கிழ.பல்கலைக்கழகம்: 2008-2009 ஆம் கல்வி ஆண்டிற்கு 887 மாணவர்களில் 683 மாணவர்கள் மட்டுமே பதிவு

கிழக்கு பல்கலைக்கழத்திற்கு 2008-2009 ஆம் கல்வி ஆண்டில் அனுமதி பெற்றுள்ள 887 மாணவர்களில் 683 மாணவர்கள் மட்டுமே பதிவு செய்துள்ளனர்.
கலை,கலாச்சாரம் ,விஞ்ஞானம் ,வர்த்தக முகாமைத்துவம் ,விவசாயம் ,சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞானம் ஆகிய ஆறு பீடங்களுக்கும் பல்லைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் 887 மாணவர்கள் அனுமதிக்காக தெரிவாகியிருந்தனர்.
பல்கலைக்கழக நிர்வாகத் தகவல்களின் படி கலை ,கலாச்சார பீடத்திற்கு 355 மாணவர்கள் தெரிவாகியுள்ள போதிலும் 315 மாணவர்களே பதிவு செய்துள்ளனர்.
விவசாய பீடத்திற்கு தெரிவாகியுள்ள 84 மாணவர்களில் 45 மாணவர்களும் ,வர்த்தக ,முகாமைத்துவ பீடத்திற்கு தெரிவான 260 மாணவர்களில் 196 மாணவர்களும் ,விஞ்ஞான பீடத்திற்கு தெரிவாகியுள்ள 103 மாணவர்களில் 48 மாணவர்களும் பதிவு செய்துள்ளனர்.
சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞான (மருத்துவ) பீடத்திற்கு 85 மாணவர்கள் அனுமதிக்காக தெரிவு செய்யப்பட்டுள்ள போதிலும் 81 மாணவர்களே பதிவு செய்துள்ளனர். சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞான பீட விரிவுரைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வரும் அதேவேளை ஏனைய பீடங்களுக்கான விரிவுரைகள் எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளது.
0 Response to "கிழ.பல்கலைக்கழகம்: 2008-2009 ஆம் கல்வி ஆண்டிற்கு 887 மாணவர்களில் 683 மாணவர்கள் மட்டுமே பதிவு"
แสดงความคิดเห็น