jkr

மிஸ்டர் பீனின் கடன் அட்டை மோசடி : கொழும்பில் இலங்கையர் கைது

பிரித்தானிய நகைச்சுவை நடிகர் மிஸ்டர் பீன் உட்பட பல வெளிநாட்டவர்களின் கடன் அட்டை இலக்கங்களைப் பயன்படுத்தி மோசடி செய்ய முயன்ற இலங்கையர் ஒருவரைப் பொலிஸார் கொழும்பில் கைது செய்துள்ளனர்.

இவர் இணையத் தளத்தைப் பயன்படுத்தித் திருடிய கடன் அட்டை இலக்கங்களில், மிஸ்டர் பீன் என்ற பிரபல பிரிட்டிஷ் நடிகர் ரொவன் அட்கின்ஸனின் கடன் அட்டையும் உள்ளடக்கப்பட்டிருந்ததாகப் பொலிஸ் ஊடக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எச்.எஸ்.பி.சி. வங்கியின் சர்வதேச பணக் கொடுப்பனவு பிரிவின் அதிகாரி ஒருவர் கொடுத்த தகவலையடுத்தே பொலிஸார் இந்த நபரைக் கைது செய்தனர்.
அத்துடன் பிரித்தானியாவில் உள்ள தனது நண்பர்கள் மூலமாகவே இவர் மிஸ்டர் பீனின் கடன்அட்டைக்குரிய இலக்கங்களைப் பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொழும்பிலுள்ள ஒரு ஹோட்டலில் வைத்து மேற்படி இலங்கையர் கைது செய்யப்பட்டுள்ளார்.
எத்தனையோ கிரடிட் கார்ட் இலக்கங்களைத் திருடியுள்ள இவர், வெளிநாட்டு இயக்குநர்களின் உதவியுடன் கோடிக்கணக்கான பணத்தைப் பரிமாற்றம் செய்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "மிஸ்டர் பீனின் கடன் அட்டை மோசடி : கொழும்பில் இலங்கையர் கைது"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates