பாகிஸ்தானில் இன்று மீண்டும் குண்டுத் தாக்குதல் : 11 பேர் பலி

குற்றவாளிகள் மற்றும் பயங்கரவாதிகளை விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட கட்டடத்தின் மீது இன்று கார் குண்டு மூலம் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 11 பேர் உயிரிழந்தனர். 13 பேர் காயமடைந்தனர். தாக்குதலில் அருகிலிருந்த மசூதியும் சேதமடைந்தது.
நேற்று லாகூரில் தற்கொலைப் படையினர் உள்ளிட்டோருடன் புகுந்த தீவிரவாதிகள் 3 இடங்களில் நடத்திய வெறித்தனமான தாக்குதலில் 40க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட நிலையில் இன்று பெஷாவர் தாக்குதல் நடந்துள்ளது.
இத்தாக்குதலுக்கு எவரும் இதுவரை பொறுப்பேற்கவில்லை என்றாலும் தலிபான்கள் தான் இந்தத் தாக்குதலை நடத்தியிருக்க வேண்டும் என பாகி்ஸ்தான் கருதுகிறது.
அமெரிக்காவின் நெருக்குதலால் ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியில் தலிபான்களுக்கு எதிராக பாகிஸ்தான் இராணுவம் கடும் தாக்குதலுக்குத் தயாராகி வரும் நிலையில் இத்தாக்குதல்கள் நடந்து வருகின்றன.
0 Response to "பாகிஸ்தானில் இன்று மீண்டும் குண்டுத் தாக்குதல் : 11 பேர் பலி"
แสดงความคิดเห็น