தடுத்து வைத்துள்ள பணியாளர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் : ஐ.நா. கோரிக்கை

கைது செய்யப்பட்டுள்ள தமது நிறுவன பணியாளர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் அல்லது அவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட வேண்டுமென ஐக்கிய நாடுகள் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. ஐக்கிய நாடுகள் அமைப்பைச் சேர்ந்த இரண்டு உள்நாட்டு பணியாளர்களைப் பாதுகாப்புப் படையினர் கைது செய்து, தடுத்து வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. தமது நிறுவனத்திற்கு அறிவிக்காமலேயே குறித்த பணியாளர்கள் கைது செய்யப்பட்டதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.சார்ள்ஸ் ரவீந்திரன் நவரட்ணம் (45), கந்தசாமி சுந்தரராஜன் (35) ஆகிய ஐக்கிய நாடுகள் அமைப்பு பணியாளர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.சட்டவிரோதமான முறையில் குறித்த இருவரும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகளின் பேச்சாளர் மரி ஒகபே தெரிவித்துள்ளார்.கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டுள்ள பணியாளர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட வேண்டும், அல்லது அவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.குற்றச்சாட்டுக்கள் எதுவும் முன்வைக்காது தடுத்து வைத்திருக்கும் நடவடிக்கையானது சர்வதேச சட்டங்களுக்குப் புறம்பானதெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
0 Response to "தடுத்து வைத்துள்ள பணியாளர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் : ஐ.நா. கோரிக்கை"
แสดงความคิดเห็น