jkr

தமிழக மீனவர்கள் தொடர்பில் இலங்கை அரசின் உறுதிமொழிகள் காற்றில் பறக்க விடப்பட்டுள்ளன -முதல்வர் கருணாநிதி


தமிழக மீனவர்கள் தொடர்பில் இலங்கை அரசு இதுவரை தந்த உறுதிமொழிகள் அனைத்தும் காற்றில் பறக்க விடப்பட்டுள்ளதாக முதல்வர் கருணாநிதி கூறியுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. இலங்கை கடற்படையின் செயலை தான் வன்மையாக கண்டிப்பதாகவும் அத்தோடு, இதுபோன்ற வன்முறை நிகழ்வுகளுக்கு இப்போதாவது ஒரு முடிவு ஏற்படும்வகையில் மத்தியஅரசு உறுதியான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளவேண்டும் என்று கேட்டுக்கொள்வதாக முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார். மாவட்ட கலெக்டர்கள், உயர் பொலிஸ் அதிகாரிகளின் 2நாள் மாநாடு முதலமைச்சர் கருணாநிதி தலைமையில் நேற்று ஆரம்பமாகியது. இன்று கலெக்டர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துகொண்ட 2வதுநாள் மாநாட்டில் கலந்துகொண்டு முதல்வர் பேசுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில் தமிழக மீனவர்கள் 21பேரை இலங்கைக் கடற்படையினர் கடத்திச் சென்றதைக் குறிப்பிட்டு கடுமையாக குற்றம்சாட்டியுள்ளார். ராமேசுவரத்தில் இருந்து புதன்கிழமை அன்று 400க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கச்சத்தீவு அருகே சென்றவேளையில் இலங்கைக் கடற்படையினர் சிறிய கப்பல்களில் வருவதை கண்ட தமிழக மீனவர்களின், படகுகள் அவசரம் அவசரமாக கரைக்குத்திரும்பும் முயற்சியில் ஈடுபட்ட நிலையில் தமிழக மீனவர்களின் படகுகளைச் சுற்றி வளைத்து இறுதியாக 5படகுகளையும், 21 மீனவர்களையும் கைது செய்துள்ளனர். இதுவரை ஏராளமான நிகழ்வுகள் நடந்து, தமிழக மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு நிகழ்வின்போதும், தமிழகஅரசு விடுத்த கோரிக்கையின் அடிப்படையில் மத்தியஅரசு தலையிட்டு, தமிழக மீனவர்களை மீட்டுள்ளதோடு, இலங்கைக் கடற்படையினருக்கு கண்டனமும் தெரிவித்துள்ளது. தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் துன்ப துயரங்களுக்கு உள்ளாக்கப்படுவது குறித்து தமிழகஅரசின் தலையீட்டின் அடிப்படையில், பல்வேறு நிலைகளில் மத்தியஅரசு இலங்கை அரசாங்கத்துடன் பேச்சு வார்த்தைகளும் நடத்தியுள்ளது. அப்போதெல்லாம் இலங்கை அரசின்தரப்பில் தரப்பட்ட உறுதிமொழிகள் அனைத்தும் காற்றில் பறக்கவிடப்படுகின்றன என முதல்வர் கருணாநிதி. தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "தமிழக மீனவர்கள் தொடர்பில் இலங்கை அரசின் உறுதிமொழிகள் காற்றில் பறக்க விடப்பட்டுள்ளன -முதல்வர் கருணாநிதி"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates