13ஆவது திருத்த சட்டமூலம் முழுமையாக அமுல்படுத்த வேண்டும்-ஐரோப்பிய ஒன்றியம்
இலங்கையில் 13 ஆவது திருத்தச் சட்ட மூலம் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் சுட்டிக்காட்டியுள்ளது.
ஐரோப்பிய பாராளுமன்றத்தில் இன்றைய தினம் சமர்ப்பிக்கப்படவுள்ள இலங்கை தொடர்பான யோசனைத் திட்டத்தில் இந்தப் பரிந்துரை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கைக்கு ஜீ.எஸ்.பி. பிளஸ் சலுகைத் திட்டம் வழங்குவது தொடர்பான விவாதம் இன்றைய தினம் ஐரோப்பிய பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
தமிழ் மக்களின் நியாயமான தேவைகளைப் பூர்த்தி செய்வதில் இலங்கை அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டுமென ஐரோப்பிய ஒன்றியம் பரிந்துரை செய்துள்ளது.
கிரமமான முறையில் அதிகாரப் பகிர்வுத் தீர்வுத் திட்டங்கள் முன்வைக்கப்பட வேண்டுமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.இடைத்தங்கல் முகாம் நிலவரங்கள் குறித்து ஐரோப்பிய ஒன்றியம் சுட்டிக்காட்டியுள்ளது.
சர்வதேச கண்காணிப்பாளர்கள் இன்றி மனித உரிமை நிலவரங்கள் அபிவிருத்தி செய்வதில் பல்வேறு சிக்கல்கள் காணப்படுவதாக ஐரோப்பிய ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது.
அரசியல் தீர்வுத் திட்டமொன்றை ஏற்படுத்துவதற்கு சகல தமிழ் அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமெனவும் அந்த பரிந்துரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
0 Response to "13ஆவது திருத்த சட்டமூலம் முழுமையாக அமுல்படுத்த வேண்டும்-ஐரோப்பிய ஒன்றியம்"
แสดงความคิดเห็น