jkr

இலங்கையரை தாக்கிய நபரை கண்டுபிடிப்பதற்கு பொதுமக்களின் உதவியினை-நாடியுள்ள அவுஸ்திரேலிய பொலிஸார்

அவுஸ்திரேலியாவில் இலங்கையர் ஒருவர் மீது வார இறுதியில் மெல்போர்ன் ரயில் நிலையத்தில் வைத்து தாக்குதல் நடத்திய நபரை கண்டு பிடிப்பதற்கு அந்நாட்டு பொலிஸார் பொது மக்களின் உதவியை நாடியுள்ளனர். சந்தேக நபர் புலம்பெயர் இலங்கையர் மீது ஒரு போத்தலினால் தாக்கிவிட்டு அவரது லெப்ரொப் கணனியை அபகரித்துக் கொண்டு ஓடியதை பாதுகாப்பு கமெராவில் பதிந்துள்ள படங்கள் காண்பிக்கின்றன.

தமது முதற் பெயரை வெளியிட விரும்பாத பிரான்சிஸ் என்ற பிரஸ்தாப இலங்கையர் இந்த தாக்குதலின் பின்னர் தாம் மயக்கமடைந்து விட்டதாகவும் தமது இடது கண்ணுக்கு மேல் உண்டான காயத்திலிருந்து இரத்தப் பெருக்கு ஏற்பட்டதோடு ஐந்து தையல்களும் போடப்பட்டதாகவும் தெரிவித்தார். பொது போக்குவரத்தை பயன்படுத்துவது பாதுகாப்பானது என்று தாம் முதலில் கருதியதாகவும் தற்போது பீதியடைந்த தமது குடும்பத்தினர் அதனை பயன்படுத்த வேண்டாமென தடுப்பதாகவும் தெரிவித்த இலங்கை நபர், தமது வாழ்க்கையே மாறிவிட்டது என்றும் ஆசி ஊடகங்களுக்கு அங்கலாய்ப்புடன் கூறினார்.
பேர்விக் நகரம் மிகவும் பாதுகாப்பான ஒரு இடம் என்று தாம் கருதியதாக தெரிவித்த பிரான்சிஸ் இனிமேல் தமது வாகனத்திலேயே வேலைக்கு செல்ல விரும்புவதாகவும் கூறினார். கமெரா காட்சிகளை பகிரங்கப்படுத்துவதன் மூலம் சந்தேக நபரின் தோற்றத்தையும் அணிந்திருந்த உடைகளையும் வைத்து பொது மக்கள் அவரை அடையாளம் காண்பிப்பர் என்று பொலிஸார் நம்புகிறார்கள். அதே தினம் இரவு 19, 20 வயது மதிக்கத்தக்க பொது நிறமுடைய நடுத்தர தோற்றத்தைக் கொண்ட பிரஸ்தாப சந்தேகநபர் மேலங்கி அணியாமல் சென்று கொண்டாட்ட வைபவம் ஒன்றுக்குள் அத்துமீறிப் புகுந்து திருடியுள்ளார். சிவப்பு தொப்பி அணிந்த இந்த நபர் கழுத்தை சுற்றி பட்டியும் கட்டை காற்சட்டையும் அணிந்திருந்தார்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "இலங்கையரை தாக்கிய நபரை கண்டுபிடிப்பதற்கு பொதுமக்களின் உதவியினை-நாடியுள்ள அவுஸ்திரேலிய பொலிஸார்"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates