் தாண்டி இருப்பவர்கள் மீது வழக்குகளைத் தாக்கல் செய்ய வேண்டும் என்றெல்லாம், 1980-களில் மகிந்த ராஜபக்ச எதிர்க்கட்சி உறுப்பினராக இருந்தபோது போதித்து வந்தார். ஆனால் அவற்றை இன்று அவரே கடைப்பிடிப்பதில்லை என்று தெரிவித்திருக்கிறார் எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க.இலங்கையில் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றுள்ளன என்ற அனைத்துலக அறிக்கையை நாட்டுக்குப் பெற்றுத்தந்த முதல் நபர் மகிந்த ராஜபக்ச என்றும் அவர் கூறினார்.
பொதுமக்கள் கண்காணிப்பு ஆணைக்குழு முன்னிலையில் பேசும்போது அவர் இதனைக் கூறினார். இடம்பெயர்ந்த மக்கள் தொடர்பில் அரசு அனைத்துலகச் சட்டங்களை மீறி வருகின்றது எனவும் அவர்களைத் தொடர்ந்தும் தடுத்து வைத்துள்ளது எனவும் அவர் கூறினார். “இதற்கான சட்ட ரீதியான மேற்கோள்கள் எவையும் இல்லை. அந்த மக்கள் விரும்பினால் முகாம்களில் இருந்து வெளியேறுவதற்கு அவர்கள் அனுமதிக்கப்பட வேண்டும்” என்றார் ரணில்.

0 Response to "நாட்டுக்கு இடம் பெற்றுத்தந்த முதல் நபர் - மகிந்தவுக்கு ரணில் ‘புகழாரம்’"
แสดงความคิดเห็น