ராகுல் பயணித்த ரயில்மீது கல்வீச்சு : ஹரியானாவில் சம்பவம்
இந்திய மத்திய அரசின் அமைச்சர்கள், உயரதிகாரிகள் உள்ளிட்டோர் அரசின் செலவுகளைக் குறைத்து சிக்கன நடவடிக்கையை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
பிரதமர் மன்மோகன் சிங், எஸ்.எம்.கிருஷ்ணா போன்ற முதல் நிலை பணியாளர்களே சிக்கன நடவடிக்கையைக் கடைபிடித்து வருகிறார்கள்.
இந்நிலையில் லூதியானாவில் நடைபெற இருந்த இளைஞர் காங்கிரஸ் மாநாட்டுக்கு சாதாரண ரயிலில் செல்ல திட்டமிட்டிருந்தார் ராகுல்காந்தி. மாநாட்டைத் தொடங்கி வைப்பதற்காக சதாப்தி ரயிலில் பயணம் செய்த, ராகுல் காந்தி அதே ரயிலில் இரவில் திரும்பிக் கொண்டிருந்த போது, ஹரியானா மாநிலம் பானிபட் அருகே சிலர் கல்வீச்சில் ஈடுபட்டனர்.
ராகுல் பயணம் செய்த பெட்டி உட்பட 3 பெட்டிகளில் கல்வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டது. ஆனால், ராகுல் உட்பட எவருக்குமே காயம் ஏற்படவில்லை.
அவரது பாதுகாவலர்கள் உடனடியாக ராகுலைச் சுற்றி நின்று கொண்டனர். ரயில் பெட்டியின் ஜன்னல் கண்ணாடிகள் மட்டும் உடைந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.நேற்றிரவு 9.50 மணியளவில் கல்வீச்சு தாக்குதல் நடைபெற்ற போது, ரயில் 20 கி.மீ வேகத்தில் சென்று கொண்டிருந்தது.
தாக்குதலைத் தொடர்ந்து ரயில் நிறுத்தப்படவில்லை. உடனடியாக பானிபட் காவல்துறை உயர் அதிகாரிகள் கல்வீசப்பட்ட பகுதிக்குச் சென்ற போது, சிறுவர்கள் மட்டுமே இருந்ததாகவும், எனவே அவர்கள் இந்த செயலில் ஈடுபட்டிருக்கலாம் என்றும் தெரிவித்தனர்

0 Response to "ராகுல் பயணித்த ரயில்மீது கல்வீச்சு : ஹரியானாவில் சம்பவம்"
แสดงความคิดเห็น