jkr

மன்னார் கோட்டை சோதனைச் சாவடியில் மக்கள் அசௌகரியம்

வெளி மாவட்டங்களைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டு தற்போது மன்னார் நகர் பகுதியில் வசித்து வரும் மக்கள் அங்கிருந்து வேறு மாவட்டங்களுக்குச் சென்று விட்டுத் திரும்பும் போது, கோட்டை, கடற்படையினரின் சோதனை நிலையத்தில் பாரிய அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான குடும்பங்கள் மன்னாரில் வசித்து வருகின்றனர். இவர்கள் சுமார் 5 வருடங்களுக்கு மேலாக வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் தங்களின் சொந்த தேவைகளுக்காக அடிக்கடி வேறு மாவட்டங்களுக்குச் செல்ல வேண்டியிருக்கின்றது.

அவ்வாறு சென்றுவிட்டு மன்னாருக்குத் திரும்பி வரும் போது கோட்டையிலுள்ள கடற்படையினரின் சோதனை சாவடியில் வைத்து இவர்கள் பல அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் மன்னாருக்கு வரும் போது கோட்டையில் உள்ள கடற்படையினரின் சோதனைசாவடியில் தமது அடையாள அட்டைகளைக் கொடுத்துவிட வேண்டும். அதற்குப் பதிலாக கடற்படையினர் வழங்கும் பாஸுடன் மன்னாருக்குச் செல்ல வேண்டும். இதுவே தங்களுக்கும் நடைமுறைப்படுத்தப்படுவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

அதேவேளை, மன்னார் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வசித்து வருவதாக கிராம அலுவலகத்தின் சான்றிதழ் இருந்தால் மட்டுமே எவ்வித பிரச்சினைகளும் இன்றி சென்று வர முடியும் எனவும் அவர்கள் விசனம் தெரிவித்தனர்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "மன்னார் கோட்டை சோதனைச் சாவடியில் மக்கள் அசௌகரியம்"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates