ஐ.சீ.சீ. கிண்ண கிரிக்கெட் சுற்றுப் போட்டி : இலங்கை அணி தென்னாபிரிக்கா பயணம்
'ஐ.சீ.சீ. செம்பியன்ஸ் கிண்ண' கிரிக்கெட் சுற்றுத் தொடரில் கலந்து கொள்வதற்காக இலங்கை கிரிக்கெட் அணியினர் இன்று அதிகாலை தென்னாபிரிக்காவுக்குப் புறப்பட்டுச் சென்றனர் என இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது. கொழும்பிலுள்ள இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைமையகத்தில் இன்று அதிகாலை இடம்பெற்ற சமயக் கிரியைகளையடுத்து குமார் சங்கக்கார தலைமையிலான இலங்கை அணி வீரர்கள் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தினூடாக தென்னாபிரிக்காவுக்குப் பயணமாயினர்.
உலகக் கிண்ணப் போட்டிகளுக்கு அடுத்தபடியாக இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வரும் செம்பியன்ஸ் கிண்ண சுற்றுத் தொடர் எதிர்வரும் 22ஆம் திகதி தென்னாபிரிக்காவில் ஆரம்பமாகவுள்ளது. 14 நாட்களுக்குத் தொடராக நடைபெறவுள்ள இச்சுற்றுப் போட்டி ஒக்டோபர் மாதம் 5ஆம் திகதி இடம்பெறவுள்ள இறுதி ஆட்டத்துடன் முடிவடையும்.
'மினி உலகக் கிண்ணம்' எனக் கருதப்படும் இத்தொடரில் 8 நாடுகளின் அணிகள் பங்குபற்றவுள்ளன. அவை 'ஏ' மற்றும் 'பி' என இரு குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இம்மாதம் 22ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள இத்தொடரின் முதல் ஆட்டத்தில் இலங்கை அணி தென்னாபிரிக்க அணியை எதிர்த்தாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 Response to "ஐ.சீ.சீ. கிண்ண கிரிக்கெட் சுற்றுப் போட்டி : இலங்கை அணி தென்னாபிரிக்கா பயணம்"
แสดงความคิดเห็น